Published:Updated:

ஜாலியாக ஓரு அறிவியல் முகாம் !

ஏ.சிவரஞ்சனி படங்கள் :ச.இரா.ஸ்ரீதர்

ஜாலியாக ஓரு அறிவியல் முகாம் !

ஏ.சிவரஞ்சனி படங்கள் :ச.இரா.ஸ்ரீதர்

Published:Updated:

''சென்னை, தமிழ்நாடு பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தில், மாணவர்களுக்கான கோடைகால அறிவியல் முகாம் நடைபெற்றது. எட்டு முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் 75 மாணவர்கள் இதில் கலந்துகொண்டனர். 10-ம் ஆண்டாக நடைபெறும் இந்தப் பயிற்சி முகாமில் அறிவியல், கணிதம், சுற்றுச்சூழல், யோகா, வான சாஸ்திரம், மனநலம் போன்ற பல்வேறு, வகுப்புகளில் பங்கேற்று தங்களது தனித்திறனை வெளிப்படுத்தினார்கள் மாணவர்கள்.

ஜாலியாக ஓரு அறிவியல் முகாம் !

'இந்த முகாமுக்கு நான் முதல்முறையா வர்றேன். அறிவியல் பற்றிய பார்வையையும் சிந்தனையையும் நிறைய வளர்த்துக்கிட்டேன். கிளாஸ் ரூம் மாதிரி இல்லாம, ரொம்ப ஜாலியா இருந்துச்சு'' என்கிறார், அருண்பாலாஜி என்ற மாணவர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''யோகா, மனநலம் ஆகிய வகுப்புகள் புதுமையா இருந்துச்சு. செய்முறைப் பயிற்சி வகுப்புகளைப் பார்க்கும்போது, மேஜிக் மாதிரி இருந்துச்சு'' என்கிறார், மோனிகா என்ற மாணவி.

ஜாலியாக ஓரு அறிவியல் முகாம் !

''மாணவர்களுக்கு கேள்வி கேட்கும் மனப்பான்மையும் அறிவியல் தொழில்நுட்பங்கள் பற்றிய தெளிவும் வர வேண்டும். அதற்காகத்தான் ஒவ்வோர் ஆண்டும் இந்த அறிவியல் முகாம் நடத்தப்படுகிறது. இங்கே வரும் மாணவர்கள், எதிர்மறை எண்ணங்களைத் தவிர்த்து, நல்ல எண்ணங்கள் சிந்தனைகளுடன் செல்கிறார்கள். அதுதான் எங்கள் வெற்றி'' என்கிறார், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் செயல் இயக்குநர், அய்யம்பெருமாள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism