Published:Updated:

பென் டிரைவ்

பென் டிரைவ்

பென் டிரைவ்

பென் டிரைவ்

Published:Updated:
பென் டிரைவ்

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்வில், தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். இதில், வெற்றி பெறும் மாணவர்களுக்கு, அவர்களின் பெயரில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில், சேமிப்புக் கணக்கு துவங்கப்படும். அதன் வாயிலாக, ஒவ்வொரு மாதமும் 500 ரூபாய் வீதம் நான்கு ஆண்டுகளுக்கு கல்வி உதவித்தொகை, மத்திய அரசின் நிதியில் இருந்து மாநில அரசு செலுத்தும். தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 47 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்ற இந்தத் தேர்வில் 6,695 மாணவர்கள் வெற்றி பெற்றனர். இதில், தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியின் மாணவர்களான வல்லரசு, வசந்தகுமார், சாருமதி ஆகிய மூவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களுக்கு, தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் இனிப்பு வழங்கிப் பாராட்டினர்.  

 தேர்வு ஸ்வீட் எடு... கொண்டாடு!  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பென் டிரைவ்

 அமெரிக்காவைச் சேர்ந்த 14 வயது ஜாக் ஷெல்லன்ஷெலெகர் (Jake Schellenschlager) தன் எடையைவிட இருமடங்கு எடையைத் தூக்கி, 'அமெரிக்காவின் சோட்டா பீம்’ என்று நிரூபித்திருக்கிறார். 12 வயதாக இருந்தபோது, தனது தந்தை செய்யும் உடல் பயிற்சியைப் பார்த்து ஆர்வம்கொண்டார். 50 கிலோ எடை இருக்கும் ஜாக், 150 கிலோ எடையை  சர்வசாதாரணமாகத் தூக்கி சாதனை செய்கிறார். ''இரண்டு வருடங்களாக, ஒருநாள்கூட பயிற்சியை விடாமல் செய்கிறார். அந்த விடாமுயற்சியின் பலன்தான் இது' என்கிறார் பயிற்சியாளர் மைக்.

 சோட்டா பீம் மாதிரியே லட்டு பிடிக்குமா?

பென் டிரைவ்

 பல்வேறு துறைகளில் சாதனை படைத்து, உலகைத் தன் பக்கம் திருப்பும் நாடுகளில் சீனாவும் ஒன்று. ஏற்கெனவே, மணிக்கு 400 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும் புல்லட் ரயில், ஷாங்காய் நகரில் ஓடுகிறது. இப்போது, மணிக்கு 3,000 கி.மீ. வேகத்தில் பறக்கும் ரயில் தயாரிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகப் பேராசிரியர் டாக்டர் டெங் ஷியாங் என்பவர்,  இந்த ரயிலை வடிவமைத்துள்ளார். தொடக்கத்தில் மணிக்கு 400 கி.மீ. வேகத்தில் இயக்கப்படும் இந்த ரயில், படிப்படியாக வேகம் அதிகரிக்கப்படும் என்று சீனா தெரிவித்துள்ளது.

பென் டிரைவ்

 கண்டுபிடித்து 40 ஆண்டுகள் ஆகியும் மவுசு குறையாமல் இருக்கும் விளையாட்டுகளில் ஒன்று, ரூபிக்ஸ் க்யூப். ஹங்கேரியைச் சேர்ந்த ஆர்க்கிடெக் எர்னோ ரூபிக்ஸ், இதை அறிமுகப்படுத்தினார்.மன அழுத்தத்தைக் குறைக்கும் விளையாட்டுக் கருவியாக வந்த க்யூப், 1980-களில் மூளைக்கு சவால்விடும் விளையாட்டாக உலகம் முழுக்கப் பரவியது. உலக அளவில் அதிகம் விற்கப்படும் விளையாட்டுப் பொருள்களில் இதற்கு எப்போதும் சிறப்பிடம் உண்டு. இந்த க்யூப் விளையாட்டில் நாம எல்லாம் சூரர்கள் ஆச்சே!

பென் டிரைவ்

சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில், உலகிலேயே மாபெரும் அதிநவீன ஸ்டேடியம், சுமார் 3,402 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. சமீபத்தில், சவுதி மன்னர் அப்துல்லா திறந்துவைத்த இந்த விளையாட்டு அரங்கம், பல்வேறு விளையாட்டுகள் தொடர்பான பயிற்சி மையங்களுடன் அமைந்துள்ளது. 'கிங் அப்துல்லா ஸ்போர்ட்ஸ் சிட்டி’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த அரங்கத்தில், ஒரே சமயத்தில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் அமர்ந்து போட்டிகளை ரசிக்கலாம். இந்தப் புதிய விளையாட்டு அரங்கில் முதல் போட்டியாக, மன்னர் அப்துல்லாவின் பெயரில், ஜெட்டா-ரியாத் அணிகள் மோதும் அப்துல்லா கோப்பை கால்பந்து போட்டி விரைவில் நடைபெறுகிறது.

பூசணிக்காய் உடைச்சாச்சா?  

பென் டிரைவ்

ஸென் ஏர் நிறுவனம், போர் விமானப் பயிற்சிக்காக இரண்டு பேர் அமரக்கூடிய ஹெலிகாப்டரை உருவாக்கி உள்ளது. இதன் பெயர், வோலோகாஃப்டர். இதை, ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த க்றிஸ் ஹெயின்ட்ஸ் வடிவமைத்துள்ளார். வோலோகாஃப்டரின் இறக்கைகள், குறைவான உயரத்தில் 18 ரோட்டார் விசிறிகளை வைத்து  உருவாக்கப்பட்டுள்ளதால், தரையில் இருந்து எளிதாக எழும்பி, ஒரே இடத்தில் அந்தரத்தில் நிலையாக நிற்க உதவும். இதில், சென்னையை ஒரு ரவுண்டு அடிப்போமா!  

 சீனாவைச் சேர்ந்த சூய் ஜுகியோ (cui juguo) ஊசி முனையில் முட்டைகளை நிற்கவைக்கிறார். அது, நெருப்புக்கோழி முட்டையாக இருந்தாலும் சரி, சூய் ஜுகியோ கைக்குப் போனால்,  ஊசிமுனையில் 'டக்’ நின்றுவிடும்.  அதனால்தான், மனிதர் கின்னஸ் புத்தகத்திலும் இடம் பிடித்துவிட்டார். லாரி டிரைவரான ஜுகியோ, இரவில் தூக்கத்தைச் சமாளிக்க முட்டைகளை ஊசிமுனையில் நிற்கவைப்பார். இப்படியே சில ஆண்டுகள் கடின முயற்சி மேற்கொண்டார். இப்போது, 6 நிமிடங்களில் முட்டையை ஊசி முனையில் நிற்கவைத்துவிடுகிறார் .கெத்தான... சாதனைதான்!

பென் டிரைவ்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism