Published:Updated:

அம்மு செல்லம்...புஜ்ஜி செல்லம் !

முனைவர் ஆ.குமரவேள் ஓவியர் : பாலு

அம்மு செல்லம்...புஜ்ஜி செல்லம் !

முனைவர் ஆ.குமரவேள் ஓவியர் : பாலு

Published:Updated:
அம்மு செல்லம்...புஜ்ஜி செல்லம் !

மனிதனுக்கு மனிதன்தான் அன்பு செலுத்த முடியும் என்பதில்லை. நம்மைச் சுற்றி இருக்கும் எத்தனையோ உயிர்களிடம் பாசம் காட்டலாம். நாய், பூனை, கிளி என நாம் வளர்க்கும் செல்லப் பிராணிகளால் நமக்குக் கிடைப்பது மகிழ்ச்சி மட்டுமா? பாதுகாப்பு, மனரீதியான ஆரோக்கியம் எனச் சொல்லிக்கொண்டேபோகலாம். அத்தகைய செல்லங்களைப் பற்றி பல ஸ்பெஷல் தகவல்கள் இருக்கு. முதலில் நாயைப் பற்றித் தெரிஞ்சுக்கலாம்.

அம்மு செல்லம்...புஜ்ஜி செல்லம் !

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நீங்க நடக்கும்போது, உங்க கால் விரல்கள், பாதம் எல்லாம் பூமியில் படும். இதுக்கு ப்ளேன்டிகிரேடு (Plantigrade) நடை என்று பெயர். ஆனால், நாய் நடக்கிறப்ப கவனிங்க. விரல்கள் மட்டும்தான் பூமியில் படும். இதுக்கு, டிஜிட்டிகிரேடு (Digitigrade) வாக்கிங் என்று பெயர். இந்த டிஜிட்டிகிரேடு நடையில் நல்ல க்ரிப் கிடைக்கும். அதேநேரம் நடக்கிற சத்தம் வெளியே கேட்காது. அம்மாகிட்டே இருந்து எஸ்கேப் ஆகி, வெளியே விளையாடப் போகும்போது, நீங்களும் இப்படி நடந்திருப்பீங்க. ஆரம்பக் காலத்தில் நாய் காட்டுவாசி. வேட்டையாடித்தான் சாப்பிடணும். இரையைப் பிடிக்கிறப்ப, சத்தம் காட்டாமல் பின்னாடியே போய்த் தாக்குவதற்கு இயற்கை தந்த வரம். இப்போ, நாய் நாட்டுவாசி ஆகிருச்சு. முன்னை மாதிரி இரையைத் தேட வேண்டியது இல்லை. உங்களுக்குச் சாப்பிட இல்லைன்னாலும், உங்க செல்ல நாய்க்கு வெச்சிருவீங்க.

அம்மு செல்லம்...புஜ்ஜி செல்லம் !

நம்ம உடம்பும், நாய் உடம்பும் பல விஷயங்களில் ஒரே மாதிரி இருக்கு. சில வகையில் வேற மாதிரி இருக்கு. நாய்க்கு மோப்பசக்தி ரொம்ப அதிகமா இருக்கிறது ஏன் தெரியுமா?

நாயின் மூளையில், 'ஆல் ஃபேக்டரி பல்ப்’ என ஒரு பகுதி இருக்கு (பல்பா..? எத்தனை வாட்ஸ்?’னு கேட்கக் கூடாது).

இந்த பல்ப் தான் மோப்பம் பிடிக்கிற வேலையைச் செய்யுது. நீங்க வெளியே போய்ட்டு வீட்டுக்குள்ளே வந்ததும் 'அம்மா, இன்னிக்கு வெஜிடபிள் பிரியாணியா? வாசனை மூக்கைத் துளைக்குதே!’ என்று கேட்பீங்க. ஆனா, உங்க செல்லம், தெருமுனையிலேயே இதைத் தெரிஞ்சுக்கும். இந்த ஆல் ஃபேக்டரி பல்ப், சாப்பாட்டை வாசனை பிடிக்க மட்டும் இல்லாமல், பல விஷயங்களிலும் பயன்படுது.

அம்மு செல்லம்...புஜ்ஜி செல்லம் !

'ஆத்துல வெள்ளம் கரைபுரண்டு ஓடினாலும் நாய் நக்கிதான் சாப்பிடும்’ என்று ஒரு பழமொழி இருக்கு. இதைப் பலரும் கேலிக்காக யூஸ் பண்றாங்க. ஆனால், நாய்க்கு இயற்கை தந்த வரங்களில் அதுவும் ஒண்ணு.

உங்க செல்லம், நாக்கை நீட்டிச் சாப்பிடும்போது கொஞ்சம் பாருங்க. நாக்குக்கு நடுவில் நீளமா, குறுகலாக ஒரு பள்ளம் இருக்கும். இதனால், நாய் தண்ணீர் குடிக்கும்போது உறிஞ்சும் அவசியம் கிடையாது. தண்ணிக்குள்ளே நாக்கைத் தள்ளினதும், நாக்கில் இருக்கும் பள்ளத்தின் வழியா... தண்ணி வயித்துக்குப் போயிரும்.

அம்மு செல்லம்...புஜ்ஜி செல்லம் !

 அதிக மோப்பசக்தி உடைய நாய்களை போலீஸ் டிபார்ட்மென்ட் துப்பறியும் வேலையில் பயன்படுத்துறாங்க. ஒரு கொலையோ, கொள்ளையோ நடந்தா, அந்த இடத்துக்கு நாயைக் கூட்டிட்டு வருவாங்க. அங்கே வந்ததும் நாயின் மூளையில் இருக்கும் ஆல் ஃபேக்டரி பல்ப் பிரகாசமாக எரிய ஆரம்பிச்சிரும். அங்கே இருக்கும் குற்றவாளிகளின் வியர்வை வாடையைப் பிடிக்கும். அவங்களைத் தேடி ஓட ஆரம்பிச்சிரும். வேகமா ஓடும்போதும் டிஜிட்டிகிரேடு வாக்கிங்தான்.

அம்மு செல்லம்...புஜ்ஜி செல்லம் !

 'நாய் வாலை நிமிர்த்த முடியாது’னு சொல்றாங்களே ஏன்? அதன் வால் பகுதியில் இருக்கும் தசைகளில் நெகிழ்வுத்தன்மை  அதிகம். அந்த நெகிழ்வு எப்பவும் குறையாது. அந்தப் பகுதியில் இருக்கிற எலும்புகளுக்கு 'காக்சிஜியல் வெர்டிப்ரா’ என்று பெயர். அதனோட அமைப்பும், வளைவாதான் இருக்கும். வளைஞ்சு மீண்டும் நேராக ஆகாது, உங்க செல்லம் வேகமா ஓடும்போது உடலை பேலன்ஸ் பண்றதுக்கு அது ரொம்பவும் உதவியா இருக்கு.

அம்மு செல்லம்...புஜ்ஜி செல்லம் !

 நாய்க்கு நன்றி உணர்ச்சி அதிகம்னு சொல்வாங்க? ஏன்னா... மூளையில், உணர்வுபூர்வமான நடவடிக்கைகளைக்  கட்டுப்படுத்தும் பகுதிக்குப் பெயர், லிம்பிக் சிஸ்டம். அதில் இருக்கும் முக்கியமான பகுதிகள், ஹிப்போகேம்பஸ் மற்றும் அமிக்டலா. உங்க செல்லத்துக்கு மூளையில் இருக்கும் உணர்ச்சிவசப்படுத்தும் பகுதிகளான ஹிப்போ கேம்பஸ், அமிக்டலா போன்றவை நல்லா டெவலப் ஆகியிருக்கு. அதனால்தான் இந்த விசுவாசம். இப்போ இருக்கிற மனுஷங்களுக்கு, இது நிறையவே டெவலப் ஆகணும்.

அம்மு செல்லம்...புஜ்ஜி செல்லம் !

 விசுவாசம் என்றால் என்ன? அது ஒரு வகையான வாசம்தான். நமக்கு உதவி செய்தவங்களை மறக்கக் கூடாது. உண்மையா இருக்கணும் என நினைக்கிற மனதின் வாசம்தான் விசுவாசம்.

சரி, உங்க செல்லம் சாப்பிடும் நேரம் வந்திருச்சு. குரைச்சுக் கூப்பிடுறாரு. போய்க் கவனிங்க.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism