Published:Updated:

வலை உலா - இது நம்ம தேடல் இயந்திரம் !

சைபர்சிம்மன் படங்கள் : ப.சரவணகுமார்

வலை உலா - இது நம்ம தேடல் இயந்திரம் !

சைபர்சிம்மன் படங்கள் : ப.சரவணகுமார்

Published:Updated:

தேடல் இயந்திரம் (search engine) என்றவுடன் கூகுள் நினைவுக்கு வரும். ஆனால், இணைய உலகில் சூப்பரான மாற்றுத் தேடல் இயந்திரங்கள் பல உண்டு. அவற்றில் கல்வியாளர்கள் கொண்டாடும் 'வோல்ஃப்ராம் ஆல்பா’வைப் (http://www.wolframalpha.com)  பற்றி பார்ப்போமா?

கூகுள், எல்லோருக்குமான தேடல் இயந்திரம். வோல்ஃப்ராம், மாணவர்களுக்கானது. பள்ளிச் சிறுவர்கள் முதல் ஆய்வு மாணவர்கள் வரை அனைவருக்கும் பயன்தரக்கூடியது. கணிதமும் அறிவியலும் இதன் கோட்டை. இது, வழக்கமான கூகுள் போன்ற தேடலில் இருந்து மாறுபட்டது. இது, அடிப்படையில் தேடல் இயந்திரமே அல்ல. கம்ப்யூட்டேஷனல் இன்ஜின். அதாவது, கணக்கீட்டு இயந்திரம். கணிதவியல் சமன்பாடுகளை அடிப்படையாகக் கொண்டது.

வலை உலா -  இது நம்ம தேடல் இயந்திரம் !

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கூகுளில் தேடும்போது, முடிவுகள் பட்டியலிடப்படுவது போல இதில் பட்டியல் வராது. தேடலுக்கான பதில், ஒரே பக்கத்தில் தோன்றும். அதாவது, கூகுள் போல தேடப்படும் குறிச்சொற்கள் தொடர்பான பொருத்தமான இணையதளங்களைப் பட்டியல் இடாது. அதற்குப் பதிலாக, உங்கள் தேடலுக்கான தகவல்கள் அனைத்தையும் ஒன்று திரட்டி, அளிக்கும்.

ஓர் உதாரணம்... விஞ்ஞானி ஐசக் நியூட்டன் பற்றி நீங்கள் தேடினால், பௌதீக விஞ்ஞானி எனும் அறிமுகத்துடன் துவங்கும். நியூட்டனின் முழுப்பெயர், பிறந்த ஆண்டு, பிறந்த இடம் போன்ற விவரங்கள், அவரது விஞ்ஞானப் பங்களிப்பு என அனைத்தும் ஒரே பக்கத்தில் ரத்தினச் சுருக்கமாக இருக்கும். நியூட்டன் பற்றிய உங்கள் தேடலின் நோக்கம் எதுவோ, அதற்கேற்ப, மேற்கொண்டு தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம். நியூட்டன் புகைப்படம் மற்றும்  வரைபட விவரமும் கிடைக்கும்.

வலை உலா -  இது நம்ம தேடல் இயந்திரம் !

பத்தி பத்தியாகப் படிக்காமல், நேர்த்தியான சில வரிகளில் நியூட்டனைத் தெரிந்துகொள்ளலாம்.  நியூட்டனின் தேற்றங்கள் மற்றும் கோட்பாடுகள் பற்றி அறியலாம், அதற்குறிய இணைப்புகளை க்ளிக் செய்து விரிவான ஆய்வில் ஈடுபடலாம்.

தேடப்படும் பொருளுக்கு ஏற்ப தகவல்கள் தோன்றும் விதமும் மாறுபடும். எடுத்துக்காட்டாக,  மலைப்பாம்பு பற்றித் தேடும்போது, அதன் இதயம் 19 கிராம், மனித இதயம் 300 கிராம் எனும் ஒப்பீட்டுத்  தகவல் கிடைக்கும். 'பைத்தான்’ பற்றித் தேடும்போது அது மலைப்பாம்பாகத்தான் இருக்க வேண்டும் என்று இல்லை, கம்ப்யூட்டர் புரோகிராமிங் மொழியான பைத்தானையும் குறிக்கலாம். தேடல் முடிவுகளின் கீழே பார்த்தால், குறிப்புகளுக்கான மூலத் தகவல்கள் இருக்கும்.

வலை உலா -  இது நம்ம தேடல் இயந்திரம் !

வோல்ஃப்ராம் ஆல்பாவில் எல்லாத் தகவல்களையும் தேடலாம் என்றாலும், கணிதம் மற்றும் அறிவியல் தொடர்பான கேள்விகளுக்குப் பதில் அளிப்பதுதான் இதன் தனிச்சிறப்பு. சாதாரண அல்ஜீப்ரா ஃபார்முலாவில் துவங்கி, ஐன்ஸ்டீனின் சார்பியல் கொள்கை வரை விரிவான பதில்கள், எளிதாகப் புரியும் வகையில் இருக்கும்.

இந்தத் தேடல் இயந்திரத்தைப் பழகிக்கொண்டால், ஐ.ஐ.டி அல்லது எம்.ஐ.டி-யில் மேற்படிப்புப் படிக்கும்போது, ஆழமான தகவல்களைத் தேட உதவியாக இருக்கும்.

வலை உலா -  இது நம்ம தேடல் இயந்திரம் !
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism