என்.மல்லிகார்ஷுனா
அந்த வீதியில் வீடுகள், கடைகள், ஹோட்டல்கள் இருக்கின்றன. அவற்றின் பால்கனிகள், ஜன்னல்கள், வாசல்களில் நின்றுகொண்டும் அமர்ந்தபடியும் அவர்கள் இருக்கிறார்கள். நாள்கணக்கில், மாதக் கணக்கில் அசையாமல் இருக்கிறார்கள்.
'இவங்க நகரவே மாட்டாங்களா...’ என்று யோசித்தவாறு அருகே சென்று பார்க்கும்போதுதான், அத்தனையும் ஓவியங்கள் எனத் தெரிகின்றன.

தெரு ஓவியக் கலைஞரான பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பேட்ரிக் காமேசி (Patrick Commecy), ஒரு குழுவை உருவாக்கி, பொதுமக்கள் அதிகம் நடமாடும் தெருக்களைத் தேர்வு செய்து, அங்குள்ள வீடு, கடைகளின் சுவர்களில் 3D பாணியிலான ஓவியங்களை வரைகிறார்.
சற்று தூரத்தில் இருந்து பார்க்கும்போது, உண்மையான ஆட்கள் பால்கனியில் நின்று பேசிக்கொள்வது போலவும், ஜன்னல் வழியே எட்டிப் பார்ப்பது போலவும் இருக்கின்றன. மரங்கள், பறவைகள் எனத் தத்ரூபமாக வரைந்து அசத்தி இருக்கிறார்.

பல்வேறு நகரங்களுக்குச் சென்று, வீட்டுச் சுவர்களுக்குத் தனது ஓவியங்களால் புத்துயிர் தரும் பேட்ரிக்கின் புகழ், நாடு முழுவதும் பரவிவருகிறது.