Published:Updated:

சுட்டி ஸ்டார் நியூஸ்...

சுட்டி ஸ்டார் நியூஸ்...

சுட்டி ஸ்டார் நியூஸ்...

சுட்டி ஸ்டார் நியூஸ்...

Published:Updated:

அந்தரத்தில் சாப்பிடலாம்! 

சுட்டி ஸ்டார் நியூஸ்...

சீனாவின் ஹீபே மாநிலத்தின் மலைப் பகுதியில் உள்ளது, ஃபேங்வேங் உணவகம்(Fangweng Restaurant). செங்குத்தான மலையின் மேற்பரப்பில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த உணவகத்தின் ஜன்னல் வழியே பார்த்தால், அந்தரத்தில் இருப்பது போல தோன்றும். மலைவாழ் மக்களின் இருப்பிடமாக இருந்த இந்த இடம், இப்போது உணவகமாக மாற்றப்பட்டுள்ளது. வித்தியாசமாகச் சாப்பிட நினைப்பவர்கள், இங்கே மலையின் அழகை ரசித்துக்கொண்டே சாப்பிடலாம்.

சிறிய குரங்குகள்!

சுட்டி ஸ்டார் நியூஸ்...

உலகிலேயே மிகச் சிறிய குரங்கு, மார்மோஸெட்டுகள் (Marmoset). இதன் மொத்த நீளமே எட்டு அங்குலம்தான். மிகவும் அறிவுத்திறன் உடையவை. மனிதர்களைப் போலவே 30 நிமிடங்கள் தொடர்ந்து பேசும் திறன் இவற்றுக்கு உண்டு. மற்ற விலங்கினங்கள் எழுப்பும் குரல் ஓசையில் இருந்து வேறுபட்டு, மனிதக் குரலைப் போல உள்ளது. சிம்பன்ஸி, மனிதக் குரங்குகள் போன்ற மற்ற குரங்குகளைவிட வேறுபட்ட தன்மையுடன் இவை உள்ளன.

அர்த்தம் தெரியுமா?

கதர்: கதர் என்பது அரேபியச் சொல். இதற்கு, கௌரவம் என்று பொருள். ஒரு சந்திப்பின்போது காந்திக்கு, முகம்மது அலி ஜின்னா ஒரு கைத்தறி ஆடையை அணிவித்தார். அப்போது, ''இதைக் கதராக (கௌரவமாக) ஏற்றுக்கொள்ள வேண்டும்'' என்றார். அன்று முதல் இந்த வகைத் துணிகள், 'கதர்’ எனப்படுகிறது.

சுட்டி ஸ்டார் நியூஸ்...

தாலாட்டு: அழும் குழந்தைகளை அம்மாக்கள் தாலாட்டுப் பாடி உறங்கவைப்பது உண்டு. தாலாட்டு என்ற சொல்... தாலு, ஆட்டு என்ற இரு சொற்களின் சேர்க்கை. தாலு என்றால், நாக்கு. நாவை அசைத்து அல்லது ஆட்டிப் பாடும் பாட்டு என்று பொருள்.

தேன் காளான்!

சுட்டி ஸ்டார் நியூஸ்...

ஒரு தாவரம் அல்லது விலங்கு, அது தோன்றிய காலம், வாழும் காலம், அது பரவியிருக்கும் பரப்பளவு ஆகியவற்றின் அடிப்படையில், மிகப் பெரிய உயிரினம் (Largest organisms)  என்று உயிரியல் வல்லுனர்கள் வரையறுப்பார்கள். அப்படி தாவர வகைகளில் மிகப் பெரிய உயிரினம் எனப்படுவது, தேன் காளான். இதன் அறிவியல் பெயர், அர்மிலேரியா (Armillaria). உலகில் நீண்ட காலம் வாழும் உயிரினம் என்றும் சொல்லப்படுகிறது. அமெரிக்கக் காடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட இந்தத் தேன் காளான், பல ஆயிரம் ஆண்டுகள் வாழுமாம். கிட்டத்தட்ட ஐந்தரை சதுர கிலோமீட்டர்கள் சுற்றளவுக்கு விரிந்து பரந்துள்ளது.

வானவில் மலை!

சுட்டி ஸ்டார் நியூஸ்...

சீனாவின் வடமேற்கே உள்ள லின்சே மற்றும் சூனானில் உள்ளது, ஜாங்கியே டான்க்ஸியா  (Zhangye Danxia) மலை. பூமியின் மேல்ஓடு இடம்பெயர்ந்ததால் ஏற்பட்ட பாறை அடுக்குகளே, இப்படி பல்வேறு வண்ணங்களில் நேர்த்தியாக அமைந்துள்ளது. பச்சை, மஞ்சள், நீலம் மற்றும் பல்வேறு வண்ணங்களில் உள்ளது, இந்த டான்க்ஸியா. 10 லட்சம் வருடங்களுக்கு மேலாகத் திரண்டதே இந்தக் கற்கள். 10 ஆயிரம் வருடங்களாகப் பெய்த மழையும் காற்றும் அழகிய பள்ளத்தாக்குகளை உருவாக்கி உள்ளன. 2010 முதல், யுனெஸ்கோ (UNESCO) நிறுவனம் இதை உலக மரபுரிமை இடமாக அறிவித்துள்ளது.

பொம்மைத் தீவு!

சுட்டி ஸ்டார் நியூஸ்...

டான் ஜூலியன் என்பவர், மெக்ஸிகோ அருகே ஒரு தீவை வாங்கினார். ஒருநாள் ஒரு சிறுமி, தனது பொம்மையை ஜூலியனின் வீட்டில் விட்டுச் சென்றுவிட்டாள். அந்த பொம்மையை தீவின் ஒரு மரத்தில் கட்டித் தொங்கவிட்டார். அப்போது ஒரு யோசனை தோன்றியது. அதன்படி, குடோனில் இருந்த பழைய மற்றும் உடைந்த பொம்மைகளைச் சேகரித்து, தீவு முழுக்க கட்டிவைத்தார். இப்போது, மெக்ஸிகோவின் முக்கிய சுற்றுலாத்தலமாக அந்தத் தீவு மாறிவிட்டது. மரத்தில் தொங்கும் பொம்மைகள் பார்க்கத் திகிலாக இருந்தாலும் த்ரில்லுடன் ரசிக்கிறார்கள்.