Published:Updated:

கண்னைக் கட்டி காட்டுல விடுங்க !

அசத்தும் அண்ணன் தங்கை ஞா.சுதாகர் படங்கள் : அ.ஷெஃப்ரி தேவ்

கண்னைக் கட்டி காட்டுல விடுங்க !

அசத்தும் அண்ணன் தங்கை ஞா.சுதாகர் படங்கள் : அ.ஷெஃப்ரி தேவ்

Published:Updated:

எப்போதும் செய்யும் வேலைகளோடு கொஞ்சம் அதிக வேலை சேர்ந்துட்டாலே, திக்குமுக்காடி  'கண்ணைக் கட்டிக் காட்டில் விட்ட மாதிரி இருக்கு’ என்போம். ஆனால், ''எங்களை கண்ணைக் கட்டி காட்டில் விட்டாலும் கவலையில்லை'' என்கிறார்கள் கோவையைச் சேர்ந்த பிரணவ் சிங் மற்றும் பிருதுஷா.

ஓவியம் வரைவது, நீச்சல் அடிப்பது, பொருள்களைத் தொட்டுப் பார்த்து வண்ணங்களைச் சொல்வது என பல விஷயங்களைக் கண்களைக் கட்டிக்கொண்டே செய்து அசத்துகிறார்கள்.

இவர்களின் அம்மா, லேகா முத்துராஜன், ''பிரணவ் எட்டாம் வகுப்பு படிக்கிறான். அவனுக்கு கற்றலில் குறைபாடு இருந்தது. எனவே, மூளைப் பயிற்சிக்கான வகுப்புக்கு (ஙிக்ஷீணீவீஸீ ஜிக்ஷீணீவீஸீ றிக்ஷீஷீரீக்ஷீணீனீனீமீ) அனுப்பினோம். இடது, வலது மற்றும் மத்திய மூளைப் பகுதி தூண்டப்பட்டு செயல்பாடுகளில் முன்னேற்றம் ஏற்படுத்தும் பயிற்சி அது. தொடு உணர்வின் மூலமாக மூளையின் இயக்கத்தோடு தொடர்புகொள்ள முடியும். பிரணவ்வின் தங்கை பிருதுஷாவையும் அதில் சேர்த்தோம்' என்கிறார்.

'அங்கே ஒரே நாள்தான், காலை முதல் மாலை வரை பயிற்சிகள் அளித்தார்கள். உதாரணமாக, வலது  இடது கைகளை எதிரெதிர் திசைகளில் சுழற்றுவது, இடது மற்றும் வலது மூளைப் பகுதியை ஒருங்கிணைக்க உதவும் பயிற்சி. இதன் மூலம் உடலின் இடது மற்றும் வலது பாகங்களை சமமாக இயக்கலாம். இதுபோல இன்னும் சில பயிற்சிகள் அளிக்கப்பட்டது. பிறகு, ரம்மியமான இசைக்கு ஆழ்ந்த தியானத்தில் இருந்தோம். அவ்வளவுதான்... பயிற்சிகள் முடிந்து திரும்பிவிட்டோம்' என்கிறார் பிரணவ்.

கண்னைக் கட்டி காட்டுல விடுங்க !

தொடரும் பிருதுஷா, 'நான் நான்காம் வகுப்புப் படிக்கிறேன். இந்தப் பயிற்சியை ஆறு மாதக் குழந்தைகளாக இருக்கும்போதிருந்தே செய்யலாம். ஆனால், 12 வயதுக்கு மேல் செய்ய முடியாது. காரணம், அதன் பிறகு மூளை நன்கு வளர்ச்சி பெற்றுவிடும். இந்தப் பயிற்சிகளைத் தொடர்ந்து 47 நாட்கள் செய்தால், வாழ்நாள் முழுக்க மறக்காது. அந்தப் பயிற்சிக்குப் பிறகு, கண்களை மூடிக்கொண்டே எனது நண்பர்கள் அனைவரையும் சரியாகக் கண்டறிந்தேன்' என்று ஆச்சயப்படுத்துகிறார்.

''இப்போ, எங்களால் கண்களைக் கட்டிக்கொண்டே படம் வரைய முடியும், ஆட்களை அடையாளம் காண முடியும். புத்தகத்தில் இருக்கும் நிறங்களையும் சொல்வோம்'' என்கிறார் பிரணவ்.

கண்னைக் கட்டி காட்டுல விடுங்க !

பிரணவ் கண்களை பிருதுஷா கட்டினார். பிறகு, எண்கள் கொண்ட வரைபடத்தை பிருதுஷா கையில் பிடித்துக்கொள்ள, அதில் உள்ள எண்களைச் சரியாகக் கூறினார். கலரிங் புக் ஒன்றை எடுத்து, ஒரு பக்கத்தைக் காட்டினோம். ஒரு படத்தைத் தொட்டுப்பார்த்தே, அது மலர் என்பதையும், அதன் நிறங்களையும் சொன்னார். கலைத்துவைத்த க்ரையான்களில் சரியான நிறத்தை எடுத்து, அந்தப் படத்தை ஓவியமாக வரைந்தார்.

அடுத்து, பிருதுஷாவின் முறை. ''நான் ரெடி'' என்று கண்களைக் கட்டிக்கொண்டு அமர்ந்தார். மூன்று பேர் ஓர் அட்டையை மாற்றி மாற்றி வைத்திருந்து இறுதியில் அது யாரிடம் இருக்கிறது என்று கேட்டதும் சரியாகச் சொல்லி ஆச்சரியப்படுத்தினார். பிறகு, வெவ்வேறு அட்டைகளின் நிறங்களைச் சொன்னார்.

கண்னைக் கட்டி காட்டுல விடுங்க !

''இண்டோர் போதும்... வாங்க, அவுட்டோர் போகலாம்'' எனச் சொல்லி நீச்சல் உடையில் வந்தார். பிரணவ், பிருதுஷாவின் கண்களைக் கட்டி நீச்சல் குளத்தின் ஒரு பக்கம் நிற்கவைக்க, மிகத் துல்லியமாகக் குதிக்கும் இடத்துக்கு வந்து குதித்தார். நீச்சல் குளத்தில் இருந்த பந்துகளை, அங்கிருந்த வேறு சுட்டிகளுக்கு தரச் சொல்ல, பெயர் வாரியாக மிகச் சரியாகக் கண்டறிந்து அவர்களை நோக்கித் தூக்கி எறிந்தார்.

இப்படி, ஓர் அறையில் எந்த இடத்தில் எந்தப் பொருளை வைத்தாலும் கண்களைக் கட்டிக்கொண்டே  கண்டறிவது, உணவு பரிமாறுவது, ஜூஸ் தயாரிப்பது என செய்துகொண்டே இருந்தார்.

'மனிதனின் மூளை அற்புதமானது. அதைச்  சரியாகப் பயன்படுத்தினால், எத்தனையோ ஆச்சர்யங்களை நிகழ்த்தலாம். அப்படித்தான் இந்த கண்களைக் கட்டிச் செய்யும் விஷயங்களும். ஒவ்வொரு நிறத்துக்கும் ஒரு வெப்பம், வாசம், தன்மை உண்டு. அவைதான் எங்களுக்குக் காட்டிக்கொடுக்கும். திறந்தவெளியில் ஒரு விஷயத்தைக் கண்டறிவது சற்று கடினம். காரணம், பலவித வாசனை, காற்றின் வேகம் ஆகியவை குழப்பும். அதுவே, ஓர் அறைக்குள் செய்யும்போது எளிதாக இருக்கும். ஜலதோஷம் பிடித்த நாட்களிலும் இதைச் செய்வது கடினம்'' என்கிறார் பிரணவ்.

கண்னைக் கட்டி காட்டுல விடுங்க !

''பயிற்சிகளைத் தினமும் செய்வது முக்கியம்.  முதலில் கடினமாக இருக்கும். நான் தினமும் விளையாட்டாகச் செய்யச் செய்ய, இப்போ எல்லாமே ஈஸியா மாறிடுச்சு'' என்கிறார் பிருதுஷா.

வகுப்பில் இருக்கும்போதே வாகனம் நிறுத்தும் இடத்தில் என்ன நிற வாகனம் வருகிறது என்பதைக் கண்டறிய முடியும் எனச் சொல்லி பிரமிக்கவைக்கிறார் பிரணவ். ''இப்போதைக்கு இதையெல்லாம் விளையாட்டாகவே செய்கிறோம். இதில் இன்னும் நன்றாகப் பயிற்சி எடுத்து, ஓவியத் திறனையும் வளர்த்துக்கொள்ளக் கற்றுக்கொண்டால், கண்களை மூடிக்கொண்டே ஒருவரை அப்படியே வரையலாம். பின்னால் ஒருவர் வரும்போதே, அது யார் என்பதைக் கூறலாம். அதுக்கான முயற்சியில் இறங்கப்போகிறோம்' என்கிறார் பிரணவ்.

இவர்கள் கண்கள் மூடி செய்யும் சாகசங்களை நாம் கண்கள் விரியப் பார்க்கலாம்!