''ஹலோ ஜீபா... மழலையர் பள்ளியும் நர்சரி எனப்படுகிறது, பூச்செடிகள் விற்கும் இடமும் நர்சரி என்று அழைக்கப்படுகிறதே ஏன்?''

- ஜி.இனியா, கிருஷ்ணகிரி.

''நர்சரி (Nursery) என்பதற்கு நாற்று மேடை என்று பொருள். ஒரு செடிக்கு, நாற்று நிலை என்பது குழந்தைப் பருவம் போல. அப்போது, அந்தச் செடியை மிகவும் கவனமாகப் பராமரித்து, ஓர் இடத்தில் இருந்து இன்னோர் இடத்துக்கு மாற்றுவார்கள். குறிப்பாக, வணிகரீதியாக விற்பனை செய்யப்படும் பூச்செடிகள், அழகுச் செடிகள் உருவாக்கும் இடங்களை நர்சரி என்பார்கள். கே.ஜி. வகுப்புகளில் படிக்கும் குழந்தைகளுக்கும் மிகக் கவனமாக ஆரம்பக் கல்வியை அளித்து, அடுத்த வகுப்புக்கு உயர்த்த வேண்டும். அதனால், அழகுக்காக அந்தப் பெயர். கிண்டர்கார்டன், பிரிஸ்கூல் (preschool) எனக் குட்டிக் குழந்தைகளுக்கான பள்ளிகளுக்கு வைக்கப்படும் அனைத்துப் பெயர்களுமே, அழகானவையே.''

''ஹாய் ஜீபா... டைட்டானிக் கப்பலை உருவாக்கிய நாடு எது?''

- எஸ்.நந்தகுமார், அயோத்தியாப்பட்டணம்.

''ஆர்எம்எஸ் டைட்டானிக் (RMS Titanic) எனப்படும் இந்தக் கப்பல், வட அயர்லாந்தின் பெல்ஃபாஸ்ட் (Belfast) நகரில் உருவாக்கப்பட்டது. 'உலகின் மிகப் பெரிய நீராவிக் கப்பல், நவீன வசதிகளுடன் சிறந்த தொழில்நுட்பமும் நிறைந்த இந்தக் கப்பல், மிகவும் பாதுகாப்பானது’ என்றெல்லாம் விளம்பரம் செய்யப்பட்டது. இங்கிலாந்தில் உள்ள சௌதாம்ப்டன் (Southampton) துறைமுகத்திலிருந்து நியூயார்க் நோக்கி, 1912 ஏப்ரல் 10-ல் தனது முதல் பயணத்தைத் தொடங்கியது. ஆனால், அந்தப் பயணத்திலேயே ஏப்ரல் 14 நள்ளிரவில் பனிப்பாறையில் மோதி, கடலில் மூழ்கிவிட்டது. 1500-க்கும் மேற்பட்ட பயணிகள் உயிர் இழந்து, சோக வரலாறாக மாறிவிட்டது டைட்டானிக்.''

''டியர் ஜீபா... மனிதர்களுக்கு ஏன் ஹார்மோன் மாற்றம் ஏற்படுகிறது?''

- அ.அசீரா, பெரம்பலூர்

''மனிதர்களுக்கு மட்டுமின்றி எல்லா உயிரினங்களுக்குமே ஹார்மோன் மாற்றம் ஏற்படும் அசீரா. நம் உடலின் ஒவ்வொரு பகுதியிலும் உயிரணுக்கள் இருக்கு. அந்த உயிரணுக்கள் வெளியிடும் வேதித் திரவமே, இயக்குநீர் என்கிற ஹார்மோன் (Hormone) இது, உடலில் ஓர் இடத்திலிருந்து இன்னோர் இடத்துக்குக் கடத்தப்படும். இந்த ஹார்மோன்தான், அந்தந்த வயதுக்கேற்ற உடலின் வளர்சிதை மாற்றம், உணர்வு மாற்றங்களுக்குக் காரணமாக உள்ளன. தாவரங்களில் சுரக்கும் இயக்குநீரை Plant Hormone என்பார்கள்.''

''ஹலோ ஜீபா... டிஸ்னி பிரின்ஸஸ் எத்தனை பேர்?''

- க.நிவேதா, புதுச்சேரி.

''டிஸ்னி பிரின்ஸஸ் (Disney Princess) எனப்படும் அந்த அழகு இளவரசிகள், இப்போதைக்கு 11 பேர். ஸ்னோ ஒயிட், சின்ட்ரெல்லா வரிசையில், 2012-ல் வெளிவந்த 'பிரேவ்’ படத்தின் நாயகி, மெரிடா (Merida) ஆகியோர் இதில் அடக்கம். (இந்தப் பட்டியலில் இடம்பெற அன்னா, எல்சா என்ற இரண்டு பேர் வெயிட்டிங்கில் இருக்காங்க). வால்ட் டிஸ்னி நிறுவனத்தில், டிஸ்னி கன்ஸ்யூமர் புராடெக்ஸ் (Disney Consumer Products) என்று ஒரு பிரிவு உள்ளது. பிரபல டிஸ்னி கதாபாத்திரங்களை, பொருள்களாகத் தயாரிக்கும் பிரிவு இது. இதன் தலைவராக ஆண்டி மூனே (Andy Mooney) என்பவர் 1990-ல் பதவியேற்றார். டிஸ்னி நிறுவனம் தயாரித்த சினிமா, தொலைக்காட்சித் தொடர், காமிக்ஸ் போன்றவற்றில் வெவ்வேறு கதைகளில் வருகிற நாயகிகளை ஒருங்கிணைத்தார். அவர்களே டிஸ்னி பிரின்ஸஸ். அந்த இளவரசிகளின் உருவம் தாங்கிய பொருள்கள், ஆடைகள், பொம்மைகள் இப்போது விற்பனையில் சக்கை போடுபோடுகின்றன.''

''டியர் ஜீபா... உடம்பில் வலி ஏற்படுவதை எப்படி உணர்கிறோம்?''

- சு.மித்ரா கிருஷ்ண வர்தனி, விருதுநகர்.

''நம் உடம்பில் உண்டாகும் வலியை, மூளைக்குக் கடத்துவது, உடம்பில் அந்தந்தப் பகுதிகளில் இருக்கும் உணர்வு நரம்புகள்தான். இந்த நரம்புகள் அனைத்தும் நமது முதுகுத்தண்டுவடத்தில் இணைகின்றன. அங்கே இருந்து மூளைக்கு செய்தி கடத்தப்பட்டு, வலியை உணர்ச்சியாக உடம்பின் குறிப்பிட்ட பகுதிக்கு அனுப்பும். இதுபற்றி, கடந்த சுட்டி விகடன் (30.06.14) இதழில் 'செய்திகள் செல்லும் நெடுஞ்சாலை’ என்ற பெயரில் மாயா டீச்சர் விரிவாகச் சொல்லியிருக்கிறார். அதைப் படியுங்கள் மித்ரா.''