''இந்தப் பள்ளி மைதானத்தில், அரை மணி நேரத்தில் ஒரு காட்டை உருவாக்கப்போறோம்'' என்று குமார் ஷா சொன்னதும், சுற்றி நின்றிருந்த சிறுவர்கள், 'அது எப்படி?’ என்று திகைத்தனர்.

சிறுவர்களை இரண்டு குழுக்களாகப் பிரித்தார் குமார் ஷா. அதில், ஒரு குழுவினரிடம் முழு சார்ட்டைக் கொடுத்து, காட்டில் என்னவெல்லாம் இருக்கும் என்று யோசித்து வரையச் சொன்னார். அவர்களும் விதவிதமான மரங்கள், விலங்குகள், பறவைகள் என ஆர்வத்துடன் வரைந்தனர். அவரவர் வரைந்ததை, அவரவர் உடலில் சுற்றிக்கொண்டு வட்டங்களில் நின்றார்கள்.

மற்றொரு குழுவினர் காட்டுக்குள் வருகிறார்கள். குறிப்பிட்ட வட்டத்துக்குள் நுழையும்போது, அங்கே இருப்பவர் தன் அட்டையில் வரைந்திருப்பதைப் போல, சத்தம் எழுப்ப வேண்டும். மரம் வரைந்திருந்தவர், மரத்தில் காற்று மோதும்போது கிளைகள் ஆடுவதைப் போல, ஆடி ஓசை எழுப்ப வேண்டும். விலங்குகளை வரைந்தவர்கள், அவற்றைப்போல ஓசை எழுப்ப வேண்டும். எல்லோரும் ஒரே நேரத்தில் செய்ததும் அந்தப் பள்ளி மைதானம் காட்டுக்குள் இருப்பது போன்ற உணர்வைத் தந்தது.

இப்படி அழகான காட்டை உருவாக்கிவிட்டுச் சிரித்தார் குமார் ஷா. அடடா... குமார் ஷாவை உங்களுக்கு அறிமுகம் செய்யவில்லையே...

குமார் ஷா, பொறியியல் படித்தவர். நண்பர்களோடு இணைந்து 'அறம்' என்ற அமைப்பை உருவாக்கி, குழந்தைகளுக்குக் கதை சொல்வது, புதிய விளையாட்டுகளை அறிமுகப்படுத்துவது, பொம்மைகள் செய்யக் கற்றுத்தருவது

எனத் தன்னை குழந்தைகளுக்காகவே முழுவதுமாக ஈடுபடுத்திக்கொண்டிருப்பவர். இந்த ஆர்வம் எப்படி உருவானது?

''முதலில் பழவேற்காடு அருகே உள்ள செஞ்சியம்மன் நகர் குழந்தைகளுக்கு டியூஷன் சொல்லிக்கொடுக்க ஆரம்பித்தோம். அவங்களுக்குப் பாடம் கற்பதில் ஆர்வம் குறைவாக இருந்தது. அதனால், விளையாட்டோடு பாடத்தைக் கற்றுக்கொடுத்«தோம். அது பலன் அளித்தது. அப்படி ஆரம்பிச்சதுதான்'' என்கிறார் குமார் ஷா.

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15-ல் குழந்தைகள் திருவிழா கொண்டாடுகிறார்கள். அந்தத் திருவிழாவில் பம்பரம், கோலி, தாயம் உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடுகிறார்கள். சென்ற ஆண்டு, 1 மணி நேரத்தில் 14 நாடகங்களை நடித்துக்காட்டி அசத்தினர். அழகான களிமண் சிற்பம் செய்வதிலும் சிறுவர்கள் தேறிவிட்டனர். குறுகிய நேரத்தில் மணி என்ற சிறுவன் செய்த டைனோசர்... நிகழ்ச்சியின் ஹைலைட்.

'அறம்' அமைப்பு இன்னும் சில அமைப்பினரோடு சேர்ந்து, சென்னை சைதாப்பேட்டையில் உள்ள திருவள்ளுவர் குருகுலத்தில், ஞாயிறுதோறும் 'கதை சொல்லலாம் வாங்க’ எனும் நிகழ்ச்சியை நடத்துகிறார்.

''நான் என்னங்க கதை சொல்றேன். நிகழ்ச்சியில் சந்திக்கும் குழந்தைங்க சொல்றாங்க பாருங்க... ஒவ்வொன்றும் அழகான கற்பனை'' என்கிற குமார் ஷா, தமிழ்நாட்டின் பல ஊர்களுக்கும் பயணம் செய்து, குழந்தைகளைக் குதூகலப்படுத்துகிறார்.

''பொள்ளாச்சியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், பேய் மாதிரி வேஷம் போட்டு, பிறகு அந்தப் பேய், மனிதராக மாறுவதுபோல நடிச்சோம். பசங்க ரொம்ப ரசிச்சாங்க.பேய் பற்றிய மூடநம்பிக்கைகளை விடப்போறதாவும் சொன்னதுதான் சந்தோஷம்'' என்றார்.

குமார் ஷாவிடம் உள்ள இன்னொரு திறமை, விரல் பொம்மைகள். ஓர் அட்டையில் விதவிதமான கதாபாத்திரங்களை வரைந்து, அதை விரல்களில் மாட்டிக்கொண்டு கதைசொல்கிறார். பசையால் ஓவியங்களை உருவாக்குவது, பிரஷ் பயன்படுத்தாமல் ஓவியம் வரைவது என்று பல்வேறு வகைகளில் குழந்தைகளின் கற்பனைத்திறனை வளர்க்கிறார் குமார் ஷா.

''கதை சொல்லும்போது மாணவர்கள் அடையும் குதூகலத்தைப் போலவே, பாடம் நடத்தும்போதும் அடையணும். அதுபோல நமது பாடத் திட்டம் மாறணும்'' என்கிறார் குமார் ஷா.