உலகின் முதல் ரோபோ மாதிரியை உருவாக்கியது யார் தெரியுமா? டாவின்சி. ஆச்சர்யத்தில் மூர்ச்சை ஆகாதீர்கள். அவர், ரோபோவை படமாக வரைந்திருந்தார். இழுவைகள் மற்றும் கம்பிகள் மட்டும் கொண்ட அதற்குப் பெயர், ரோபோ நைட். அதாவது, இயந்திர வீரன்.

1800-களில் இயந்திர வாத்துகள் உருவாக்கப்பட்டன. இறக்கைகளை அடிக்கிற அளவுக்கு திறன்கொண்ட அவை, இயந்திர மனித தொழில்நுட்பத்துக்கு முன்மாதிரியாகக் கருதப்படுகின்றன.

கார்ல் கேப்பக் (Karel Capek) என்பவரின் நாடகத்தில், மனிதர்கள் போல இருந்த இயந்திரங்களைக் குறிக்க, ரோபோ என்ற வார்த்தையை அறிமுகப்படுத்தினார்.

முதல் ரோபோ பொம்மை, 1932-ல் ஜப்பானில் உருவானது. அதை தகரத்தால் உருவாக்கினார்கள்.

1937-ல், ஆலன் டியூரிங் (Alan Turing) சமர்ப்பித்த ஆய்வுக் கட்டுரை, செயற்கை அறிவு மற்றும் ரோபோடிக்ஸ் துறையில் புரட்சியை உண்டாக்கியது.

1954-ல், புரோகிராம் செய்யப்பட்ட ரோபோ கரம் ஒன்றை, ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் உருவாக்கியது. அதைக்கொண்டு, கார்களை வேகமாக உருவாக்கினார்கள். தொழில்துறையில் ரோபோவின் பயன்பாடு அப்போதுதான் ஆரம்பமானது.

1986-ல், மனிதர்களைப் போல தோற்ற அமைப்புக்கொண்ட ரோபோ (பிuனீணீஸீஷீவீபீ ஸிஷீதீஷீ) உருவாக்க, ஹோண்டா நிறுவனம் திட்டமிட்டது. இதன் வளர்ச்சி, மனிதர்களோடு கலந்துரையாடும் கிஷிமிவிளி ரோபோ, 2000-ம் ஆண்டில் உருவானது.

கார்னகி மிலான் பல்கலையில் எட்டு கால்கள் கொண்ட ரோபோக்கள் 1997-ல் உருவாக்கப்பட்டன. அவை, எரிமலையில் இருந்து வாயு மாதிரிகளைச் சேகரிக்கப் பயன்பட்டன.

ரோபோ கப் என்கிற ரோபோக்களுக்கான கால்பந்து விளையாட்டை, நாய் போன்ற உருவத்தில் ரோபோக்களை உருவாக்கி, விளையாட்டில் ஈடுபடுத்தினர்.

10 கிராம் எடை, 7 சென்டிமீட்டர் உயரம்கொண்ட ஹெலிகாப்டர் ரோபோ, பேரிடர் சமயங்களில் பயன்பட உருவாக்கப்பட்டன.

கட்டடங்களை உருவாக்குபவை, ரிமோட் உதவி இல்லாமல் தானே இயங்குபவை, படிகளில் ஏறி இறங்குபவை என ரோபாக்களின் வளர்ச்சி, அசாத்தியமாக உள்ளன.

வருங்காலத்தில் வீடுகளில் ரோபோக்கள் பயன்பாடு சர்வ சாதாரணமாக இருக்கும். நீங்கள் மருந்து சாப்பிட நினைவூட்டும். என்ன ஜூஸ் குடிக்கலாம், என்ன பாட்டு கேட்கலாம் என்றெல்லாம் அறிவுரை சொல்லும்.

- ச.புவனேஷ்