நகரத்துச் சுட்டிகளுக்கு நாய் எப்படி செல்லப் பிராணியோ... அதே மாதிரி, கிராமத்துச் சுட்டிகளுக்கு, ஆட்டுக்குட்டி செல்லப் பிராணி. ஆட்டுக்குட்டியைத் தூக்கிக் கொஞ்சுவதும், அதனோடு வயல்வெளிகளில் திரிவதும் இன்றைக்கும் பார்க்கலாம். கருப்பா, முனியா என்று பல பெயர்களை வைத்து அழைப்பார்கள். அந்த ஆட்டுக்குட்டி பற்றி கொஞ்சம் தெரிஞ்சுப்போமா?

குதிரை, மாடு, ஆடு ஆகியவற்றின் கால்களின் அடிப்பாகத்தை, குளம்பு என்பார்கள். ஆங்கிலத்தில் Hoof ஆட்டுக்குட்டி பிறந்ததும் பார்த்திருக்கீங்களா? அதனோட குளம்புகள், தங்க மஞ்சள் வண்ணத்தில் மிளிரும். இதை, Golden Hoof என்பார்கள்.

நீங்க பிறந்து எத்தனை மாதம் கழிச்சு நடக்க ஆரம்பிச்சீங்க? உங்க அம்மாகிட்ட கேட்டுப்பாருங்க. ஆட்டுக்குட்டி, பிறந்த அரை மணி நேரத்தில் நடக்க ஆரம்பிக்கும். யாரும் வழிகாட்டாமலேயே, தனது அம்மாவின் பால் மடியைத் தேடிச்சென்று முட்டி முட்டி பால் குடிக்கும். அது எப்படி? இதை, இன்னேட் டிராய்ட் (Innate Trait) என மரபியல் நிபுணர்கள் சொல்றாங்க. ஒவ்வொரு விலங்குக்கும் சில ஆற்றல்கள் பிறந்த உடனேயே வெளிப்படும். நீங்க, நீச்சல் அடிக்க எங்கே கத்துக்கிட்டீங்க? தாத்தா வீட்டுக் கிணத்துலயா... நீச்சல் குளத்துலயா? பிறந்த ஆட்டுக்குட்டிக்கும் நீச்சல் அடிக்கத் தெரியும். அதுக்குக் காரணமும், இன்னேட் டிராய்ட்தான்.

ஆட்டுக்குட்டிகள், ஆடுகள் ஒண்ணோட ஒண்ணு முட்டிக்கிட்டு விளையாடும். அதன் தலையில் அடிபடாதா? படாது! ஏன்னா, அதன் மண்டைஓட்டு எலும்பின் உள்ளுக்குள் சைனஸ் நிறைய இருக்கு. சைனஸ் என்றால், காற்று அறைகள். குட்டிகளின் தலையும் தலையும் முட்டிக்கிறதுனால வரும் அழுத்தத்தை, இந்தக் காற்றறைகள் உள்ளே உறிஞ்சிக்கிறதுனால மண்டையோட்டுக்கு பாதிப்பு வராது. அதிக விலை உள்ள கார்களில் ஏர்பேக்ஸ் (Air Bags) இருக்கும். கார் எதன் மேலயாவது மோதினால், அந்த அதிர்வை, ஏர்பேக் குறுக்கிட்டுத் தடுத்திடும். அந்த மாதிரிதான். ஆட்டின் மண்டையில் இருக்கிற சைனஸ். இது, நேச்சுரல் ஏர்பேக்.

வெள்ளாடு, செம்மறி ஆடு என இரண்டு முக்கிய வகைகள் இருக்கு. வெள்ளாடு, வெள்ளையா மட்டுமே இருக்கும்னு நினைக்க வேண்டாம். தமிழ்நாட்டு வெள்ளாட்டு இனங்கள் மூன்று. கன்னி ஆடு, கொடி ஆடு, சேலம் கறுப்பு. இவை, மரம், செடி, கொடிகளின் இலை, தழைகளைத்தான் சாப்பிடும். தலையைத் தூக்கி, காலைத் தூக்கிதான் சாப்பிடும். வெள்ளாடு, மழையில் நனைய விரும்பாது. குடை பிடிச்சுக்குமான்னு கேட்காதீங்க. அதான், இயற்கை தந்த குடைகளான மரத்தடிக்குப் போயிரும். கன்னி ஆடு, பிரதானமா கறுப்பு கலரில், வெள்ளைக் கோடுகளோடு இருக்கும். கொடி ஆடும் கறுப்புதான். அங்கங்கே வெள்ளை, பழுப்பு, சிவப்புத் திட்டுக்கள் அழகா இருக்கும்.

ஒண்ணு தெரியுமா? செம்மறி ஆட்டுக் கறியைத்தான் மட்டன் (Mutton) என்று சொல்லணும். நாம் சாப்பிடுவது வெள்ளாட்டுக் கறி. அதுக்குப் பேரு செவான் (Chevon).

ஹிப்போகேம்பஸ் என்றால், கடற்குதிரை என்று அர்த்தம் உண்டு. ஆட்டுக்குட்டியின் மூளையில் உள்ள ஹிப்போகேம்பஸ், கடற்குதிரை வடிவில் இருக்கும். எல்லா வகையான நினைவுகளின் ஸ்டோர் ஹவுஸ், இந்தப் பகுதிதான். விலங்குகளில் இது, ஆட்டுக்குட்டிக்கு நல்லா டெவலப் ஆகியிருக்கும். பாதாம் பருப்பு போல இருக்கும் ஆல்மண்ட் (Almond) என்ற பகுதி, பிஹேவியரைக் கன்ட்ரோல் செய்யும்.

ஆட்டுத் தோலில் ஒரு வித்தியாசமான வாசம் வரும். அதன் கொம்புக்குக் கீழே, ஒரு சுரப்பி இருக்கு. கார்னுவல் க்ளாண்ட் (Cornual Gland). என்கிற இந்தச் சுரப்பியில் ஓர் அமிலம் இருக்கு. அதுதான் தோலின் வாசத்துக்குக் காரணம்.

கம்ப்யூட்டர் காலமான இப்போ, பிரௌசிங் என்பது எல்லாருக்கும் தெரிந்த வார்த்தை. அதைக் காலம் காலமா செய்வது ஆடுதான். நுனிப்புல் மேய்வது என்பதுதான் இந்த வார்த்தைக்கு அர்த்தம். நுனிப்புல்தான் ரொம்பச் சுவையாக இருக்கும். நுனிப்புல், பனித்துளியோடு ஈரமாக இருக்கும். ஆட்டுக்கு அது மிகவும் பிடிக்கும். அடிப்புல்லை விட்டுட்டு இந்த நுனிப்புல்லை மட்டும் ஆடு மேயும். இதனால், புல் மறுபடியும் வளரும். ஆட்டின் நாக்கு, கூர்மையாக, அறம் மாதிரி இருக்கும். நாக்கின் நுனியாலேயே புல்லை அறுத்துரும். மேல் தாடையில் ஆட்டுக்கு முன் பற்கள் (Incisors) கிடையாது. இந்த அமைப்பு, அசைபோட ரொம்பவும் உதவியா இருக்கும். கீழ்த் தாடையில் மட்டும் Incisors இருக்கும்.

செம்மறி ஆட்டின் மேல் உதட்டில் ஒரு பிளவு இருக்கும். அந்தப் பிளவு வழியாக, அதன் பற்கள் தரையிலே படும். இதனால், தரையோடு தரையாக வாயை ஒட்டிவெச்சு சின்ன சைஸ் புல்லையும் கடிச்சு எடுத்துரும். இதுக்கு, பில்ட்ரம் (Philtrum) என்று பெயர். வெள்ளாட்டுக்கு இந்தப் பிளவு கிடையாது.

தமிழ்நாட்டில் உள்ள செம்மறி ஆடு வகைகள் பல. திருச்சி கறுப்பு, கோயம்புத்தூர் குறும்பை, நீலகிரி ஆகிய மூன்று இனங்களையும் கம்பளிக்காக வளர்க்கிறாங்க. மற்றவை, கறிக்காக. இந்த ஆடுகளில், சதைக்குள் கொழுப்புச் சத்து இருக்கும்.

மாட்டுப் பாலில், ஆல்ஃபா கேசின் என்ற ஒரு வகை புரோட்டீன் இருக்கு. அது, சிலருக்கு பிரச்னை பண்ணிடும். இந்த வகை ஆல்ஃபா கேசின் ஆட்டுப் பாலில் இல்லை. குழந்தைகளுக்கு ஆட்டுப் பாலைத் தருவது நல்லது. ''ஆட்டுப் பால் குடிச்சா, அறிவு அழிஞ்சுபோகும், எருமைப் பால் குடிச்சா, ஏப்பம் வந்து தீரும்'' என்று ஒரு பாட்டுல வரும். அது, தப்பு. ஆடுகளில் இருந்து கிடைக்கும் பாலின் அளவு குறைவு என்பதால், அது எல்லோருக்கும் கிடைப்பது இல்லை. மகாத்மா காந்தி ஆட்டுப் பாலின் அருமையைப் பற்றி தனது சுயசரிதையிலேயே சொல்லியிருக்கிறார்.