சமீபத்தில், சென்னை ராயப்பேட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், 'மழை நீர் சேகரிப்பு’ வாரம் கொண்டாடப்பட்டது. மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், சுமார் 400 மாணவர்கள், மழைநீர் சேகரிப்பு பற்றிய வாசகங்கள் எழுதிய பலகைகளை கையில் பிடித்துக்கொண்டு, பேரணியாகச் சென்று மக்களின் கவனத்தை ஈர்த்தனர். இந்தப் பேரணியைத் துவக்கிவைத்த பள்ளியின் முதல்வர்-தாளாளர் வேதா சீனிவாசன், ''அரசின் இத்தகைய திட்டங்களுக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு இன்றியமையாதது. இதனால், நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து தண்ணீர் பற்றாக்குறை நீங்கும். வருங்காலத் தலைமுறைகளான மாணவர்கள், இதன் அவசியத்தை நன்கு உணர வேண்டும்'' என்றார். தண்ணீருக்குத் தலை வணங்குவோம்!

தேவகோட்டை, சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில், 'நம்மை சுற்றி அறிவியல்’ என்ற தலைப்பில், ஆய்வுக்கூடம் இல்லாமல் அறிவியல் சோதனைகளை செய்யும் நிகழ்ச்சி நடந்தது. திருச்சி, அண்ணா கோளரங்க அறிவியல் மைய திட்ட இயக்குநர் லெனின் தமிழ் கோவன் பங்கேற்று, பல்வேறு அறிவியல் செய்முறைகளை நடத்தினார்.

அதில் ஒன்று, 'ஸ்ட்ரா ஏன் எப்போதும் ஒரே அளவாக தயாரிக்கப்படுகிறது? பேப்பரை சரிபாதியாக மடித்தால், அதிகபட்சம் ஏழு முறைதான் மடிக்க முடியும் என்பது ஏன்?’ போன்ற பல விஷயங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

ஜம்ப் கிளிப்பை வைத்து பரப்பு இழுவிசையை எளிமையாக விளக்கினார். வெறும் கையை வைத்தே, அறிவியல் தொடர்பான நிறையச் செயல்கள் செய்யலாம் என்பதையும் எடுத்துக் கூறினார். அற்புத அறிவுக்கூடம்!

அமெரிக்கர்களை ஆச்சர்யப்படுத்தி, செய்திகளில் இடம்பிடித்திருக்கிறார், ஓர் இந்தியச் சுட்டி. அவர், கலிஃபோர்னியாவில் வசிக்கும் தனிஷ்க் ஆப்ரகாம். 10 வயதிலேயே பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு, டிப்ளோமா தேர்வு எழுதி, அதிலும் வெற்றிபெற்றிருக்கிறார். 'கல்லூரிப் படிப்பை முடித்து, பல்கலைக்கழக்கத்தில் உயர் படிப்பையும் விரைவில் படிப்பேன்’ என்று சொல்லும் தனிஷ்க், எதிர்காலத்தில் விஞ்ஞானி அல்லது டாக்டர் ஆக ஆசைப்படுகிறார். சல்யூட் தனிஷ்க்!

துபாயில் இருக்கும் 829.8 மீட்டர் உயர 'புர்ஜ் கலிபா’ கட்டடம்தான் தற்போது உலகின் அதிக உயரமான கட்டடம். இந்தச் சாதனையை முறியடிக்கும் வகையில் சீனாவில் உள்ள ஊனான் மாகாணத்தில், ஒரு கிலோ மீட்டர் (1,000 மீட்டர்) உயரம்கொண்ட பிரமாண்டமான இரட்டைக் கோபுரத்தைக் கட்ட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. யாங்க்சே நதிக்கரையை ஒட்டி, 47 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்படுகிறது. இந்த இரட்டைக் கோபுரங்களுக்கு, சீன இதிகாசங்களில் வரும், ஆண் பறவையான 'ஃபெங்’ என்றும் மற்றொன்றுக்கு, அதன் ஜோடிப் பறவையான 'ஹுவாங்’ என்றும் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. இந்தக் கட்டடத்தில், உணவகங்கள், தாவரவியல் பூங்காக்கள், பொழுதுபோக்கு மையங்களும் அமைக்கப்படும். உயர உயர சாதிப்போம்!