மாலை நேரம். அந்தப் பூங்காவில் அமர்ந்திருந்த நண்பர்களைத் தேடிவந்தான் ராகுல்.

சரண்: ''ஹாய் ராகுல், கையில என்னடா புக்?''

ராகுல்: ''இது, 'வாண்டுமாமா’ எழுதின 'பலே பாலு’ கதைகளின் தொகுப்பு.''

சரண்: ''யார் அது வாண்டுமாமா?''

நித்யா: ''எனக்குத் தெரியும். பிரபலமான சிறுவர் எழுத்தாளர். போன புக்ஃபேர்ல அவருடைய புத்தகங்கள் நிறைய வாங்கினேன்.''

ராகுல்: ''விஷயம் தெரியுமா? அவர், போன மாசம் (ஜூன் 12) இறந்துட்டார். 90 வயதாம். என் அப்பா ரொம்ப வருத்தப்பட்டார். 'உங்களுக்கு இப்போ, நிறைய கார்ட்டூன் சேனல்ஸ் இருக்கு. பென் 10, சோட்டா பீம், ஜாக்கிசான் என நிறையப் பார்த்து ரசிக்கிறீங்க. அப்போ, எங்களுக்கு கதைப் புத்தகங்கள்தான் பொழுதுபோக்கு. தன்னுடைய கதைகள் மூலம் எங்களை கற்பனை உலகுக்கு அழைத்துச்சென்றவர் வாண்டுமாமா. சிறுகதைகள், காமிக்ஸ், தொடர்கதைகள் என அசத்துவார்’ எனச் சொல்லி, இந்த புக்கை படிக்கக் கொடுத்தார்.''

அட்சயா: ''90 வயது தாத்தானு சொல்றீங்க... அந்தக் காலத்துக் கதைகள்னா, கஷ்டமான வார்த்தைகள், நிறைய அறிவுரைகள்னு பயமுறுத்துமோ...''

ராகுல்: ''நானும் அப்படி நினைச்சுதான் புத்தகத்தைப் பிரிச்சேன். ஆனால், ஒரே நாளில் படிச்சுட்டேன். இந்த 'பாலு’ பயங்கர சேட்டைக்காரன். கலகலப்பு, நையாண்டி என ஒவ்வொரு படக்கதையும் ரெண்டு பக்கத்தில் 'நச்’னு முடியுது.''

பரத்: ''நான் வாண்டுமாமா கதைகளை நிறையவே படிச்சிருக்கேன். அவரைப் பற்றி நிறையவே தெரியும். அவருடைய ஒரிஜினல் பெயர், வி.கிருஷ்ணமூர்த்தி. புதுக்கோட்டை பக்கத்தில் உள்ள அரிமழம் என்ற ஊரில் பிறந்தவர். சின்ன வயசுல ரொம்பக் கஷ்டப்பட்ட குடும்பம். நல்லா ஓவியம் வரைவார். பத்திரிகைத் துறையில் சேர்ந்து, பெரிய ஓவியரா வரணும்னு சென்னைக்கு வந்தார். ஆனந்த விகடனில் அவருக்கு வேலை கிடைச்சது. கதை எழுதும் ஆர்வமும் அவருக்கு இருந்தது. அப்போ, ஆனந்த விகடனில் 'பாப்பா மலர்’ என்ற பகுதி வரும். அதில்தான் இவருடைய முதல் சிறுவர் கதை வந்தது.''

ராகுல்: ''அதன் பிறகு, வானவில், கிண்கிணி என அப்போ வந்த பல சிறுவர் பத்திரிகைகளில் உதவி ஆசிரியராகவும், ஆசிரியராகவும் இருந்தார். வெளிநாடுகளில் 'ஹாரிபாட்டர்’ புக் வெளியாகும்போது, விடியற்காலையிலேயே புக் கடைகளுக்கு வெளியே க்யூவில் நின்று வாங்கியதாப் படிச்சிருக்கோம். அந்த மாதிரி சாதனையை 40 வருஷத்துக்கு முன்னாடியே செய்தவர் வாண்டுமாமா. திருச்சியிலிருந்து வெளிவந்த 'வானவில்’ சிறுவர் பத்திரிகையை வாங்க, காலையில் பத்திரிகை ஆபீஸ¨க்கே பசங்க போயிடுவாங்களாம்.''

பரத்: ''கோகுலம், பூந்தளிர் போன்ற பத்திரிகைகள் இவருடைய சிறப்பான பங்களிப்பால், ஹிட் அடிச்சது. தமிழில் 'காமிக்ஸ்’ என்கிற விஷயத்தை ஆரம்பிச்சதே வாண்டுமாமாதான். பலே பாலு, குஷிவாலி ஹரிஷ், அண்ணாசாமி, சமத்து சாரு என பல கேரக்டர்களை உருவாக்கி, நகைச்சுவை படக் கதைகளைக் கொடுத்தவர். ஓநாய் கோட்டை, மர்ம மனிதன், பவழத் தீவு, சிலையைத் தேடி, திகில் தோட்டம், வீர விஜயன் எனச் சொல்லிட்டே போகலாம். திகில், டிடெக்டிவ், சரித்திரம் என வெரைட்டியாகப் பின்னி எடுத்தவர்.''

அட்சயா: ''அது மட்டுமா? 'இப்போ எல்லாம் நமக்கு ஒரு விஷயம் பற்றித் தெரியணும்னா, கூகுளை சர்ச் பண்றோம். அப்போ, வாண்டுமாமாவின் புக்ஸ்தான் எங்களுக்கு கூகுள்’னு என் அம்மா சொன்னாங்க. மருத்துவம் பிறந்த கதை, உலகத்தின் கதை, விஞ்ஞான வித்தைகள், பறவைகள் - விலங்குகள் என அவர் தொடாத சப்ஜெக்ட்டே இல்லையாம். எளிமையான பொருள்களில் பலவிதமான அறிவியல் மாதிரிகள், சோதனைகள் செய்யும் புத்தகங்களையும் எழுதியிருக்கார்.''

பரத்: ''இதுவரை 160 புத்தகங்கள் வெளியாகியிருக்கு. கௌசிகன், சாந்தா மூர்த்தி என்ற பல பெயர்களிலும் எழுதியிருக்கார். வானதி பதிப்பகம், இவர் புத்தகங்களை நிறைய வெளியிட்டிருக்கு. இவருடைய புத்தகங்கள் பல விருதுகள் பெற்றிருக்கு. இவர் தன்னைப் பற்றிச் சொல்லும்போது, 'நிறையப் பேர் என்னை சிறந்த சிறுவர் எழுத்தாளர்’னு சொல்றாங்க. என்னை, நான் நல்ல சமையல்காரனா நினைக்கிறேன். எல்லோரும்தான் சமைக்கிறாங்க. ஆனா, ஒரு சிலருக்கு சரியான கைப்பக்குவம் வந்துடும். அப்படி எனக்கு சிறுவர் படைப்புகளுக்கான கைப்பக்குவம் வந்துடுச்சு அவ்வளவுதான்’ என அடக்கமாகச் சொல்லியிருக்கார்.''

சரண்: ''நீங்க எல்லாம் சொல்லச் சொல்ல எனக்கும் அவர் புத்தகங்களைப் படிக்க ஆசை வந்துடுச்சு. உடனே வாங்கிப் படிக்கிறேன்.''

குழந்தைகளுக்காக கதைகள், அறிவியல் தகவல்கள் என 80-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியவர், ரேவதி என்கிற ஈ.எஸ்.ஹரிஹரன். கோகுலம் சிறுவர் பத்திரிகையின் முன்னாள் கௌரவ ஆசிரியர். இவர், வாண்டுமாமா பற்றி சொல்கிறார்.

''வாண்டுமாமா, பூந்தளிர் பத்திரிகையின் ஆசிரியராக இருந்தபோது, நான் அவரிடம் துணை ஆசிரியராகப் பணியாற்றினேன். குழந்தைகளுக்கு என்ன எழுத வேண்டும்? எப்படி எழுத வேண்டும் எனப் பல விஷயங்களை அவரிடம் கற்றுக்கொண்டேன். எந்த அளவுக்கு எழுதுவாரோ, அதைவிட இரண்டு மடங்கு படிப்பார். பூந்தளிர் அலுவலகத்தில் இரண்டு பீரோக்கள் நிறைய புத்தகங்களை வைத்திருந்தார். எல்லாமே அறிவியல், பொது அறிவு சம்பந்தப்பட்ட ஆங்கிலப் புத்தகங்கள். அவற்றை படித்து, பல தகவல்களைத் திரட்டி, குழந்தைகளுக்கு ஏற்ற வகையில் எளிமையான தமிழில் வழங்கினார். உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தபோதும் அங்கேயே வரச்சொல்லி, பூந்தளிர் பக்கங்களைத் தயாரித்து அளிப்பார். குழந்தைகளுக்கு கதை எழுதி, எழுதி குழந்தையாகவே மாறிவிட்டவர் வாண்டுமாமா.''