Published:Updated:

தனித்தன்மையுடன் தலை நிமிருங்கள் !

க.பாலாஷி

தனித்தன்மையுடன் தலை நிமிருங்கள் !

க.பாலாஷி

Published:Updated:

''உங்கள் கனவுகள், மிகப் பெரிதாக இருக்க வேண்டும். சிறிய கனவு, குற்றம். உங்களின் தனித்தன்மைதான் உங்களை உயர்த்தும்'' என்று அவர் சொன்னதும் மாணவர்களிடம் பலத்த கரவொலி.

'சிந்தனை செய்; கேள்வி கேள்; செயல்படுத்து’ என்ற தலைப்பில், சென்னை, பெரம்பூர் ரிஸிவி பள்ளியில் நடந்த அறிவியல் நாள் விழாவில், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கலந்துகொண்டு மாணவர்களோடு கலந்துரையாடினார்.

தனித்தன்மையுடன் தலை நிமிருங்கள் !

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மாணவர்களின் அறிவியல் படைப்புகளைப் பார்வையிட்டு, அவர்களின் விளக்கங்களை கலாம் ஆர்வத்துடன் கேட்டறிந்தபோது, மாணவர்கள் முகத்தில் சந்தோஷ மின்னல்.

கலாம் பேச வந்ததும் ''அன்பார்ந்த இளம் நண்பர்களே... ''நான் தமிழில் பேசவா, ஆங்கிலத்தில் பேசவா?'' என்று கேட்டார். 'தமிழில்’ என அனைவரும் சொல்ல, தமிழிலேயே உரையாட ஆரம்பித்தார்.

மகாத்மா காந்திக்கும் அவரது தாய்க்கும் நடந்த உரையாடல் மற்றும் சர் சி.வி.ராமன், கடல் பயணம் செய்தபோது 'கடல் ஏன் நீல நிறமாக காட்சி அளிக்கிறது?’ என யோசித்து, ஆய்வில் இறங்கியது போன்ற நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டிப் பேசியவர், அவர்களின் தனித்தன்மை, உயர்ந்த குறிக்கோள் பற்றி சொன்னார். இடையிடையே மாணவர்களிடம் பல்வேறு கேள்விகளைக் கேட்டார்.

தனித்தன்மையுடன் தலை நிமிருங்கள் !

''எல்லோரும் எப்போதும் மேல் நோக்கிப் பாருங்கள். யாரும் தலைகுனியக் கூடாது. தனித்தன்மையை வளர்த்துக்கொள்ளுங்கள். அது, உங்களை உலகம் அறிய உயர்த்தும்'' என்று சொல்லி, மீண்டும் கரவொலி பெற்றார்.

மாணவர்களின் ஊக்க சக்திக்கு இன்னொரு பெயர், கலாம்.