Published:Updated:

வானவில் பக்கங்கள் !

வானவில் பக்கங்கள் !

வானவில் பக்கங்கள் !

வானவில் பக்கங்கள் !

Published:Updated:

சுட்டி வாசகர்களே... கதை, கவிதை, கட்டுரை எனப் படிப்பதோடு நிறுத்திக்கொண்டால் எப்படி? நீங்களும் படைப்பாளிகளாக மாறலாமே..! இது உங்களுக்கான பகுதி. துணுக்கு, கதை, கவிதை, கலகலப்பு... என எப்படியும் புகுந்து விளையாடலாம். படைப்புகளை அனுப்பும்போது உங்கள் பெயர், படிக்கும் வகுப்பு, பள்ளியின் பெயர், வீட்டு முகவரியை அவசியம் குறிப்பிடவும். அலைபேசி எண் மற்றும் இ-மெயில் முகவரியையும் எழுதுங்கள். மெயிலில் அனுப்ப chuttidesk@vikatan.com

வானவில் பக்கங்கள் !

 மழையே... மழையே!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மேகம் இரண்டு திரண்டன
யானை நிறத்தில் இருண்டன
வானில் மெதுவாய் நகர்ந்தன
வீட்டின் மேலே வந்தன

மத்தாப்பூவாய் மாடியில்
மழைத் துளிகள் விழுந்தன
துளிகள் ஒன்றாய்ச் சேர்ந்தன
திசையைத் தேடித் திரும்பின

வானவில் பக்கங்கள் !

எங்கள் வீட்டில் உள்ளது
மழைநீர் சேமிப்புத் திட்டமே
மகிழ்வாய் நீரும் ஒன்றாகி
மண்ணில் சென்று சேருமே

உயிரைக் காக்கும் மழைத்துளி
வீணாய்த் தெருவில் விடலாமோ?
மழை இல்லாமல் நீரில்லை
நீர் இல்லாமல் நாமில்லை.

- வேதாம்பாள் ஆத்மநாதன், புதுச்சேரி.

 அது இது எது?

'மாத்தி யோசி, மாத்தி யோசி’ எனச் சொல்றாங்களே... சரி, நாமும் முயற்சி பண்ணிப் பார்ப்போம் என்று யோசிச்ச விஷயம் இது. படிச்சதும் கோபம் வந்தால், நான் பொறுப்பில்லே.

வானவில் பக்கங்கள் !

கூப்பிட்டால் வருவது - தங்'கம்’
கேட்டால் தருவது - 'தா’மிரம்
படம் எடுக்காமல் ஆடுவது - துத்த'நாகம்’
உயரத்தில் இருப்பது - 'ஹைட்’ரஜன்
இனிக்காத தேன் - மீத்'தேன்’
இருட்டில் இருப்பது - 'நைட்’ரஜன்
தேர்ச்சி அடையும் பயல் - 'பாஸ்’பரஸ்

   - எஸ்.நந்தகுமார், அரசினர் மே.நி.பள்ளி, அயோத்தியாப்பட்டணம்.

 ஒரு ராஜா, ஒரு மந்திரி, ரெண்டு கடி!

''மன்னா, 'யார் அங்கே? யார் அங்கே?’ என்று அடிக்கடி அழைக்காதீர்கள்''
''ஏன் மந்திரியாரே?''
''தங்களுக்குக் கண்கள் சரியாகத் தெரியவில்லை என்று காவலர்கள் மத்தியில் புரளியாக இருக்கிறது!''

வானவில் பக்கங்கள் !


''மந்திரியாரே, நாட்டில் மாதம் மும்மாரி பெய்கிறதா?''
''இல்லை மன்னா, சீசன் மாறிதான் பெய்கிறது!''

- பா.விஜய், செவல்குளம்.

வானவில் பக்கங்கள் !