Published:Updated:

சுட்டி ஸ்டார் நியூஸ்

சுட்டி ஸ்டார் நியூஸ்

சுட்டி ஸ்டார் நியூஸ்

சுட்டி ஸ்டார் நியூஸ்

Published:Updated:
சுட்டி ஸ்டார் நியூஸ்

ஒரு நிமிடத்தில்...

இணையத்தில், ஒரு நிமிடத்தில் என்னவெல்லாம் நடைபெறுகின்றன தெரியுமா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒரு நிமிடத்தில், மின் அஞ்சலில் அனுப்பப்படும் தகவல்களின் எண்ணிக்கை, சுமார் 20 கோடியே 40 லட்சம்.

அமேசான் டாட் காம் நிறுவனம், 83 ஆயிரம் டாலர் மதிப்பிலான பொருள்களை ஒரு நிமிடத்தில் விற்பனை செய்கின்றது.

48 ஆயிரம் அப்ளிகேஷன்களை ஆப்பிள் சாதனங்கள் பயன்படுத்துவோர், ஒரு நிமிடத்தில் தரவிறக்கம் செய்கின்றனர்.

ஃபேஸ்புக் பயனாளர்கள், ஒரு நிமிடத்தில் பரிமாறிக்கொள்ளும் தகவல்களின் எண்ணிக்கை, 24 கோடியே 60 லட்சம்.

ட்விட்டர் பயன்படுத்துவோர், 2 லட்சத்து 77 ஆயிரம் தகவல்களை 'ட்விட்’ செய்கின்றனர்.

சுட்டி ஸ்டார் நியூஸ்

பெருசு... சிறுசு!

உலகின் சிறிய பாலூட்டி, பம்பிள்பீ வெளவால் (Bumblebee bat) .ஓர் அங்குல நீளம், 2 கிராம் எடைகொண்ட இது, தாய்லாந்து மற்றும் பர்மாவில் உள்ள சுண்ணாம்புக் குகைகளில் வாழ்கிறது.

உலகின் பெரிய பாலூட்டி, நீலத் திமிங்கிலம். உலகிலேயே பெரிய விலங்கு இதுவே. இதன் எடை, 110 முதல் 170 டன் எடை கொண்டது. 20 முதல் 30 மீட்டர் நீளம் உடையது.

சுட்டி ஸ்டார் நியூஸ்

காலங்கள்!

பூமி, 23.5 டிகிரி சாய்ந்து சுற்றுவதால்தான், மதியம், மாலை எனக் காலங்கள் மாறுகின்றன. பூமி சாயாமல் நேராகச் சுற்றிக்கொண்டு இருந்தால், எல்லா இடங்களிலும் 12 மணி நேரம் பகல், 12 மணி நேரம் இரவு என்ற நிலைதான் இருக்கும். பூமியைப் போல செவ்வாய் கிரகமும் குறிப்பிட்ட டிகிரி சாய்ந்தே சுற்றுகிறது. எனவே, அங்கும் காலங்கள் உண்டு.

சுட்டி ஸ்டார் நியூஸ்

பெரிய்ய்ய்ய மண்புழு!

ஆஸ்திரேலியாவின் நதிக்கரையில் மட்டுமே காணப்படும் அதிசய மண்புழு, பெரிய கிப்ஸ்லாண்டு மண்புழு (Giant Gippsland Earthworm).

சாதாரண நிலையில் 1 மீட்டர் நீளம், 2 சென்டிமீட்டர் சுற்றளவு கொண்ட இந்த மண்புழு, தேவைப்பட்டால் தனது உடலை 3 மீட்டருக்கு விரிக்க முடியும். மண்ணில் 5 மீட்டர் ஆழத்தில் இருக்கும். இந்த மண்புழுக்களை ஆஸ்திரேலியாவில் பாதுகாக்க வேண்டிய உயிரினமாக வைத்துள்ளனர்.

சுட்டி ஸ்டார் நியூஸ்

வணங்கும் கட்டடம்!

மும்பையில், 300 மீட்டர் உயரமுள்ள 62 மாடி கட்டடம் கட்டப்படுகிறது. 2016-ல் நிறைவடைய இருக்கும் இந்தக் கட்டடத்தின் பெயர், 'நமஸ்தே டவர்.’

இந்தியக் கலாசாரச் சின்னமாக, ஒரு பெண் இரு கைகளையும் கூப்பி வணக்கம் சொல்லும் வடிவத்தில் கட்டப்படுகிறது. அதற்காக, இரட்டைப் பேனல்களாகப் பிரிக்கப்பட்டு, இடையே சிட்டி டாப் வியூவுக்கான இடம், காரிடார் போன்றவை அமைக்கப்படுகின்றன. கட்டடத்தின் வெளிப்புறம், மெஹந்தி இட்டது போன்ற டிஸைன், ஒரு பெண்ணின் கரம் என்பதற்குக் கட்டியம் கூறும். 2016-க்குப் பின், மும்பையில் 40 கி.மீ தூரம் வரை எங்கு சென்றாலும் இந்தக் கட்டடம் உங்களைப் பார்த்து நமஸ்தே சொல்லும்.

சுட்டி ஸ்டார் நியூஸ்