Published:Updated:

பாடம் உருவாக்கலாம் வாங்க !

பாடம் உருவாக்கலாம் வாங்க !

பாடம் உருவாக்கலாம் வாங்க !

பாடம் உருவாக்கலாம் வாங்க !

Published:Updated:
பாடம் உருவாக்கலாம் வாங்க !

சென்னை, காந்தி அமைதி நிறுவனம், பள்ளி மாணவர்களுக்கு காந்திய சிந்தனையிலும் அமைதிக் கல்வியிலும் பாடம் உருவாக்கும் இரண்டு போட்டிகளை, அகில இந்திய அளவில் நடத்துகிறது. படைப்பாற்றலுடன் பாடம் உருவாக்க, மாணவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு.

 கதை, உரையாடல், கவிதை, கார்ட்டூன் வடிவில், அமைதி தொடர்பான தகவல்களுடன் பாடம் இருக்க வேண்டும். புவிப் பாதுகாப்பு மற்றும் காந்தியப் பண்பாட்டுடன் கூடிய அமைதியே மையக் கருத்தாக இருக்க வேண்டும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முதல் போட்டிக்கு, மகாத்மா காந்தியின் சுயசரிதையான சத்திய சோதனை நூலையும் இரண்டாம் போட்டிக்கு, 51 அமைதிக் கல்விப் பாடங்கள் அடங்கிய 'அமைதிக்கு காந்திய வழி’ என்ற நூலையும் வழிகாட்டியாக எடுத்துக்கொள்ள வேண்டும். புத்தகங்களை மனப்பாடம் செய்யத் தேவை இல்லை. அந்த நூல்களில், குறிப்பிட்ட ஒரு பகுதியைப் படித்தால் போதும். அதில் காணும் அனுபவங்களின் அடிப்படையில், ஒரு பாடம் உருவாக்கலாம்.

ஆறாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையான அனைத்துப் பள்ளி மாணவர்களும், ஆங்கிலம் அல்லது தமிழ் மொழியில் இதில் கலந்துகொள்ளலாம். ஒரு போட்டியில் கலந்துகொள்ள,

பாடம் உருவாக்கலாம் வாங்க !

200-ஐ உங்களுடைய பள்ளி முதல்வரிடம் செலுத்தி, பாடம் உருவாக்கத் தேவையான தாளும் நூலும் பெற்றுக்கொள்ளலாம். (மாணவரே தனியாக அனுப்பி, பங்கேற்க முடியாது).

தேசிய அளவில், இரண்டு போட்டிகளுக்கும் தனித்தனியாக

பாடம் உருவாக்கலாம் வாங்க !

10,000,

பாடம் உருவாக்கலாம் வாங்க !

5,000,

பாடம் உருவாக்கலாம் வாங்க !

3,000 மற்றும்

பாடம் உருவாக்கலாம் வாங்க !

1,000 வீதம் இரண்டு ஆறுதல் பரிசுகள் வழங்கப்படும். 100 மாணவர்கள் சேரும் பள்ளிகளுக்கு, வகுப்பு வாரியாகப் பரிசுகள், சான்றிதழ்கள் உண்டு.

தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த பாடங்கள், அடுத்து வெளியிடப்படும் 'காந்தி அமைதிக் கல்வி’ பாட நூலில் சேர்க்கப்படும். பள்ளித் தலைமையாசிரியர், கட்டணத்தை 'காந்தி அமைதி நிறுவனம், சென்னை’ என்ற பெயரில் வரைவோலையாக அனுப்ப வேண்டிய கடைசி நாள்: 03.08.2014.

நூல்கள், விடைத்தாள்கள் ஆகஸ்ட் 18-ம் தேதிக்கு முன் பள்ளிக்கு அனுப்பிவைக்கப்படும். உருவாக்கப்பட்ட பாடங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 03.09.2014. மேலும் தகவல்கள் பெற, தொடர்புகொள்ளவும்.

சூ.குழந்தைசாமி (செயலர்), காந்தி அமைதி நிறுவனம், 332, அம்புஜம்மாள் தெரு, ஆழ்வார்ப்பேட்டை, சென்னை-600018.

தொலைபேசி: 04424993839, 09962479005.
e-mail: kulandhaisamy.gpf@gmail.com