Published:Updated:

சொன்னதைச் சொல்லும் செல்லங்கள்

முனைவர் ஆ.குமரவேள் படங்கள் : பாலு

சொன்னதைச் சொல்லும் செல்லங்கள்

முனைவர் ஆ.குமரவேள் படங்கள் : பாலு

Published:Updated:

பறவை இனத்தில், செல்லம் என்றதும் நமக்கு முன்னிலையில் வருவது கிளி. நிறம், அழகு, பேச்சு, பாட்டு என ஆல் ரவுண்டர் செல்லம். கிளியைப் போலவே மனிதர்களின் தோழர்களாக, ஃபின்ச் (Finch), ஸ்பேரோ (Sparrow), பன்ட்டிங் (Bunting), மைனா போன்ற பறவைகளைச் சொல்லலாம்.

சொன்னதைச் சொல்லும் செல்லங்கள்

அந்தக் காலத்தில், சுரங்கத்தில் நச்சு வாயு பரவுவதைக் கண்டுபிடிக்க, 'கேனரி’ என்ற பறவையை வெச்சிருப்பாங்க. கொஞ்சம் நச்சு வாயு வர ஆரம்பிச்சதுமே, கேனரி மயக்கம் போட்டுவிடும். இதைப் பார்த்து, வேலை பார்க்கிறவங்க, வெளியே ஓடி தப்பிச்சிருவாங்க. சரி, நாம கிளிகளைப் பற்றி பார்ப்போம்.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சொன்னதைச் சொல்லும் செல்லங்கள்

 'எலும்பு இல்லாத நாக்கு எதை வேணாப் பேசும்’னு ஒரு பழமொழி சொல்லுவாங்க. அடுத்தவங்களைப் பேச்சினாலே புண்படுத்தும் மனிதர்களைப் பற்றி சொன்ன பழமொழி இது. கோழி போன்றவற்றின் நாக்கு, சதையால் ஆனது இல்லை. நார் போன்றது.அதுக்கு, இழைமத் திசு (Fibrous Tissue) என்று பெயர். இஷ்டத்துக்கு நகராது. ஆனால், கிளியில் நாக்கு  நம்மை மாதிரி சதையால் ஆனது. அதனாலதான் கிளி பேசுது. ஆப்பிரிக்க க்ரே கிளி, 60 வார்த்தைகளுக்கு மேல் திருப்பிச் சொல்லும்.

சொன்னதைச் சொல்லும் செல்லங்கள்

நமது கை, கால் விரல்கள் முன்னோக்கி இருக்கும். பறவை இனத்தில் சிலவற்றுக்கு முன்னோக்கியும் சிலவற்றுக்கு பின்னோக்கியும் இருக்கும்.  கிளி இனத்தில், ஒரு காலுக்கு நான்கு விரல்கள். இரண்டு முன்னோக்கியும் இரண்டு பின்னோக்கியும் இருக்கும். மரக் கிளைகளை இறுகப் பற்றிக்கொள்ளவும் விரல் இடுக்கில் பழத்தைப் பிடித்துக்கொள்ளவும் பாதாம், கடலை போன்றவற்றைப் பிடித்து உடைத்துச் சாப்பிடவும் இந்த விரல் அமைப்பு உதவியாக இருக்கு.

சொன்னதைச் சொல்லும் செல்லங்கள்

கிளி இனத்தில் பாராகீட், பேரட், காக்கட்டீஸ்,  லோரிகீட், மக்காவ் என ஐந்து வகைகள் இருக்கு.இதில், பட்ஜ்ரிகர் என்ற கிளி, பாரகீட் வகை.  ஒருத்தர் பேசுறதை அதேமாதிரி பேசிக் காட்டும். சர்க்கஸில் வித்தை காட்டுறது பட்ஜ்ரிகர்தான். பக்கி எனச் செல்லமா சொல்வாங்க. மூக்கில் அலகுக்கு மேலே வெள்ளையாக பொரிப் பொரியாக இருக்கும். அதுக்கு 'செரீ’ எனப் பெயர்.  ஆண் பக்கிகளுக்கு நீல வண்ணத்திலும், பெண் பக்கிகளுக்கு பழுப்பு மற்றும் பிங்க் வண்ணத்தில்  கால்களும் செரீயும் இருக்கும்.

சொன்னதைச் சொல்லும் செல்லங்கள்

லவ் பேர்ட்ஸ், கிளி வகையைச் சேர்ந்ததுதான். ஆனால், பேசுறதும் மிமிக்ரி பண்றதும் இதுக்கு கஷ்டம். சர்க்கஸ் வித்தையைக் கத்துக்கும். அமேசான் பேரட், பச்சை வண்ணத்தில் இருக்கும். தலையில் மட்டும் மஞ்சள் திட்டுக்கள் இருக்கும். ஒண்ணரை அடி நீளம், அரை கிலோ எடை இருக்கும். மக்காவ், அரை மீட்டர் உடம்பு, அதே நீளத்தில் வால். 3-4 கிலோ எடை இருக்கும். ஒருத்தர் பேசுற மாதிரியே பேசிக் காட்டும்.

சொன்னதைச் சொல்லும் செல்லங்கள்

இந்தியாவில் இருக்கும் கிளிகளை   Parrot என்று சொல்லக் கூடாது. Parakeet  எனச் சொல்லணும். இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?

பேராகீட் உடம்பின் நீளம் எவ்வளவோ, அவ்வளவு நீளத்துக்கு வாலும் இருக்கும். அலகு, பேராகீட்களுக்கு கொக்கி வடிவத்தில் இருக்கும். பேரட்டின் அலகு, பெரிசா இருக்கும். பச்சை பேராகீட், ரோஸ்ரிங் பேராகீட், அலெக்ஸாண்ட்ரின் பேராகீட் ஆகியவை இந்திய பேராகீட் வகைகள்.

சொன்னதைச் சொல்லும் செல்லங்கள்

கிளி இப்படியும் அப்படியும் தலையைத் திருப்பித் திருப்பிப் பார்க்கிறதே அழகு. உங்க தலையை உட்கார்ந்தபடி, வலம், இடமாகத் திருப்புங்க. அரை வட்ட அளவுக்குத்தான் திரும்பும். அதாவது, 180டிகிரி. வீட்ல கம்ப்யூட்டர் கேம்ஸ் விளையாடும்போது, பின்னாடி அம்மா வர்றது தெரியாமல்போவது இதனால்தான். ஆனால், கிளி போன்ற பறவைகளால், தலையை 360 டிகிரி திருப்ப முடியும். காரணம், ஆக்சிபிடல் என்ற எலும்பு. பின் மண்டையில், அட்லஸ் (Atlas) என்கிற முதல் கழுத்து எலும்போடு, இரண்டு காண்டெய்ல் (Condyle) மூலமா சேரும். காண்டெய்ல் என்பது, வட்டமான மேடான பகுதி. நமக்கு இரண்டு காண்டெய்ல் இருக்கு. ஆனா, பறவை களுக்கு ஒரு காண்டெய்ல்தான். அதனால், தலையை முழு வட்டத்துக்குத் திருப்ப முடியும்.

சொன்னதைச் சொல்லும் செல்லங்கள்

பறவைகளின் எலும்புகளில் காற்று அறைகள் இருக்கும். அதை சைனஸ் என்று சொல்வாங்க. நமக்கு மண்டையோடு (skull) பகுதியில் மட்டுமே சைனஸ் இருக்கும். பறவைகளுக்கு தொடை எலும்பு, மார்பு எலும்பு, இறக்கை எலும்புகளில் சைனஸ் இருக்கு. இதனால், உடம்பின் எடை குறைஞ்சு நல்லாப் பறக்கும்.

பறவைகளுக்கு தொண்டைக்குப் பக்கத்தில் சிரின்ஸ் (Syrinx) என்ற அமைப்பு இருக்கு. இந்த சிரின்ஸ்க்கு வாய்ஸ் பாக்ஸ் எனப் பெயர். வயசுக்கேத்த மாதிரி வாய்ஸ் பாக்ஸ் அமைப்பு மாறுபடும். கிளி மற்றும் வானம்பாடிப் பறவைகளில் இந்த வாய்ஸ் பாக்ஸ் நல்லா மேம்பட்டு இருக்கும்.

சொன்னதைச் சொல்லும் செல்லங்கள்

கிளிக்குப் பற்கள் கிடையாது. எங்காவது வம்பு பண்ணி, உடைச்சுக்கிச்சா என்று கேட்காதீங்க. பறக்கும் விலங்குகளின் உடல் எடையைக் குறைக்கிறதுக்காக, பல உறுப்புகள் குறைஞ்சிருக்கும், அல்லது இல்லாமயே இருக்கும். அப்படிப் போனதுதான் பற்கள். அதேபோல, வயிற்று அறைக்கும் மார்பு அறைக்கும் நடுவே இருக்கிற உதரவிதானம் (Diaphragm) இது, பறவைகளுக்கு இருக்காது.

சொன்னதைச் சொல்லும் செல்லங்கள்

நமக்கு சாப்பிடும்போதும் பேசும்போதும் கீழ்த் தாடை மட்டும்தான் அசையும். ஆனால், கிளிக்கு மட்டும் இரண்டு தாடைகளும் அசையும். கீழ்த் தாடை உளி மாதிரி, கால் விரல் இடுக்கில் இருக்கிற உணவுப் பொருள்களை, உடைத்துத் துண்டாக்கும். மேல் தாடை, உணவுப் பொருள்களைத் துளைக்கும். பாதாம் போன்றவற்றின் மேல் ஓடுகளைச் சுலபமாகத் துளைக்க உதவுவது மேல் தாடைதான்.