Published:Updated:

சிந்தையில் ஒளிர்ந்த விளக்கு !

சிந்தையில் ஒளிர்ந்த விளக்கு !

ஆசையாக விளையாடக் கிளம்பும்போது, வீட்டில் வேலை சொன்னால், அலுப்பாகத்தான் இருக்கும். கௌதம் பிரவீன் அப்படித்தான் அலுத்துக்கொண்டார். கூடவே, ஆக்கபூர்வமாக யோசித்தார். அதன் பலன், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கைகளால், 'தேசிய இளம் விஞ்ஞானி’ விருதினைப் பெற்றிருக்கிறார். இவர் உருவாக்கிய, 'ஈஸி பல்பு பிக்சர்’ கருவிக்குதான் அந்த விருது.

திருநெல்வேலி, சங்கர் நகரில் உள்ள ஸ்ரீஜெயந்திரா கோல்டன் ஜூப்ளி பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கிறார் கௌதம் பிரவீன். ''ஒருமுறை, வீட்டில் உயரத்தில் உள்ள பல்புகளைக் கழற்றி மாட்டுவதற்கு, அப்பா அழைத்தார். வெளியே, விளையாட நண்பர்கள் காத்திருந்தார்கள். 'இந்த பல்புகளை எளிதாகக் கழற்றி மாட்ட, ஒரு கருவி இருந்தா நல்லா இருக்கும்’னு சொன்னேன். 'அதை நீயே  கண்டுபிடியேன்’னு அப்பா சொன்னார். அதை சீரியஸா எடுத்துக்கிட்டு, மாதிரிப் படம் வரைஞ்சு, ஆசிரியர்களிடம் காட்டினேன். அவங்க கொடுத்த ஊக்கமும் ஒத்துழைப்புமே இந்த விருது'' என்று மகிழ்ச்சி பொங்கச் சொன்னார், இந்த இளம் விஞ்ஞானி.

மத்திய அரசின் 'நேஷனல் இன்னோவேஷன் ஃபவுண்டேஷன்’, ஒவ்வொரு வருடமும் 'இக்னைட்’ என்ற தலைப்பில் பள்ளி மாணவர்களின் புதிய கண்டுபிடிப்பு களுக்கு விருதுகள் வழங்குகிறது. இக்னைட்-2013 என்ற விருதுகளில் ஒன்றைப் பெற்று வந்துள்ளார் கௌதம் பிரவீன்.

சிந்தையில் ஒளிர்ந்த விளக்கு !

மத்திய அரசு நடத்திய இன்ஸ்பயர் அறிவியல் கண் காட்சியில் உருவாக்கிய 'மின்சார நடைமேடை’ என்ற கண்டு பிடிப்புக்கு மாநிலப் பரிசு, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 494 மதிப்பெண்களுடன் மாநிலத் தில் நான்காம் இடம், தமிழ்நாடு அரசு நடத்திய தனித் திறன் போட்டியில் கீ-போர்டு இசையில் மாநில அளவில் முதல் பரிசு என இவரது சாதனைப் பட்டியல் நீள்கிறது.

சிந்தையில் ஒளிர்ந்த விளக்கு !

''அந்த விருது மேடையில் அப்துல் கலாம் பேசும்போது, 'பிரச்னைகளைச் சகித்துக்கொண்டு வாழ்வதைக் காட்டிலும், அதற்குத் தீர்வு காண முயற்சி செய்வதே சிறப்பு’ என்று சொன்னார். அது, என் மனத்தில் ஆழமாகப் பதிஞ்சிருக்கு. இப்போ, தேசிய நெடுஞ்சாலையில், இரவு நேரங்களில் நடைபெறும் வாகன விபத்துகளைத் தடுக்க ஒரு கருவியைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இருக்கிறேன்'' என்றார் கௌதம் பிரவீன்.

அசத்துங்க நண்பா!

சிந்தையில் ஒளிர்ந்த விளக்கு !
அடுத்த கட்டுரைக்கு