Published:Updated:

சுட்டி ஸ்டார் நியூஸ்

சுட்டி ஸ்டார் நியூஸ்

பிரீமியம் ஸ்டோரி
சுட்டி ஸ்டார் நியூஸ்

துருவ ஒளி!

துருவ ஒளி (Aurora) என்பது வட, தென் துருவப் பகுதிகளில் தோன்றும் ஓர் அபூர்வ ஒளித் தோற்றம். பொதுவாக, இரவு நேரங்களிலேயே தோன்றும் இந்த ஒளியின் தோற்றப்பாடு, உலகம் தோன்றிய காலம்தொட்டே காணப்படுகிறது. ஆர்க்டிக், அன்டார்ட்டிக் பகுதிகளில் எளிதில் காணலாம். இதை, இயற்கையின் வாணவேடிக்கை என்றும் ஒளிக்கோலம் என்றும் சொல்லலாம். சூரியனில் இருந்து, சூரியக் கதிர்கள் அதிக எண்ணிக்கையில் பிரபஞ்ச வெளியில் வீசப்படும்போது, அவை வேகமாக நகரும். பூமியின் காந்தப்புலத்தினுள் வரும்போது,  துருவப் பகுதிகளை நோக்கி இழுக்கப்படும். அந்தப் பகுதியில் உள்ள வளிமண்டலத்தில் இருக்கும் சில வாயுக்களுடன் மோதும்போது உருவாகும் ஆற்றலே, இத்தகைய ஒளிச்சிதறல்களாக உருவாகின்றன.

சுட்டி ஸ்டார் நியூஸ்

 நவீன ஆத்திசூடி!

சுட்டி ஸ்டார் நியூஸ்

அன்னையை வணங்கு
ஆவேசம் தவிர்
இல்லமே கோயில்
ஈடுபாட்டுடன் உழை
உணவை வீணாக்காதே
ஊழலை எதிர்த்து நில்
எண்ணத்தை உயர்த்திடு
ஏமாளியாக இருக்காதே
ஐம்பொறிகளைக் கட்டுப்படுத்து
ஒழுக்கம் அவசியம்
ஓய்வைக் குறை
ஒளடதத்தைப் பழக்கம் ஆக்காதே.

மரங்களை அறிவோம்!

ஒரு மரம், ஒரு வருடத்துக்கு சராசரியாக 118 கிலோ ஆக்ஸிஜனை வெளியிடுகிறது.

சுட்டி ஸ்டார் நியூஸ்

ஒரு ஏக்கரில் உள்ள மரங்கள், ஒரு வருடத்துக்கு 18 மனிதர்கள் ஆயுள் முழுவதும் சுவாசிக்கும் அளவு ஆக்ஸிஜனை வெளியிடுகின்றன.

ஒரு ஏக்கரில் உள்ள மரங்கள், சுமார் 2.6 டன் கார்பன்-டை-ஆக்ஸைடை காற்றிலிருந்து         உறிஞ்சிக்கொள்கின்றன.

நிழல் தரும் ஒரு மரம், வெயில் காலத்தில் 20 டிகிரி அளவுக்கு வெயிலின் தாக்கத்தைக் குறைக்கிறது.

சுட்டி ஸ்டார் நியூஸ்
சுட்டி ஸ்டார் நியூஸ்
சுட்டி ஸ்டார் நியூஸ்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு