Published:Updated:

வலை உலா - பார்க்க..கற்க..சூப்பர் வீடியோ தளங்கள் !

சைபர்சிம்மன் படங்கள் : தி.குமரகுருபரன்

பிரீமியம் ஸ்டோரி
வலை உலா - பார்க்க..கற்க..சூப்பர் வீடியோ தளங்கள் !

இணையத்தில் வீடியோ என்றதும் யூடியூப் நினைவுக்கு வரும். யூடியூப் என்றதும் பொழுதுபோக்கு வீடியோக்களே மனதில் தோன்றும். விஞ்ஞானம், வரலாறு, கலை எனப் பல தலைப்புகளில் பாடம் நடத்துவது போன்ற வீடியோக்களும் உண்டு. செய்முறை வீடியோக்களும் உண்டு. ஆனால், யூடியூப்பில் உள்ள சிக்கல், கற்றலுக்கு உதவும் நல்ல வீடியோக்களைத் தேடிக் கண்டுபிடிப்பது. இந்தத் தேடலின்போது தேவையற்ற, மோசமான வீடியோக்களும் கண்ணில் பட்டு கவனத்தைச் சிதறடிக்கும்.

இந்தச் சிக்கல்கள் இல்லாமல், கல்வி வீடியோக்களை மட்டுமே தொகுத்துத் தருகிறது எஜுடியூப்.ஆர்ஜி (http://edutube.org/en). யூடியூப்பில் உள்ள அருமையான கல்வி வீடியோக்களை எல்லாம் ஒரே இடத்தில் திரட்டித் தரும் தளம் இது. எந்தத் தலைப்பாக இருந்தாலும், அதற்கான வீடியோவை இந்தத் தளத்தில் தேடலாம். இந்தத் தளம் தேடித்தரும் வீடியோ, அந்தப் பிரிவில் முன்னணி வீடியோவாகவும் இருக்கும். ஒவ்வொரு பிரிவிலும் பயனுள்ள,  தரமான வீடியோவை அடையாளம் காட்டுகிறது இந்தத் தளம். அதிகம் பேரால் பார்க்கப்பட்டதாகவும் இருக்கும்.

வலை உலா - பார்க்க..கற்க..சூப்பர் வீடியோ தளங்கள் !

இந்தத் தளத்தில் நுழைந்ததுமே, அதன் முகப்புப் பக்கத்தில், முன்னணி கல்வி வீடியோக்களின் பட்டியலைப் பார்க்கலாம். இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள அல்லது தெரிந்துகொள்ள விரும்பும் வீடியோவைத் தேர்வுசெய்யலாம். நமக்கு விருப்பமான எந்தத் தலைப்பு வகையையும் தேர்வுசெய்து அதில் உள்ள வீடியோக்களைப் பார்க்கலாம்.  ரசாயனம், உயிரியல், கணிதம், விண்வெளி, பொருளாதாரம், கம்ப்யூட்டர், சாஃப்ட்வேர் எனப் பட்டியல் நீள்கிறது.

வலை உலா - பார்க்க..கற்க..சூப்பர் வீடியோ தளங்கள் !

குறிப்பிட்ட வீடியோவை கிளிக் செய்ததுமே, அதன் வீடியோவைப் பார்க்கத் தொடங்கிவிடலாம். அந்த வீடியோ பற்றிய சிறிய அறிமுகமும் தகவல்களுக்காக விக்கிபீடியா பக்கத்துக்கான இணைப்பும் கொடுக்கப்பட்டுள்ளன.

அந்த வீடியோ, இதுவரை எத்தனை பேரால் பார்க்கப்பட்டுள்ளது என்பதையும் தெரிந்துகொள்ளலாம். அந்த வீடியோவுக்கான மதிப்பீடும் கொடுக்கப்பட்டுள்ளது. முதலில் பார்க்கும் வீடியோ பிடித்திருக்கிறதா? அதன் பக்கத்தில் தொடர்புடைய மற்ற வீடியோக்களையும் பார்க்கலாம். ஒவ்வொரு வீடியோவுடனும் அதன் வகை மற்றும் பொருத்தமான வகுப்பு போன்ற விவரங்களும் உள்ளன. இவற்றை கிளிக் செய்தும் பொருத்தமான வீடியோக்களைப் பார்க்கலாம்.

வலை உலா - பார்க்க..கற்க..சூப்பர் வீடியோ தளங்கள் !

வீடியோக்களை நேரடியாக தேடிப்பார்க்கும் வசதியும் இருக்கிறது. அதாவது, கூகுளில் தேடுவது போலவே குறிப்பிட்ட தலைப்பை டைப் செய்தும் தேடலாம்.

உங்களுக்கு வழிகாட்டுவதற்காக, இந்தத் தளத்திலேயே மிகவும் பிரபலமான வீடியோக்கள், முன்னணி வீடியோக்கள் மற்றும் டாப் 100 வீடியோக்கள் பட்டியலும் உள்ளன. நாடுகள், புகழ்பெற்ற மனிதர்கள், ரோபோ ஆகிய தலைப்புகளிலும் வீடியோக்கள் தனியே இடம்பெற்றுள்ளன.

தினமும் எதையாவது ஒன்றைப் புதிதாகக் கற்றுக்கொள்ளுங்கள் என அழைப்பு விடுக்கிறது இந்தத் தளம். அந்த அழைப்பை ஏற்று, உள்ளே செல்லுங்கள். நிறைய சுவாரஸ்யங்கள் உங்களை வரவேற்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு