பிரீமியம் ஸ்டோரி

சுட்ட வடை!

காக்கையைத் தந்திரமாகப் பாட்டு பாட வைத்து, வடையை எடுத்துக்கொண்டு ஓடிய நரி, மறுநாள் அதே இடத்துக்கு வந்தது.

இதைப் பார்த்த காக்கை, ''இன்று என் வாயில் வடை இல்லை. இப்போது பாடுகிறேன். கேட்கிறாயா?'' என்று கோபத்துடன் கேட்டது.

நரி பொறுமையாக, ''நீ அந்த வடையைத் தின்னாமல்போனதுக்கு வருந்த வேண்டாம். சந்தோஷப்படு. அதைச் சொல்லத்தான் வந்தேன்'' என்றது.

காக்கையின் ஆத்திரம் இன்னும் அதிகமானது. ''என்னை ஏமாற்றி வடையைப் பறித்துத் தின்றதுடன், கிண்டல் பேச வந்திருக்கிறாயா?'' என்று கேட்டது.

வானவில் பக்கங்கள் !

நரியின் பொறுமை தொடர்ந்தது. ''கோபப்படாதே நண்பா. நேற்று, உன்னிடம் பறித்துச்சென்ற வடையைச் சாப்பிட்டது முதல் வயிறே சரியில்லை. கரடி டாக்டரிடம் போய் மருந்து வாங்கிக் குடித்தேன். விசாரித்தபோதுதான் தெரிந்தது... அது, கலப்பட எண்ணெயில் சுட்ட வடை என்று. அதில், உணவுப் பொருள்களைச் செய்யும்போது, நம் உடல் நலத்தைக் கெடுக்குமாம். அந்த வடையைத் தின்னாமல் நீ தப்பித்துவிட்டாய்'' என்றது.

இதைக் கேட்ட காக்கை, ''அப்படியா விஷயம்! இதைச் சொன்னதுக்கு ரொம்ப நன்றி நண்பா. இனிமேல், இதுபோன்ற தெருவோரக் கடை உணவுகளைச் சாப்பிட மாட்டேன். இன்று அமாவாசை. வீடுகளில் படைப்பார்கள். வடை கிடைத்தால் உனக்கும் எடுத்து வருகிறேன்'' என்று சொல்லிவிட்டுப் பறந்துசென்றது.

- என்.விசாலாட்சி, கொல்கத்தா.

சொந்த வேலை!

வானவில் பக்கங்கள் !

புகழ்பெற்ற இந்திய விஞ்ஞானி, டாக்டர் விஸ்வேஸ்வரய்யா, மைசூர் மகாராஜாவின் திவானாக இருந்தார். ஒரு சமயம், அரசாங்க வேலையாக வெளியூர் சென்று, ஒரு மாளிகையில் தங்கினார். இரவு நேரம், அரசு ஃபைல்களைப் பார்த்து முடித்துவிட்டு, தனது சூட்கேஸில் இருந்து சில மெழுகுவர்த்திகளை எடுத்துக் கொளுத்தினார். அறையில் எரிந்துகொண்டிருந்த மின்விளக்குகளை அணைத்துவிட்டு, ஒரு புத்தகத்தை எடுத்துப் படிக்க ஆரம்பித்தார். மாளிகைக் காவலாளி இதைப் பார்த்துவிட்டு, அறையின் விளக்கைப் போட முயற்சித்தார். உடனே விஸ்வேஸ்வரய்யா, ''மின்விளக்கைப் போட வேண்டாம். என் சொந்த வேலை காரணமாக புத்தகம் படிக்கும்போது, அரசு மாளிகையின் மின்விளக்கு தேவை இல்லை'' என்றார்.

- பி.கே.பிரேமிகா, சென்னை.

சுட்டி வாசகர்களே... கதை, கவிதை, கட்டுரை எனப் படிப்பதோடு நிறுத்திக்கொண்டால் எப்படி? நீங்களும் படைப்பாளிகளாக மாறலாமே..! இது உங்களுக்கான பகுதி. துணுக்கு, கதை, கவிதை, கலகலப்பு... என எப்படியும் புகுந்து விளையாடலாம். படைப்புகளை அனுப்பும்போது உங்கள் பெயர், படிக்கும் வகுப்பு, பள்ளியின் பெயர், வீட்டு முகவரியை அவசியம் குறிப்பிடவும். அலைபேசி எண் மற்றும் இ-மெயில் முகவரியையும் எழுதுங்கள். மெயிலில் அனுப்ப chuttidesk@vikatan.com 

வானவில் பக்கங்கள் !
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு