Published:Updated:

உற்சாகப் பூங்காவாக உங்கள் நூலகம் !

உற்சாகப் பூங்காவாக உங்கள் நூலகம் !

உற்சாகப் பூங்காவாக உங்கள் நூலகம் !

உற்சாகப் பூங்காவாக உங்கள் நூலகம் !

Published:Updated:

''நூலகம் என்றதும் அரைகுறை வெளிச்சம், காற்று வராத மின்விசிறி, கசங்கிய செய்தித்தாள் மற்றும் வார இதழ்களோடு அமர்ந்திருக்கும் பெரியவர்கள், கண் முன் வருவாங்க.  புத்தகம் படிக்கும் ஆர்வம் இருந்தாலும், வர்றதுக்கே யோசனையா இருக்கும். இப்போ, ஜீபூம்பா மாற்றம். நூலகத்தைப் பார்க்கவே ஆசையா இருக்கு'' என்று உற்சாகம் பொங்கச் சொல்கிறான் அந்தச் சிறுவன்.

அந்த உற்சாகத்துக்கான காரணம், நூலகத்துக்குள் நுழைந்ததுமே தெரிந்தது. 'சிறுவர் நூலகம், குழந்தைகளின் இரண்டாம் கருவறை’ என்ற வாசகத்துடன் வரவேற்றது நூலகத்தின் சிறுவர் பிரிவு. டோரா, புஜ்ஜி, டொனால்டு டக் என சுவரில் வண்ணமயமாக வரவேற்கிறார்கள். லிணிஞி தொலைக்காட்சி ஒன்று, அழகான குரலில் அனிமேஷன் காட்சியைக் காட்டியது. கண்ணைக் கவரும் வட்ட மேஜையைச் சுற்றி சில சுட்டிகள் அமர்ந்து படித்துக்கொண்டிருந்தார்கள்.

உற்சாகப் பூங்காவாக உங்கள் நூலகம் !

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''இந்த நூலகம், உங்கள் அறிவை வளர்க்க மட்டும் அல்ல, உடலை உறுதி செய்யவும் உதவும்'' என்று குரலில் உற்சாகம் பொங்கச் சொல்லிய, நூலகர் ராஜேஸ்வரி கை காட்டிய இடத்தில்... பிளாஸ்டிக் பந்துகள், சறுக்கு மரம், ஊஞ்சல் எனச் சிறுவர் பூங்காவில் நுழைந்த பிரமிப்பு.

இன்னொரு பக்கம், ''டேய் வினோத் விடாதே... கவனமாப் போடுடா!'' என்ற குரல். திரும்பிப் பார்த்தால், கேரம் விளையாடும் நான்கு பேர். கேரம் போர்டில் ஒரு சிவப்புக் காயும் ஒரு வெள்ளைக் காயும் ஒரு கறுப்புக் காயும் மட்டுமே இருக்கின்றன. இன்னொரு பக்கம், செஸ் விளையாட்டில் மும்முரமாக இருக்கிறார்கள் சில சுட்டிகள்.

''குழந்தைகளிடையே வாசிப்புத் திறனையும் நூலகத்துக்கு வரும் பழக்கத்தையும் ஏற்படுத்த, தமிழக அரசு முயற்சித்துவருகிறது. கடந்த ஆண்டு பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கையின்போது, விருதுநகர், திருச்சி, மதுரை, திண்டுக்கல், ஈரோடு ஆகிய ஐந்து மாவட்ட மைய நூலகங்களிலும் 20 லட்சம் ரூபாய் செலவில், குழந்தைகள் நூலகப் பிரிவு தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சிதான் இந்த மாற்றம்'' என்று சொன்னார், விருதுநகர் மாவட்ட மைய நூலக அலுவலர் ஜெகதீசன்.

உற்சாகப் பூங்காவாக உங்கள் நூலகம் !

நன்னெறிக் கதைகள், அறிவியல் தகவல்கள், கணிப்பொறி எனப் பல வகையான புத்தகங்கள், 70-க்கும் மேற்பட்ட குறுந்தகடுகள் உள்ளன. தினமும் தொலைக்காட்சி மூலம் அவை திரையிடப்படுகின்றன.

''பாடச் சுமைக்குள் புதைந்துகிடக்கும் மாணவர்களுக்கு, இந்த நூலகம் ஒரு மாற்றத்தைத் தரும். இதற்காக, எங்களால் முடிந்த எல்லா விஷயங்களையும் ஆர்வமாக செயல்படுத்திவருகிறோம்'' என்றார் ஜெகதீசன்.

அங்கே, கம்ப்யூட்டரில் விளையாடிக்கொண்டிருந்த  பாலமுருகன் என்ற சுட்டி, ''இப்போ, எனக்கு ஸ்கூலுக்குப் போவது போல, இந்த லைப்ரரிக்கு வர்றதும் ரொம்பப் பிடிச்சிருக்கு. அம்மாவோடு இங்கே வந்துருவேன். அவங்க புக்ஸ் படிக்கிறப்ப, நான் கம்ப்யூட்டரில் கேம் விளையாடுவேன். அப்புறம், நிறைய கார்ட்டூன் இருக்கிற புக்ஸ் படிப்பேன். என் ஃப்ரெண்ட்ஸ்கிட்டேயும் இந்த லைப்ரரி பத்தி சொல்லியிருக்கேன். அவங்களும் இங்கே வரப்போறாங்க'' என்றான் குதூகலமாக.

உற்சாகப் பூங்காவாக உங்கள் நூலகம் !

பாலமுருகனின் அம்மா, ''அரசின் இந்தத் திட்டத்தை முதன்முதலில் விருதுநகரில் தொடங்கி இருப்பது ரொம்பச் சந்தோஷமா இருக்கு. ஸ்கூல் முடிஞ்சு வந்ததும் 'அம்மா, லைப்ரரி போகலாமா?’னு பையன் கேட்கிறதே சந்தோஷமா இருக்கு. இந்த மாதிரி ஒவ்வொரு வீட்டிலும் கேட்க ஆரம்பிச்சா, குழந்தைகளின் பொழுதுபோக்கு மற்றும் அறிவு வளர்ச்சியில் பெரிய மாற்றம் உண்டாகும்'' என்றவர் முகத்தில் சந்தோஷமும் நம்பிக்கையும் ஒளிர்ந்தது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism