சாமுராய் வீரர்கள்!

ஜப்பான் நாட்டில், 12-ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த வீரப் பரம்பரையினரே 'சாமுராய்’ வீரர்கள். இவர்கள், போரிடுவதில் வல்லவர்கள்; பயம் என்பதையே அறியாதவர்கள்; நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்கள். போரில் தோல்வி கண்டாலோ அல்லது தோல்வி ஏற்படும் நிலை வந்தாலோ, புனிதச் சடங்கு நடத்தி தற்கொலை செய்துகொள்வார்கள்.

மின்சார ஈல்!

மனிதன் மின்சாரத்தைக் கண்டுபிடிப்பதற்கு முன்பே, சில மீன்கள் மின்சாரத்தைத் தனது உடம்பில் உற்பத்தி செய்துவந்தன. இந்த மீன்களை, 'மின்சார மீன்கள்’ என்கின்றனர். இதில், மின்சார ஈல் (Electric Eel),, அதிக மின்சாரத்தைத் தனது உடலில் உற்பத்திசெய்கிறது. இதை, 'எலெக்ட்ரோபோரஸ் எலெக்ட்ரிக்கஸ்’ (Electrophorus Electricus) என்றும் சொல்வார்கள். 20 கிலோ எடை கொண்டிருக்கும். இதன் மின்சாரம் உற்பத்திசெய்யும் உறுப்பை, 'சேக்ஸ்’ (Sachs) என்பர். இது, 500 முதல் 600 வோல்ட் மின்சாரத்தை உற்பத்திசெய்கிறது. இதன் ஒவ்வொரு செல்லும், 0.15 வோல்ட் மின் உற்பத்தியைச் செய்கிறது.

ரகசியம் தெரியுமா?

சாலை ஓரங்களில் இருக்கும் கைபம்புகள், சில இடங்களில் சிவப்பு, சில இடங்களில் மஞ்சள் மற்றும் பச்சை நிறங்களில் இருக்கும். அதன் ரகசியம் தெரியுமா?

பச்சை நிறம் : வருடத்தின் அனைத்து நாட்களிலும் நீர் இருக்கும்.

மஞ்சள் நிறம் : வருடத்தில் ஒருசில குறிப்பிட்ட காலங்களில் மட்டும் நீர் இருக்கும்.

சிவப்பு நிறம் : முற்றிலும் வற்றியது, நீர் இல்லை என்று அர்த்தம்.

இது பெரிய அதிசயம்!

பழங்கால உலக அதிசயங்கள் என்றதும் நினைவுக்கு வருவது கிசா பிரமிடுகள்தான். இது, 'குஃபுவின் பிரமிடு’ என்றும், 'சியோப்ஸ் பிரமிடு’ என்றும் அழைக்கப்படுகிறது. கி.மு.2,560 முதல் கி.மு.2,540 வரையிலான காலத்தில் இது கட்டப்பட்டிருக்க வேண்டும் என, பிரமிடு ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். இதன் உயரம், சுமார் 146.5 மீட்டர் (481 அடி). உலகிலேயே மனிதன் கட்டிய மிகப் பெரிய கட்டடம் இதுவே. இதில் 2.3 மில்லியன் மதிப்பீட்டிலான கற்கள் உள்ளன. எகிப்திய கலாசாரத்தின் சின்னமாக இது இன்றும் கம்பீரமாகக் காட்சி அளிக்கிறது.

துருப்பிடிக்காத ஆணி!

ஆணி என்றாலே துருப்பிடிக்கும். கப்பல்களில் அடிப்பாகத்தை இணைப்பதற்கு ஆணி அடித்தால், அந்த ஆணி கடல்நீரில் பட்டு துருப்பிடித்துவிடும். அதனால், எருமைமாட்டுக் கொம்புகளின் உறுதியான நுனிப் பகுதியில் இருந்து ஆணிகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த ஆணியின் சிறப்பே துருப்பிடிக்காது என்பதுதான்.

நீர்நில வாகனம்!

'கிப்ஸ் அக்குவாடா’(Gibbs aquada) என்பது, நீரிலும் நிலத்திலும் செல்லக்கூடிய அதிவேக வாகனம். நியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்தில் தயாரிக்கப்பட்டது. இது 160 கி.மீ வேகத்தில் நிலத்திலும், 50 கி.மீ வேகத்தில் நீரிலும் செல்லக்கூடிய திறன் வாய்ந்தது. இதன் சக்கரங்கள், படகு மற்றும் காருக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன. கிப்ஸ் அக்குவாடா தயாரிக்க ஓர் ஆண்டு பிடித்தது. 2004-ல் ரிச்சர்டு பரன்சன் என்பவர் ஆங்கிலக் கால்வாயை (English Channel) 4 மணி 20 நிமிடங்களில் அக்குவாடா மூலம் கடந்து, முந்தைய உலக சாதனையை (6 மணி நேரம்) முறியடித்துள்ளார்.