அடுத்தவர்களை சந்தோஷப்படுத்தி, அதன் மூலம் சந்தோஷப்படுவது ஒரு சிலரே. ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஆம்ஸ்ட்ராங் பெய்லி (Armstrong Baillie), அந்தச் சிலரில் ஒருவர்.

32 வயதாகும் ஆம்ஸ்ட்ராங், வாரத்தில் இரண்டு, மூன்று நாட்கள் ஒட்டகச்சிவிங்கி உடையை அணிந்துகொண்டு கிளம்பிவிடுகிறார். ஸ்காட்லாந்தின் தலைநகர், கிளாஸ்கோ (Glasgow) நகரில் உள்ள அலுவலகங்களுக்குச் சென்று காபி விற்கிறார். அறைகளைச் சுத்தம் செய்கிறார். தெரு ஓரம் மற்றும் பூங்காக்களில் டிரம்ஸ் வாசித்து, எல்லோரையும் சந்தோஷப்படுத்துகிறார்.

''கொஞ்ச நாட்கள் வேலை இல்லாமல் வீட்டில் சும்மா இருந்தேன். அப்போதுதான் இந்த யோசனை தோன்றியது. வேலையும் செய்ய வேண்டும். அதில், சமூக சேவையும் கலந்திருக்க வேண்டும் என்ற என் எண்ணத்துக்கு இது பொருத்தமாக இருக்கிறது'' என்கிறார் ஆம்ஸ்ட்ராங்.

இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தைத் தனக்கென்று எடுத்துக்கொள்ளாமல், நகரில் இருக்கும் குழந்தைகள் மருத்துவமனைக்குச் சென்று, அங்கே உள்ள குழந்தைகளுக்கு பொம்மைகள் வாங்கித்தருகிறார்.

கிளாஸ்கோ நகரம் முழுக்க ஆம்ஸ்ட்ராங் ஃபேமஸ் ஆகிவிட்டார். இப்போது, அவரது செல்லப் பெயர் Good Giraffe.