Published:Updated:

பென் டிரைவ்

பென் டிரைவ்

பென் டிரைவ்

பென் டிரைவ்

Published:Updated:
பென் டிரைவ்
பென் டிரைவ்

நமக்கு எல்லாம் ஏற்கெனவே தெரிந்த ஒரு விஷயத்தை, சமீபத்திய ஆய்வு ஒன்றில் புள்ளி விவரங்களுடன் சொல்லி இருக்கிறார்கள் அமெரிக்க விஞ்ஞானிகள். ஒரு மரம், 850 மனிதர்களைக் காப்பாற்றுகிறதாம். காற்று மாசுபடுவது மூலம் உலகம் முழுக்க வருடத்துக்கு 1 பில்லியன் மக்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறதாம். மரத்தினால் மனிதர்களுக்கு தூய்மையான ஆக்ஸிஜன் கிடைக்கிறது. காற்று மாசுபட்டால், மனிதனுக்கு இதயநோய், நுரையீரல் பாதிப்பு, ரத்த நாளங்கள் பாதிப்பு போன்ற பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்ளவேண்டி இருக்கும். எனவே, நகர்ப்புறங்களில் மரங்களை அதிகம் வளர்க்க வேண்டும் என்றும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இதனால், அமெரிக்காவில் 80 சதவிகிதம் மக்கள், நகர்ப்புறங்களில் மரம் வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.  மரத்தை நாம் காப்பாற்றினால், மரம் நம்மைக் காப்பாற்றும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பென் டிரைவ்

மனவளர்ச்சிக் குறைவான மற்றும் ஆட்டிசம் பாதிப்புடைய குழந்தைகளுக்கு, டால்ஃபின்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. கியூபாவின் தலைநகர், ஹவானாவில் உள்ள தேசிய மீன்கள் அருங்காட்சியகத்தில் இந்த டால்ஃபின் தெரபி அளிக்கப்படுகிறது. இந்த தெரபிக்கு வரும் குழந்தைகள், டால்ஃபினுக்கு உணவு போடுகிறார்கள். விளையாடி மகிழ்கிறார்கள். அதனைத் தொட்டு உணர்கிறார்கள். இதன் மூலம் அவர்களின் கவனிப்புத் திறன் அதிகமாகி, மூளையின் செயல்பாடு கூடுவதாகச் சொல்கிறார்கள். இந்த டால்ஃபின் தெரபிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. குழந்தைகளைப் பார்ப்பதில் டால்ஃபினுக்கும் டபுள் புத்துணர்ச்சி.

பென் டிரைவ்

மனதில் நம்பிக்கை இருந்தால், அன்றாட வாழ்வில் எதையும் இயல்பாகச் செய்யலாம் என்பதற்கு உதாரணமாக இருக்கிறார்கள், ஒரு தாயும் மகனும். அமெரிக்காவின் சிகாகோ நகரில் வசிக்கும் 35 வயது லிண்டா பனான் (Linda Bannon)  மற்றும் அவரது ஒன்பது வயது மகன் டிம்மி (Timmy) இருவருக்கும் பிறவியிலேயே கைகள் இல்லை. 'ஹோல்ட் ஓரம் சிண்ட்ரோம்’ (Holt-Oram syndrome)  எனும் மரபணு பாதிப்பினால் கருவிலேயே  எலும்புகளும் வளர்ச்சி அடையவில்லை.  இதயப் பிரச்னைகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கைகள் இல்லையே என்று தாயும் மகனும் கலங்கவில்லை. கால்களாலே தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்கிறார்கள். அதிலும் டிம்மி, சுறுசுறுப்புப் புலியாக வலம்வருகிறான். நீச்சல் அடிப்பது, ஹோம்வொர்க் எழுதுவது, கராத்தே, வீடியோ கேம் என அனைத்தையும் யாரையும் எதிர்பார்க்காமல் விறுவிறுப்புடன் செய்வது பார்ப்பவர்களை வியக்கவைக்கிறது. நம்பிக்கை மனிதர்கள்!

பென் டிரைவ்

'கூ...கூகூ’ எனக் கூவிக்கொண்டே கிளம்பி இருக்கிறது ஒரு ரயில். அந்த கூகூ சத்தம், பல்லுயிர் விழிப்பு உணர்வுக்கான அழைப்பு. நமது சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், புதுதில்லியில் உள்ள சப்தர்ஜங் ரயில் நிலையத்தில் இந்தக் கண்காட்சி ரயிலைத் தொடங்கினார். Science Express Biodiversity Special (SEBS)  என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த ரயிலில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, அறிவியல், வனத்துறை மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளைச் சார்ந்த சிறப்பு புகைப்படங்கள், தகவல்கள் இடம்பெற்றுள்ளன. ஜூலை 28-ம் தேதி தொடங்கி, 194 நாட்களில் 20 மாநிலங்களுக்குப் பயணித்து, 57 இடங்களில் நிற்கும். 30 லட்சம் பள்ளி மாணவர்கள் இந்தக் கண்காட்சியைக் கண்டு பயன் அடைவார்கள். தமிழகத்துக்கு நவம்பர் மாதம் வருகிறது. ஜோலார்பேட்டையில் 14 - 16 தேதிகள் வரையிலும், சேலத்தில் 17, தஞ்சாவூரில் 18, 19 தேதிகளிலும், ஈரோட்டில் 20 - 23 வரையிலும் இந்த அறிவியல் ரயில் நின்றுசெல்லும். ரயில் ஏற ரெடியா இருங்க!      

பென் டிரைவ்

சென்ற நூற்றாண்டில் ஒரு லட்சமாக இருந்தது புலிகளின் எண்ணிக்கை. தற்போது, 3,200 புலிகள் மட்டுமே இருப்பதாக World Wide Fund (WWF)   அமைப்பு சமீபத்தில் தெரிவித்துள்ளது. 2000-ம் ஆண்டு முதல் 2014 வரையில் 1,590 புலிகள், தோல் மற்றும் மருந்துகளுக்காக வேட்டையாடப்பட்டிருப்பதாக WWF  தெரிவித்துள்ளது. இப்படியே நீடித்தால், விரைவிலேயே புலிகளும், டைனோசர்களைப் போல அழிந்துவிட்ட விலங்காகிவிடுமோ என்று அஞ்சுகிறார்கள். புலிகளைக் காக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். ஆசியா கண்டத்தில் உள்ள 13 நாடுகளில் வாழும் புலிகளின் எண்ணிக்கையை 2022-க்குள் இரட்டிப்பு ஆக்க உயிரியலாளர்களால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. செயல் புலிகளாக களத்தில் இறங்குவோம்!

பென் டிரைவ்

இந்தியக் கடலோரப் பகுதிகளில் மட்டுமே காணப்படும் ஜெல்லி மீன்கள், முதன்முதலாக இந்திய ஏரி ஒன்றில் இருப்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். குஜராத் மாநிலம், அர்மபதா (Armabada) என்ற ஊரில் உள்ள ஏரியில்தான் இந்த ஜெல்லி உலா. Wildlife Trust of India எனும் அறக்கட்டளையைச் சேர்ந்த கடல் உயிரியல் ஆராச்சியாளர்கள், இந்த ஏரியில் ஆராய்ச்சி மேற்கொண்டதில், தலைகீழாக நீந்தும் ஒரு வகை ஜெல்லி மீனைக் கண்டுபிடித்துள்ளனர். 5 முதல் 6 ஹெக்டேர் பரப்பளவுகொண்ட இந்த ஏரியில், ஜெல்லி மீன்களை வேட்டையாடும் விலங்குகள் எதுவும் இல்லை. எனவே, ஜெல்லி மீன்கள் அதிக அளவில் இருக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.பலவாகப் பல்கிப் பெருகட்டும் ஜெல்லி.  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism