Published:Updated:

கண்ணே...கண்ணே... செல்லக் கண்ணே !

முனைவர் ஆ.குமரவேள் படங்கள் : தி.விஷய், கே.குணசீலன்

கண்ணே...கண்ணே... செல்லக் கண்ணே !

முனைவர் ஆ.குமரவேள் படங்கள் : தி.விஷய், கே.குணசீலன்

Published:Updated:

கண்ணு... கண்ணுக்குட்டி... குட்டிக்கண்ணு... இப்படி உங்கள் பாட்டியோ, தாத்தாவோ கொஞ்சி இருப்பாங்க. கண்ணுக்குட்டி மாதிரிதான் கன்றுக்குட்டியும் கிராமத்தில் ரொம்ப விசேஷம்... ரொம்பச் செல்லம்.

எருமைக் கன்றைவிட பசுவின் கன்றுக்குட்டி வேகமா இருக்கும். காரணம், உடம்பில் இருக்கும் சென்சரி நெர்வஸ் சிஸ்டம் மற்றும் மோட்டார் நெர்வஸ் சிஸ்டம். இதன் நரம்புகள்தான் மூளைக்குத் தகவல் கொடுப்பதும், மூளையின் கட்டளையை உடம்புக்குச் சொல்வதும். இந்தத் தகவல் பரிமாற்ற வேகம், எருமையைவிட பசுவுக்கு அதிகம் இருக்கும். அதனாலதான், ''எருமை மாட்டு மேல மழை பெய்த மாதிரி இல்லாமல், வேகமாக வா'' என்பார்கள். பசு மாட்டு மேலே மழைத்துளி லேசாப் பட்டாலே, தொழுவத்தைத் தேடி துள்ளி ஓடும்!

பசுவின் கன்றுக்குட்டிகள் விதவிதமான நிறங்களில் இருக்கும். எருமைக் கன்றுக்குட்டிகள் பெரும்பாலும் கறுப்பாகவே இருக்கும். காரணம், மெலனின். இந்த மெலனின் என்பது ஒரு பிக்மென்ட் (Pigment).  அதாவது, நிறத்தைத் தரும் செல். இது, அதிகமாக தோலில் இருந்தால், கறுப்பு நிறம் உண்டாகும். குறைச்சலாக இருந்தால், சிவப்பு நிறம். பசுவின் கன்றுக்குட்டிக்கு இந்த மெலனின் சுரப்பது குறைவு. மனிதர்களில்கூட கறுப்பு நிறமாக இருப்பவர்களுக்கு மெலனின் அதிகம் சுரக்கும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கண்ணே...கண்ணே... செல்லக் கண்ணே !

 அம்மா என்று நாம் கூப்பிடுற மாதிரியே கன்றுக்குட்டியும் கூப்பிடுதே எப்படி? நம்ம குரலுக்கு பொறுப்பு லேரிங்ஸ் (Larynx). இதை வாய்ஸ் பாக்ஸ்னு சொல்லுவாங்க. இந்த லேரிங்க்ஸ், நான்கு குருத்து எலும்புகளால் ஆனது. அதென்ன குருத்து எலும்பு? குருத்து எலும்பு நல்லா வளையும். வெறும் எலும்பு லேசாதான் வளையும். இந்தக் குருத்து எலும்புகள் நமக்கும் கன்றுக்குட்டிக்கும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருக்கும். காற்றானது, இந்தக் குருத்து எலும்புகளில் மோதி, வெளியில் குரலாக வருகிறது.

கன்றுக்குட்டியின் உடம்பில், ஆட்டுக்குட்டியின் உடம்பில் இருக்கிற மாதிரியே சில ஆச்சர்யங்கள் இருக்கு. கன்றுக்குட்டியின் மேல் தாடையில் முன்பற்கள் இருக்காது. அசை போட இந்த அமைப்பு வசதியாக இருக்கும். அதனாலதான், கன்றுக்குட்டியின் வாய்க்குள் சிலர் தைரியமாகக் கையை விடுவாங்க. கடிச்சாலும் பெருசா காயம் ஆகாது.

கண்ணே...கண்ணே... செல்லக் கண்ணே !

பசு, கன்று  இதுகளோட சாணத்தில் கிருமி நாசினி, பயிருக்குத்தேவையான சத்து இருக்கு. அதனாலதான் வீட்டை மெழுகுவதற்கு சாணத்தையும், வீட்டைச் சுத்தி பூச்சிகள் வராமல் இருக்க சிறுநீரையும் தெளிப்பாங்க.

பசுவின் நெய், தயிர், பால், சாணம், சிறுநீர் ஆகிய அஞ்சு பொருள்களையும் ஒண்ணாக் கலந்து கிடைப்பது பஞ்சகவ்யம். இதை, மருந்தாக அந்தக் காலத்துல பயன்படுத்தியதாகவும் சொல்வாங்க. இதை, வயலில் தெளிச்சா பயிர் நல்லா வளரும்னு சொல்றாங்க.

கண்ணே...கண்ணே... செல்லக் கண்ணே !

கன்றுக்குட்டி வயிற்றில் நான்கு அறைகள் இருக்கு. ரூமன், ரெடிகுலம், ஓமேசம் அபோமாஃபம் எனப் பெயர். அபோமாஃபம் (Abomafum)  ஜீரணம் நடக்கிற இடம். மத்த மூணு அறைகளிலும் சாப்பிட்ட செடி, இலை, தழைகளை வெட்டுகிற, அரைக்கிற வேலைகள் நடக்கும். கன்றுக்குட்டி குடிக்கும் பால், உணவுக் குழாயில் இருந்து நேராக அபோமாஃபமத்துக்குப் போய்டும். ரூமன், ரெடிகுலம், ஓமேசம் ஆகியன இந்த மூணு அறைகளையும் தொடாமல் பைபாஸ் மாதிரி போறதுக்கு ஈசோபாஜியல் குரூவ் (Oesophageal groove)  என்று பெயர். ஆச்சர்யமான விஷயம் இது.

கண்ணே...கண்ணே... செல்லக் கண்ணே !
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism