Published:Updated:

எங்களைக் காப்பாற்றுங்க !

க.பிரபாகரன்

எங்களைக் காப்பாற்றுங்க !

க.பிரபாகரன்

Published:Updated:
எங்களைக் காப்பாற்றுங்க !

நல்லதை எடுத்துச்சொல்லி, மற்றவர்கள் மனதில் விழிப்பு உணர்வை ஏற்படுத்துவது சாதாரண விஷயம் அல்ல. சலிப்பு இல்லாமல் செய்ய வேண்டும். அப்படி சலிக்காமல் சொல்லி, 50-வது வருடத்தைக் கொண்டாடுகிறது, 'சிவப்புத் தகவல் பட்டியல்’ என்னும் ரெட் டேட்டா லிஸ்ட் (RED DATA LIST).

அழியும் நிலையில் உள்ள உயிரினங்களான விலங்குகள், தாவரங்கள் மற்றும் ஈடு இணையற்ற இயற்கையின் உன்னதப் படைப்புகளின் உயிர் காக்கும் நிறுவனம், சர்வதேச இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (International Union for Conservation of Nature - IUCN).இந்த நிறுவனம் வெளியிடுவதுதான், சிவப்புத் தகவல் பட்டியல்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எங்களைக் காப்பாற்றுங்க !

இதுவே, சர்வதேச அளவிலான முதல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம். இது, வருடந்தோறும் வெளியிடும் சிவப்புத் தகவல் பட்டியல், 1964-ல் ஆரம்பிக்கப்பட்டது. இதன் தலைமை இடம் இங்கிலாந்து. இதன் சிறப்பான பணிக்காக, மொரோக்கோ நாட்டின் 2014-ம் ஆண்டுக்கான 'பிரின்ஸ் ஆல்பர்ட் 2’ பரிசைப் பெற்றுள்ளது.

மனிதர்களின் அலட்சியத்தால் உயிரினங்கள் வதைபடுவதைப் பட்டியலின் மூலம் உஷார் செய்து, பாதுகாப்பதன் அவசியத்தையும் வலியுறுத்துகிறது. உயிரினங்களின் நிலைப்பாட்டினைப் பொறுத்து, பல்வேறு வகைகளாகப் பிரிக்கிறது.

எங்களைக் காப்பாற்றுங்க !

சமீபத்தில், மும்பை இயற்கை வரலாறு சங்கம் மற்றும் சர்வதேசப் பறவைகள் வாழ்வு அமைப்புகள் நடத்திய ஆய்வின் அடிப்படையில் கிடைத்த தகவல் களைத் தன் சிவப்புப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவில் அழிந்துவரும் பறவைகள் பட்டியலில், விரைவில் 173 பறவை இனங்கள் இடம்பெறும் என்ற அபாய அலாரத்தை அடித்திருக்கிறது.

எங்களைக் காப்பாற்றுங்க !

இமாலயன் கிரிபான், சிவப்புத் தலை ஆந்தை, அந்தமான் பச்சைப் புறா, தாடிக் கழுகு, கம்பளிக் கழுத்து நாரை என நீள்கிறது அந்தப் பட்டியல்.

வேட்டையாடுதல், அதிகரிக்கும் வேதியியல் பொருள்களின் பயன்பாடு, அழிந்துவரும் காடுகள், இயற்கை மீது மனிதனின் அக்கறையின்மை போன்றவற்றால், அரிய உயிரினங்கள் அழிந்துவருகின்றன.

எங்களைக் காப்பாற்றுங்க !

'ஏதோ ஒரு பறவை, ஒரு விலங்கு இனம் அழிந்தால் நமக்கு என்ன?’ என்று நினைப்பது அன்பு இன்மை மட்டும் அல்ல, அறியாமையும்கூட. ஒரு சிட்டுக்குருவியின் அழிவு, பல்வேறு சுற்றுச்சூழல் மாறுபாட்டை உண்டாக்கி, வேறு பல உயிரினங்களையும் பாதிக்கும்.

எங்களைக் காப்பாற்றுங்க !

'எங்களைக் காப்பாற்றுங்கள்’ என்று அலறும் இந்த உயிரினங்களைக் காப்பாற்ற, நாம் ஒவ்வொருவரும் சிவப்புத் தகவல் பட்டியல் அமைப்பாக மாறவேண்டியது மிக அவசியம்!

எங்களைக் காப்பாற்றுங்க !
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism