Published:Updated:

வீர வணக்கம் வெற்றிக் கடிதம் !

ஆயிஜா இரா.நடராசன், ஸ்யாம்

அன்புள்ள ஹரீஷ் சந்திராவுக்கு,

வீரவணக்கம்.

இந்தியத் திருநாட்டின் வீரக் குழந்தைகளில் உங்களுக்குத் தனி இடம் உண்டு. 1957 அக்டோபர் 2-ல் நடந்த சம்பவத்தை யாராலும் மறக்க முடியாது. தேசத் தந்தை மகாத்மா காந்தியடிகளின் பிறந்த தினம். பிரதமர் நேரு தலைமையில் தில்லியில் பிரமாண்ட விழா. மிகப் பெரிய கூட்டம் ராம்லீலா மைதானத்தில் கூடியிருந்தது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சாகச நிகழ்ச்சிகளுக்காக பள்ளிச் சாரண சாரணியர் முதல் நமது முப்படைகள் வரை தேர்வு பெற்றவர்கள் அங்கே கூடி இருந்தார்கள். அவர்களில் உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஒரு சிறிய கிராமத்துப் பள்ளியின் சாரணனாகிய நீங்களும் இருந்தீர்கள். அலங்காரத் துணி ஷாமியானாக்கள் மேற்கூரையாக அமைக்கப்பட்டிருந்தன. திரும்பிய பக்கம் எல்லாம் மக்கள். கூட்டத்தைச் சமாளிக்க குதிரைகளில் காவல்படை பட்டாலியன்கள். அனைவரையும் பார்த்துப் புன்னகைத்தபடி... பிரதமர் ஜவஹர்லால் நேரு, திறந்த ஜீப்பில் தனது மகள் இந்திராவுடன் வந்தார்.

சாரண சாரணியர் அமர்ந்திருந்த சௌத் பிளாக்கிலிருந்து நீங்கள் எழுந்து, ஓவென கூச்சலிட்டபடி கையசைக்கிறீர்கள். வீர முழுக்கமாக உங்களது குரல் கேட்கிறது. அங்கே வரிசையாக அமர்ந்திருந்த இந்திய சாரண சாரணியரின் வரவேற்புக் கைதட்டல். நேரு, உங்கள் அனைவரையும் பார்த்து கையசைக்கிறார். அழகான நீலச் சீருடையில், நீங்கள் அனைவரும் ஒன்றுபோல இயங்கியது அவருக்கு மட்டற்ற மகிழ்ச்சியைத் தந்தது.

இந்திய ராணுவ வீரர்களின் சாகச நிகழ்ச்சிகள் தொடங்கின. 42 பேர் ஒரே மோட்டார் பைக்கில் இந்திய தேசியக் கொடியுடன் அரங்கத்தை ஒரு சுற்றுச் சுற்றியது பலரைக் கவர்ந்தது. பைக் சீட்டில் தலைகீழாக நின்றதோடு, பைக்கையும் ஓட்டிய இருவருக்கு பலத்த கைதட்டல். பலூன்களைப் பறக்க விட்ட விமானங்கள், வளையம் வளையமாகத் தாவிய போலீஸ் மோப்ப நாய்கள், பூக்களை உதிர்த்தபடி தாழப்பறந்த ஹெலிகாப்டர்கள்...

வீர வணக்கம் வெற்றிக் கடிதம் !

திடீரென்று 'தீ... தீ... ஐயோ நெருப்பு’ என்று பலரும் அலறுவது கேட்டது. ஹரீஷ்! நீங்கள் இருந்த இடத்துக்கு இடதுபுறமாக மின்கம்பி உரசி, தீப்பொறி உருவாகி, ஷாமியானாவில் புகையுடன் தீப்பற்றியது. கிட்டத்தட்ட அனைவருமே அலறியடித்து ஓடத் தொடங்கினார்கள். மேடையில் இருந்த நேரு, பதற்றத்துடன் எழுந்து நின்றார். காவல்துறையினர் பலருக்கு என்ன நடந்ததென்றே புரியவில்லை.

இந்த நிலையில், நீங்களும் ஓடி இருக்கலாம் ஹரீஷ் சந்திரா. ஆனால், உடனடியாக செயலில் இறங்கினீர்கள். உங்கள் சாரணர் இயக்கக்  கத்தியை இடுப்பிலிருந்து உருவியெடுத்து, தூண் கம்பம் ஒன்றில் ஏறி, எரிந்துகொண்டிருந்த ஷாமினா டென்ட்டை நடுவாகக் கிழித்தீர்கள். அது,  மைதானத்தின் ஓரமாகச் சரிந்து வீழ்ந்து, யாருக்கும் பாதிப்பில்லாமல் எரிந்தது. அதற்குள் தீயணைப்பு வாகனங்கள் வந்துவிட்டன. எத்தனையோ பேரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டன.

வீர வணக்கம் வெற்றிக் கடிதம் !

14 வயது சிறுவனான உங்களது வீரத்தை நிரூபித்து நாட்டுக்கு வழிகாட்டினீர்கள். ஆபத்தின்போது பதட்டம் இன்றிச் செயல்பட, எப்போதும் தயாராய் இரு Be Prepared எனும் சாரணர் முழக்கத்துக்கே நீங்கள் உதாரணம் ஹரீஷ்.

பிறகு, பிரதமர் ஜவஹர்லால் நேரு செய்ததுதான் வரலாறு. ராஷ்ட்ரீய வீர்த புரஸ்கார் (Rashtriya Veerta Puraskar) எனும் விருதை நிறுவினார். 6 முதல் 18 வயது வரையிலான குழந்தைகளுக்கு இந்த விருது வழங்கப்படும் என்று அறிவித்தார். பல நூறு பேரின் உயிரை காப்பாற்றிய உங்களை, யானை மீது ஏற்றி, தலைநகர் தில்லியை வலம்வரவைத்து, முதல் விருதை உங்களுக்குக் கொடுத்தார்.

இப்போதும், குழந்தைகள் நல்வாழ்வுக்கான இந்திய கவுன்சில் (Indian Council for Child Welfare - ICCW) வீரதீரச் செயல் புரிந்த சிறுவர், சிறுமிகளை ஆண்டுதோறும் தேர்வுசெய்து கௌரவிக்கிறது. இப்படி, ஒரு புதிய விஷயத்துக்கு வித்திட்ட ஹரீஷ் சந்திரா, உங்களுக்கு சபாஷ். வீரத்துக்கு உதாரணமாக இந்திய ராணுவத்தில் சேர்ந்து பணிபுரிந்தீர்களே அதற்கும் ஒரு சல்யூட்!

இப்படிக்கு
சுட்டி இந்தியா