Published:Updated:

ஆயிஷா அப்பாவுக்கு வாழ்த்துகள் !

யுவா, ஷெ.முருகன்

 ஆயிஷா இரா.நடராசன்.

ஒரு சிறுவர் புத்தகம், லட்சம் பிரதிகள் என்ற எல்லையைத் தாண்டும் என்பதற்கு உதாரணம், இவரது 'ஆயிஷா’ குறுநாவல். சிறுவர்களுக்கான சிறுகதைகள், நாவல், அறிவியல், வகுப்பறை விவாதம் என எந்த நேரமும் சிறுவர் உலகிலேயே வாழ்பவர் நடராசன்.

சுட்டி விகடனில், 'யுரேகா கோர்ட்’, 'ஐடியா அகிலன்’, 'சுட்டி நாயகன்’ எனத் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கும் சிறுவர் இலக்கியப் படைப்பாளி. கடலூர் கிருஷ்ணசாமி நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராகப் பணிபுரியும் நடராஜனுக்கு, சிறந்த சிறுவர் எழுத்தாளருக்கான 'பால சாகித்ய அகாதமி விருது’ இந்த ஆண்டு கிடைத்திருக்கிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''இது எனக்கான விருது என்பதைவிட, இந்தக் கணிப்பொறி விளையாட்டுக் காலத்திலும் புத்தகங்களை ஆர்வமாகப் படிக்கும் சுட்டிகளுக்காகப் புத்தகங்களை வெளியிடும் பதிப்பகங்களுக்கும் கிடைத்த விருது'' என்கிறார் நடராசன்.

ஆயிஷா அப்பாவுக்கு வாழ்த்துகள் !

சிறந்த படைப்பு என்பது, நமது கலாசாரம், பண்பாடு போன்றவற்றை சொல்ல வேண்டும். அதே நேரம், இன்றைய உலகுக்குத் தேவையான விஷயங்களையும் அளிக்க வேண்டும். அந்த வகையில் விருது பெற்ற இவரது 'விஞ்ஞான விக்கிரமாதித்தன் கதைகள்’ பழைமைக்கும் புதுமைக்கும் ஒரு பாலம்.

ஆயிஷா அப்பாவுக்கு வாழ்த்துகள் !

வேதாளத்தைச் சுமந்துசெல்லும் விக்கிரமாதித்யனிடம், அது ஒவ்வொரு கதையாகச் சொல்கிறது. பில்லி, சூனியம் போன்ற மூடநம்பிக்கைகள், சர்க்கரை நோய்க்கான காரணம், போலியோ சொட்டு மருந்தின் அவசியம் போன்றவற்றை அந்தக் கதைகளில் அழகாகச் சொல்லி, விஞ்ஞானத்தை நம் மனதில் விதைக்கிறார் ஆசிரியர். பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள இந்தப் புத்தகத்தை வாசித்துவிட்டு, ஆயிஷா அப்பாவுக்கு நம் வாழ்த்தைச் சொல்வோம்.

அது, அவருக்கு கோடி விருதுகள் பெற்ற மகிழ்ச்சியை அளிக்கும்.