Published:Updated:

பென் டிரைவ்

பென் டிரைவ்

பென் டிரைவ்

நான்கு தூண்களை நிறுத்தி, மேலே தகரத்தால் மூடி, பெயின்ட் அடித்தால், பஸ் ஸ்டாப் ரெடி. ஆனால், அதிலும் ரசனையைக் காட்ட முடியும் என்கிறார்கள் அமெரிக்கர்கள். பஸ் என்ற ஆங்கில எழுத்தைக்கொண்டே பேருந்து நிறுத்தம் ஒன்றை உருவாக்கி இருக்கிறார்கள். அமெரிக்காவின் மேரிலாந்து (Maryland) மாநிலத்தில் உள்ள பால்டிமோர் (Baltimore) நகரில்தான் இந்த வித்தியாசமான பேருந்து நிறுத்தம். மரம் மற்றும் இரும்பு பட்டைகளைக்கொண்டு உருவான இந்த எழுத்துகள் ஒவ்வொன்றும் 14 அடி உயரம், 7 அடி நீளம். மழை, வெயில், காற்று போன்ற வானிலை மாற்றங்களுக்கு ஏற்ப, இதை மாற்றி அமைக்க முடியும் என்பது இன்னொரு ஸ்பெஷல். பஸ் லேட்டா வந்தாலும் போரடிக்காமல் இருக்கும்!

பென் டிரைவ்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கண் தானம் பற்றிய விழிப்பு உணர்வை ஏற்படுத்த, ‘Bangalore Blind Walk 2014’   என்ற நிகழ்ச்சி, பெங்களூருவில் ஆகஸ்ட் 24-ல் நடத்தப்பட்டது. இதில், சிறுவர்கள் முதல் பெரியோர் வரை கண்களைக் கட்டிக்கொண்டு ஒரு கிலோமீட்டர் நடந்து சென்றனர். பார்வையற்றோரின் சிரமங்களைப் புரிந்துகொள்ளும் வகையில் இந்த நிகழ்ச்சி அமைந்தது. இந்தியாவில் நூறில் ஒருவர், பார்வையற்றவராகப் பிறக்கிறார். ஆண்டுதோறும் கருவிழி மாற்றம் செய்வதற்காக 1,40,000 கருவிழிகள் தேவைப்படுகின்றன. கண் தானம் செய்பவர்கள் குறைந்துகொண்டே இருப்பதால், ஆண்டுக்கு 35,000 கருவிழிகள்தான் கிடைக்கின்றன. இந்த நிலை மாற வேண்டியது மிக மிக அவசியம். பார்வை உள்ளோர் அறிவு விழித்துக்கொள்ள வேண்டும்!  

பென் டிரைவ்

 கோயம்புத்தூர் கேன்சர் ஃபவுண்டேஷன் சார்பில் 'மேக் ஏ விஷ் இந்தியா’ (Make A Wish India) என்ற நிகழ்ச்சியில், மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சிறுவர்களிடம் அவர்களின் லட்சியம் பற்றி கேட்டுள்ளனர். அதில் சேலம், எலத்தூர் கிராமத்தைச் சேர்ந்த 7-ம் வகுப்பு மாணவர் குருமூர்த்தி, போலீஸ் அதிகாரி ஆக வேண்டும் என்றார். இவர் ஆசையை நிறைவேற்ற கலெக்டர், போலீஸ் கமிஷ்னரை வரவழைத்து, குருமூர்த்திக்கு சீருடை அணிவித்து, மருத்துவமனை முழுவதும் சுற்றிவந்தனர். எல்லோரும் குருமூர்த்திக்கு சல்யூட் அடித்தவுடன் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப்போனார். நிஜமாகவே போலீஸ் அதிகாரி ஆக வாழ்த்துகள் குரு!    

பென் டிரைவ்

கேரளாவின் பாலக்காடு மாவட்டம், பட்டம்பி என்ற ஊரில் இருக்கிறது, மெஸ் சர்வதேசப் பள்ளி (MES International School). இங்கே, முதன்முறையாக பாடப் புத்தகங்களுக்குப் பதிலாக 'டேப்லெட்’ முறையைக் கொண்டுவந்திருக்கிறார்கள். இப்போது, 8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை இந்த முறையைப் பின்பற்றுகிறார்கள். சுமார் 552 டேப்லெட்களை மாணவர்களுக்கு கொடுத்திருக்கிறார்கள். அடுத்த கல்வி ஆண்டில், 4 முதல் 7-ம் வகுப்பு வரையிலும்  கொண்டுவரத்  திட்டமிட்டுள்ளனர். நமக்கும்  சீக்கிரம் முதுகுச் சுமை குறையட்டும்!