Published:Updated:

கொக் கொக் கோழிக்கு ருசி தெரியுமா ?

முனைவர் ஆ.குமரவேள் கே.குணசீலன்

கிராமத்துப் பெண்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடிவரும் கோழியைப் பார்த்திருக்கிறீர்களா? கோழிக்கு தன் எஜமானியை நன்றாக அடையாளம் தெரியும். வேறொருவர் கூப்பிட்டால், அவரிடம் போகாது. கோழியின் மூளையில் உள்ள நினைவாற்றல் பகுதியில்(Hippocampus)பதிவாகிவிடுகிறது, எஜமானியின் முகம்.

கிராமத்து விருந்தாளியைக் கவனிக்க, கோழி அடிச்சுக் குழம்பு வைப்பாங்க. அதுவரை செல்லமாக இருந்த கோழி, குழம்பாகும்போது எஜமானிக்கு அழுகை வரலாம். ஆனால், கோழிக்குக் கண்ணீர் வராது. கண்ணீர் சுரப்பியும் வியர்வைச் சுரப்பியும் கோழிக்கு இல்லை. சாக்கடையும் பூக்கடையும் கோழிக்கு ஒன்றே. ஏன்னா, கோழிக்கு மோப்ப சக்தி இல்லை. பசி, ருசி அறியாதும்பாங்க. கோழிக்கு பசிச்சாலும் ருசி தெரியாது. அதன் நாக்கில் சுவை அரும்புகள் இல்லை.

கொக் கொக் கோழிக்கு ருசி தெரியுமா ?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கோழியின் வயிற்றில் இரண்டு அறைகள் இருக்கு. ஒன்று, புரோவென்டிரிகுளஸ் (Proventriculus) இதில்தான் ஜீரணம் நடக்கும். இன்னொரு அறை, கிஸ்ஸார்டு (Gizzard). இது, கிரைண்டர் மாதிரி. உணவோடு கல்லையும் மண்ணையும் கோழி விழுங்கும்போது, இந்த கிஸ்ஸார்டு அரைச்சுடும். நம் பற்கள் செய்யும் வேலையை கிஸ்ஸார்டு செய்யுது.

கோழி, கழுத்தை அடிக்கடி நீட்டிக்கிட்டே இருக்கும். ஏன்னா, கோழியின் கண்களில் இருக்கிற தசைகள் வலுவாக இல்லை. பொருள் இருக்கும் தூரத்துக்கு ஏற்ற மாதிரி கண்ணு அட்ஜஸ்ட் பண்ணாது. அதனால்,  கழுத்தை நீட்டிப் பார்க்குது. அதே நேரம், கோழியின் கண்ணில் பெக்டென் (Pecten) என்ற அமைப்பு இருக்கு. இதைவெச்சு காலை, மாலை, மதியம் கண்டுபிடிக்கும். ஆனால், ராத்திரியில் கோழிகளுக்கு கண்ணு தெரியாது.

கொக் கொக் கோழிக்கு ருசி தெரியுமா ?

கொக்கரக்கோ எனக் கூவி, அலாரம் அடிச்சு எழுப்புற வேலையைச் செய்யும் சேவல். அதனோட கொண்டை சிவப்பா, அழகா இருக்கும். சேவலின் இன்னொரு விசேஷம், கால் முட்டிக்குக் கீழே, கத்தி மாதிரி கூர்மையா ஒரு விரல் இருக்கும். இது, சேவலுக்கு ஒரு தற்காப்பு ஆயுதம். இதன் பெயர் ஸ்பர் (Spur).இந்தக் கொண்டை, ஸ்பர் இதெல்லாம் கோழிகளைக் கவர, இயற்கை தந்திருக்கும் வரங்கள்.

 கோழிகளைப் போட்டு மூடிவைக்கிற கூடைக்கு பஞ்சாரம் என்று பெயர். காலையில் கூடையைத் திறந்தால், சாயந்திரம் அதுவாவே கூடையைச் சுத்திச் சுத்தி வரும். கூடையைத் தூக்கி நிமிர்த்தினா, அதுவாகவே உள்ள போகும். இது, அனிச்சைச் செயல். நாமும் அப்படித்தான் ஒரு செயலை தொடர்ச்சியாகப் பண்ணிகிட்டே இருந்தால், கொஞ்ச நாளில், தானாகவே செய்ய ஆரம்பிச்சிருவோம்.

பைஞ்சுக் கோழி (Silky Fowl), சிலிப்பிக் கோழி (Frilled Feathers)தொப்பிக் கோழி (Police Cap) என்று பல வகைக் கோழிகளை செல்லப் பறவையாக மக்கள் வளர்க்கிறார்கள். சர்க்கஸில் உள்ள பஃபூன் மாதிரியான தோற்றத்தில் ஒரு கோழி இருக்கு. வெள்ளை மற்றும் கருநீல வண்ணத்தில் ரொம்பச் சின்னதாக, அதிகபட்சம் அரைக்கிலோ எடைதான் இருக்கும். வெள்ளிக் கோழி, தங்கக் கோழி, மயில் கோழி என இறகின் நிறத்தை வெச்சும் பெயர் இருக்கு. ஆண் கோழியின் இறகுகள், பெண் கோழியைவிட கவர்ச்சியாக இருக்கும்.

முட்டையிட்டு அடைகாக்கும் தாய்க் கோழி, தன் குஞ்சுகளுக்கு இரையைக் காட்டும். ஆனால், ஊட்டாது. கோழிகள் இந்த மாதிரி இல்லை. தாய்க் கோழி இரை தேடும்போது குஞ்சுகளும் செல்லும். தாய்க் கோழி, தன் சத்தத்தின் மூலம் குஞ்சுகளுக்கு வழிகாட்டி, எச்சரிக்கையும் செய்யும். கோழிகளுக்கு ரொம்பப் புடிச்ச டிஷ் கரையான். அதேசமயம், பெருங்கரையான் (Ant Termite) சாப்பிட்டால், குஞ்சுகள் செத்துப்போயிடும். தாய்க் கோழி பார்வையில் பெருங்கரையான் பட்டால், தன் குஞ்சுகளுக்கு குரல் கொடுத்து எச்சரிக்கை பண்ணிடும்.

கொக் கொக் கோழிக்கு ருசி தெரியுமா ?

கோழிகள் நல்லா ஓடும். வீட்டுக் கூரை வரைக்கும் பறக்கும். கால்களில் முன்நோக்கி மூணு விரல்களும் பின்நோக்கி ஒரு விரலும் இருக்கும். அந்த விரல்களால் மரக்கிளையையோ, கூரை முகப்பையோ மணிக்கணக்கில் விடாமல் பிடிச்சிக்கும்.

கொக் கொக் கோழிக்கு ருசி தெரியுமா ?