Published:Updated:

வலை உலா - அசத்தலான ஆன்லைன் அகராதிகள் !

சைபர்சிம்மன் தி.குமரகுருபரன்

வலை உலா -  அசத்தலான ஆன்லைன் அகராதிகள் !
வலை உலா -  அசத்தலான ஆன்லைன் அகராதிகள் !

படிக்கும்போதோ, வீட்டுப்பாடம் செய்யும்போதோ புரியாத சொற்களுக்கு அர்த்தம் தெரிய, டிக்ஷ்னரியைப் புத்தக அலமாரியில் தேடியது அந்தக் காலம். இப்போது, இணையத்திலேயே அகராதிகள் குவிந்திருக்கின்றன. வார்த்தைகளுக்கான பொருளை காட்சியாகவும் காணவைக்கின்றன. இந்தக் காட்சி அகராதிகளுக்கு அழகான உதாரணம், வேர்ட்சென்ஸ்.மி (wordsense.me)

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இதில், இடது பக்கத்தில் தேடும் சொல்லுக்கான அர்த்தம் கொடுக்கப்பட்டிருக்கும். அந்தச் சொல்லுக்கு பெயர்ச்சொல்லாக என்ன பொருள், வினைச்சொல் இருந்தால், அதன் அர்த்தம் தெரிந்துகொள்ளலாம். அந்தச் சொல்லுக்கு இணையான சொற்கள் மற்றும் தொடர்புடைய சொற்களின் பட்டியலும் இருக்கும். அவற்றில் எந்தச் சொல்லை க்ளிக் செய்தாலும், விளக்கமும் வார்த்தை வரைபடமும் வரும். நீங்கள் ஏற்கெனவே தேடிய வார்த்தைகளை, இது நினைவில்வைத்தும் அடையாளம் காட்டும்.

ஆங்கிலம் அறிந்துகொள்வதில் ஆர்வம் இருந்தால், இந்த இணைய அகராதி உங்களைச் சுண்டி இழுக்கும். இணைய விளையாட்டு போல நேரம் போவதே தெரியாமல் பயன்படுத்தலாம்.

வலை உலா -  அசத்தலான ஆன்லைன் அகராதிகள் !

அகராதியைப் பாடம் படிப்பது போலவும் படிக்கலாம். கிட்ஸ்.வேர்ட்ஸ்மித் (kids.wordsmyth)  இதை சாத்தியமாக்குகிறது. இதில், புரியாத வார்த்தைக்கான பொருள் தேடலாம். அந்த வார்த்தைக்கான விளக்கத்தை விரிவாகப் பார்க்கலாம். சரியான உச்சரிப்பை ஆடியோவாகக் கேட்கலாம். ஒவ்வொரு சொல்லுக்கும் வார்த்தை ஆராய்ச்சி, வார்த்தை வரலாறு, வார்த்தைப் பாகங்கள் ஆகிய வசதிகள் இருக்கும். இதில், வார்த்தை ஆராய்ச்சியை க்ளிக் செய்தால், அந்தச் சொல்லின் பயன்பாடு தொடர்பான வாக்கியங்கள், அந்தச் சொல் தோன்றிய வரலாற்றை அறியலாம். வார்த்தைப் பாகங்கள் பகுதியில், எந்த ஒரு சொல்லையும் பகுதி பகுதியாகப் பிரித்து பொருள் அறியலாம்.

வார்த்தைத் தேடலுக்கு, முகப்புப் பக்கத்தில் வார்த்தைகளுக்கான வழிகாட்டி எனும் வர்ணனையோடு பல்வேறு தலைப்புகள் இருக்கும். எந்தத் தலைப்பை க்ளிக் செய்தாலும், அந்தத் தலைப்புக்கான முக்கியச் சொற்களின் பட்டியல் வரும். அந்தச் சொற்களுக்கான பொருளைத் தெரிந்துகொள்ளலாம். வார்த்தைகளின் தங்கச்சுரங்கம் என்று இந்த வசதியைக் குறிப்பிடலாம்.

வலை உலா -  அசத்தலான ஆன்லைன் அகராதிகள் !

வார்த்தை விளையாட்டுப் புதிர்களும்  சிறுவர்களுக்கான தனிப் பகுதியில் உள்ளன. அதில் எல்லாமே காட்சிகளாக விளக்கப்பட்டிருப்பது சபாஷ் ரகம். அகராதிகளைப் பயன்படுத்துவது இத்தனை சுவாரஸ்யமானதா என்ற வியப்பை ஏற்படுத்தி, நம்மை ஆங்கிலப் புலியாகவும் மாற்றுகின்றன, இந்த அகராதிகள்.

வலை உலா -  அசத்தலான ஆன்லைன் அகராதிகள் !