Published:Updated:

சுட்டி ஸ்டார் நியூஸ்

சுட்டி ஸ்டார் நியூஸ்

வீடு வாங்கலையோ வீடு!

 சொந்தமா வீடு வாங்கறது எவ்வளவு கஷ்டம்... ஆனால், '50 டாலரில் வீடு ரெடி’ என்கிறார், கலிஃபோர்னியாவின் ஓக்லாண்ட்(Oakland) நகரில் வசிக்கும் கிரேகோரி பிகான் (Gregory Began). இவர் மரக்கட்டைகள், பழைய குளிர்சாதனப் பெட்டிகளின் கதவுகள், பழைய வண்டிகளின் மேற்கூரைகள் எனப் பல்வேறு பொருள்களைப் பயன்படுத்தி, ஒரு வீட்டை உருவாக்கி இருக்கிறார். வீட்டின் அடியில் சக்கரங்களையும் பொருத்தி, தேவைப்படும் இடத்துக்கு தள்ளிச் செல்லவும் வசதி செய்திருக்கிறார். வருங்காலத்தில் வீட்டையே, டோர் டெலிவரி செய்வார் போல.  

சுட்டி ஸ்டார் நியூஸ்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கடல் கிளிகள்!

கிளி என்றதும் கூண்டும் ஜோசியமும் நினைவுக்கு வரும். இதெல்லாம் செய்யாத ஒரு பறவையை கடல் கிளி என்கிறார்கள். பஃபின் (Puffin) எனப்படும் இந்தக் கடல் பறவையின் அலகு, முக்கோண வடிவத்தில் பெரியதாக இருக்கும். நீருக்குள் தலைகீழாகப் பாய்ந்து செல்லும். கடற்கரை மற்றும் தீவுகளில் உள்ள செங்குத்துப் பாறைகளில் வசிக்கும். இவற்றில் பல வகைகள் உள்ளன. அட்லாண்டிக் கடல் கிளிகள், சுமார் 12 அங்குலம் நீளம் உடையவை. கொண்டை இறகுகள் மற்றும் கொம்புகள் உள்ள கடல் கிளிகளும் உள்ளன.

சுட்டி ஸ்டார் நியூஸ்
சுட்டி ஸ்டார் நியூஸ்

பெருந்தீனி மீன்!

'சாப்பாட்டு ராமன்’ என்ற வார்த்தையைக் கேட்டிருப்பீங்க. உங்களுக்கு மீன் மொழி தெரிந்திருந்தால், தண்ணீரிலும் இந்த வார்த்தையைக் கேட்கலாம். டிரௌட் ச்ச்ச்)  என்பது வட அமெரிக்காவில் காணப்படும் ஒரு  நன்னீர் மீன். நாள் ஒன்றுக்கு, சராசரியாக 18 மணி நேரம் சாப்பிடும். சிறு மீன்கள், பாசிகள் என இந்த மீனைக் கடந்து போகும் உயிரினத்தின் ஆயுள் அந்த நிமிஷத்தோடு முடிந்து போகும். லத்தீன் மொழியில் டிரௌட் என்றால், பெருந்தீனி என்று அர்த்தம்.

சுட்டி ஸ்டார் நியூஸ்

பெரிய பறவை!

நான்கு இறக்கைகள்கொண்ட புராதனப் பறவையின் புதைபடிவம், சீனாவின் லியோனிங் (Liaoning)பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 125 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பறவைகள் வாழ்ந்திருக்க வேண்டும். சாங்யுராப்டர் யாங்கி  என்று பெயரிடப்பட்டுள்ள இதை, பறக்கும் டைனோசர் என்று சொல்லலாம். ஊர்வனவற்றுக்கு சிறகுகள் முளைத்து, பரிணாம வளர்ச்சி அடைந்தபோது வாழ்ந்த பறவை. இதன் நீளம், அலகில் இருந்து வாலின் நுனி வரை 132 சென்டிமீட்டர் இருக்கும்.

சுட்டி ஸ்டார் நியூஸ்
சுட்டி ஸ்டார் நியூஸ்

 தண்ணீர்த் திருவிழா!

மியான்மரில், வருடந்தோறும் சித்திரை முதல் வாரத்தில்  தண்ணீர்த் திருவிழா கொண்டாடப் படுகிறது. ஒரு வாரம் அரசு விழாவாகவும் நடக்கும். விடுமுறையும் உண்டு. அந்த நாட்களில்... நாடு முழுவதும் உள்ள மக்கள், தண்ணீரை ஒருவர் மீது ஒருவர் பீய்ச்சி அடித்து, தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்து கிறார்கள்.

சுட்டி ஸ்டார் நியூஸ்

 மேஜிக் ஐஸ்கிரீம்!

பல்வேறு நிறம் மாறும் ஐஸ்கிரீமை மேனுவல் லினாரஸ் என்னும் ஸ்பெயின் நாட்டவர் கண்டுபிடித்துள்ளார். இவருடன் ஒரு இயற்பியலாளர், ஒரு சிற்பி மற்றும் சில நண்பர்கள் இணைந்து ஒரு குழுவாக இதை உருவாக்கி உள்ளனர்.

டூட்டி-புரூட்டி பழச்சுவை நிறைந்த இந்த ஐஸ்கிரீமை நாம் வாங்கும்போது, நீலநிறத்தில் இருக்கும். சாப்பிடத் தொடங்கியதும், முதலில் செந்நிறத்துக்கும் பிறகு, கத்தரிப் பூ நிறத்துக்கும் மாறும். ஐஸ் கிரீமை சுவைப்பவரின் வாயில் உள்ள அமிலங்கள், வெளியில் இருக்கும் தட்ப வெப்பநிலை ஆகியவற்றால் இந்த மாற்றம் நிகழ்கிறது. இதுவும் தவிர, ஐஸ்கிரீம் மீது தெளிக்கப்படும் ஈலிக்சர் என்ற திரவமும் ஐஸ்கிரீம் நிறம் மாறுவதற்குக் காரணம்.

சுட்டி ஸ்டார் நியூஸ்