Published:Updated:

சூப்பர் அம்மா சமந்தா !

என்.மல்லிகார்ஜுனா

பிரீமியம் ஸ்டோரி

உலகத்திலேயே ரொம்பக் கஷ்டமான வேலை, குழந்தைகளுக்குச் சாப்பாடு  ஊட்டிவிடுறதுதான். அவங்களை, அடம் பிடிக்காமல் சாப்பிடவைக்கிறதுக்குள்ளே அம்மாக்கள் படுற அவஸ்தையைப் பார்த்திருப்பீங்க. ஆனால், மலேசியாவைச் சேர்ந்த லீ சமந்தா (Lee Samantha) என்பவரின் குழந்தைகள், அடம்பிடிக்காமல் சமத்தா சாப்பிடுறாங்க. அது எப்படி?

சூப்பர் அம்மா சமந்தா !

சமந்தா, தன் இரண்டு குழந்தைகளையும் சாப்பிடவைக்க, ஒரு ஐடியா செய்தாங்க. உணவை, கார்ட்டூன் கதாபாத்திரங்களாகவும் பொம்மைகளாகவும் டெகரேஷன் பண்ணி, கொடுக்க ஆரம்பிச்சாங்க. இந்த மாதிரி செய்ய 60 முதல் 90 நிமிடங்கள் ஆகிறதாம். அப்புறம் என்ன... ஒரு துளிகூட மிச்சம் வைக்காமல் தட்டு காலி ஆச்சு. அதைப் புகைப்படம் எடுத்து, சோஷியல் மீடியாக்களில் போட்டாங்க. இப்போ, சமந்தாவுக்கு நிறைய அம்மாக்கள் ரசிகர்களாக மாறியதோடு, அவங்களும் இந்த ஐடியாவைப் பின்பற்றவும் ஆரம்பிச்சுட்டாங்களாம். இந்த நியூஸை, உங்க அம்மாவுக்கும் ஃபார்வர்டு பண்ணுங்க ஃப்ரெண்ட்ஸ்!
 

சூப்பர் அம்மா சமந்தா !
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு