Published:Updated:

சுட்டி ஸ்டார் நியூஸ்

சுட்டி ஸ்டார் நியூஸ்

பிரீமியம் ஸ்டோரி

வாவ் விமான நிலையம்!

சிங்கப்பூரில் உள்ள சாங்கி (Changi), உலகின் மிகச் சிறந்த விமான நிலையம். மினி சொர்க்கம் எனும் அளவுக்கு அழகும் பிரம்மாண்டமும் அபாரம். ஆண்டுக்கு, ஆறு கோடிப் பயணிகளைக் கையாளும் விமான நிலையம் இது. திரையரங்கு, பூங்கா, நீச்சல் குளம், உடற்பயிற்சிக்கூடம், பொழுதுபோக்கு வசதிகள் எனப் பார்ப்போரை சொக்கவைக்கிறது சாங்கி!

சுட்டி ஸ்டார் நியூஸ்

கண்ணாடிக் கோயில்!

மலேசியாவின் ஜோஹர் பரு (Johor Bahru) என்னும் இடத்தில் உள்ள ராஜகாளி அம்மன் கோயில், உலகிலேயே மிகப் பெரியதும் முதலாவதுமான கண்ணாடிக் கோயில். மூன்று லட்சம் வண்ணக் கண்ணாடித் துண்டுகளால் வடிவமைக்கப்பட்டுள்ள கோயில் இது. நேபாள நாட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட மூன்று லட்சம் ருத்ராட்ச மணிகள் சுவர்களை அலங்கரிக்கின்றன. விளக்கு வெளிச்சத்தில் பார்க்கும்போது கண்ணைப் பறிக்கும் பிரகாசம்,  பார்ப்போரை மாயாஜால உலகில் நிறுத்திவிடும். புத்தர், ஏசு, அன்னை தெரசா முதலிய 10 பளிங்குச் சிலைகளும் பொற்சிலைகளும் இங்கே உள்ளன.

சுட்டி ஸ்டார் நியூஸ்
சுட்டி ஸ்டார் நியூஸ்

 ரசிக்கவைக்கும் ராட்சதக் குகை!

‘உலகிலேயே மிகப் பெரிய குகை’ என்ற பெயரைப் பெற்றிருக்கிறது, வியட்நாமில் உள்ள சான் டாங் குகை (Son Doong). 1991-ல் கண்டுபிடிக்கப்பட்ட இந்தக் குகையின் நீளம் சுமார் 8 கிலோ மீட்டருக்கும் மேல். இந்தக் குகையில், நிறைய மரங்களும் ஒரு ஆறும் உள்ளன. இயற்கை அதிசயமான இந்தக் குகைக்கு, 2013 ஆகஸ்ட் மாதம் முதல் சுற்றுலா குழு சென்றுவந்துள்ளது. இனி, பலரும் வரிசைகட்டிச் செல்வார்கள்!

சுட்டி ஸ்டார் நியூஸ்

சத்தியாகிரகம்!

சத்தியாகிரகம் என்றதும் காந்தி நினைவுக்கு வருவார்.

சுட்டி ஸ்டார் நியூஸ்

‘‘சத்தியாகிரகம் என்ற வார்த்தை, என்னால் தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது. எட்டு வருடங்களாக, அங்குள்ள இந்தியர்கள் காட்டி வந்த சக்தியை வெளியிடவே இதைப் பயன்படுத்தினேன். சத்தியாகிரகம் என்பதன் அர்த்தம், சத்தியத்தை அழுத்தமாகப் பற்றி நிற்றல். ஆத்ம சக்தி என்றும் நான் அழைக்கிறேன். பிறருக்கு எந்த விதத்திலும் துன்பம் இழைக்காமல், நம்மை நாம் கஷ்டப்படுத்திக்கொண்டு பிறரை மாற்றுவதே சத்தியாகிரகம்.”

சுட்டி ஸ்டார் நியூஸ்

ஐஸ்லாந்தில் வெந்நீர்!

இயற்கையின் பல வியப்புகளில் ஒன்று, கீஸர்ஸ் (Geysers) எனப்படும் வெந்நீர் ஊற்றுகள்.  நிலப்பகுதியின் உள்ளே இருந்து பீறிட்டு வெளியே வரும் இந்த ஊற்றுகளிலிருந்து வெந்நீர் பீய்ச்சி அடிக்கும். இதுபோன்று 1,000 வெந்நீர் ஊற்றுகள் உலகில் உள்ளன. அவற்றில் 50 சதவிகிதம் இருப்பது வயோமிங் என்ற இடத்தில். ஐஸ்லாந்து என்ற பெயருக்கு முரணாக, இந்த நாட்டிலும் வெந்நீர் ஊற்றுகள் உண்டு. இங்குள்ள வீடுகளுக்கு, 90 சதவிகிதம் வெந்நீர் ஆற்றலைக்கொண்டே மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.

சுட்டி ஸ்டார் நியூஸ்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு