பிரீமியம் ஸ்டோரி
பென்டிரைவ்
பென்டிரைவ்

சூப்பர் ஹீரோ கதாபாத்திரங்களில், தனக்கென பெரிய ரசிகர் கூட்டத்தைப் பெற்றிருப்பவர் பேட்மேன். தீய சக்திகளை அழித்து, மக்களுக்கு நல்லது செய்வது பேட்மேன் வேலை. இவரைப் போல மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று எண்ணியது, கனடாவில் இருக்கும் நெக்சென் (Nexen) என்கிற எண்ணெய் நிறுவனம். செப்டம்பர் 18-ம் தேதி அந்த நிறுவனத்தில் பணிபுரியும் 500 ஊழியர்களை பேட்மேன் உடையில் வர ஏற்பாடு செய்தது. அந்த நாட்டில் உள்ள ஏழைகளுக்கான கல்வி, சுகாதாரம், வருமானத்தை ஏற்படுத்தித்தரும் திட்டங்களுக்காக நிதி திரட்டும் பிரச்சாரம் ஒன்றை நடத்தினர்.  500 பேட்மேன்கள் ஒன்றுகூடியது, உலக சாதனையாக கின்னஸ் புத்தகத்திலும் இடம்பெறுகிறது. ஸ்பைடர்மேன் ரசிகர்களே நீங்க தயாரா?  

பென்டிரைவ்


ஐந்து வயதில் 5 அடி உயரம் வளர்ந்து, கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கிறான் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த கரண் சிங். முதன்்முதலாக கரண் பள்ளிக்குச் சென்றபோது, வகுப்பு மாணவர்கள் ஆடிப்போனார்கள். அவனைவிட்டு விலகியே இருந்தார்கள். தயக்கம் நீங்கி, தற்போது நிறைய நண்பர்கள் கிடைத்துள்ளனர் கரணுக்கு.  கரணின்் அம்மாவும் உயரம் தான். அவர் உயரம் 7 அடி 2 அங்குலம். இவர் கடந்த 2012-ஆம் ஆண்டு வரை இந்தியாவின் உயரமான பெண்மணி என்ற கின்னஸ் சாதனையாளராக இருந்தார். படிப்பிலும் நல்லா வளரணும் கிரண்!

பென்டிரைவ்

வெள்ளைக் காகம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இப்போது, சென்னையில் உள்ள வண்டலூர் உயிரியல் பூங்காவில் நமக்காகக் காத்திருக்கிறது. வெள்ளைக் காகம் மிகவும் அபூர்வமானது. நிறமிக் குறைபாடு காரணமாக, கறுப்பு நிறம், வெள்ளையாக மாறிவிடும். இந்த வெள்ளைக் காகம், உத்திரமேரூர் அருகில், மற்ற பறவைகளின் தாக்குதலுக்கு உள்ளாகி, பறக்க முடியாமல் இருந்தது. அதைக் கண்டறிந்து காப்பாற்றி, வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஒப்படைத்திருக்கிறார்கள். காயம் அடைந்த வெள்ளைக் காகம், உரிய சிகிச்சை பெற்று நல்ல நிலைக்குத் திரும்பிவிட்டது. அதை, செப்டம்பர் 19-ம் தேதி முதல் பார்வையாளர்களுக்காக கூண்டில் வைத்திருக்கிறார்கள். வண்டலூருக்கு ஒரு டிக்கெட்!
 

பென்டிரைவ்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு