Published:Updated:

`பழந்தமிழ் ஏடுகளுக்கு உயிர் கொடுத்த தமிழ் தாத்தா!' - வாசகர் பகிர்வு #MyVikatan

ஒரு புத்தகத்தை எழுதுவதும், பதிப்பிப்பதும் பிரசவ வேதனை என்பது எழுத்தாளனுக்கும் பதிப்பகத்தாருக்கும் தெரியும்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

``இதை உங்களால் படிக்க முடிகிறது என்றால், உங்கள் ஆரம்பப்பள்ளி ஆசிரியருக்கு நன்றி சொல்லுங்கள் என்பார்கள். ஆனால், இதைப் படிக்கக் கொடுத்த நூல்களைத் தந்த ஒருவருக்கு நாம் காலம் முழுவதும் நன்றி சொல்ல வேண்டும்.

ஒரு புத்தகத்தை எழுதுவதும், பதிப்பிப்பதும் பிரசவ வேதனை என்பது எழுத்தாளனுக்கும் பதிப்பகத்தாருக்கும் தெரியும். இதை ஒருவர் வாழ்நாள் கடமையாக செய்தாரெனில் அவர் போற்றுதலுக்கு உரியவரே. அவர்தான் தமிழ் தாத்தாவான கும்பகோணம் உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் மகன் சாமிநாதன் எனும் உ.வே.சா

Representational Image
Representational Image

#கல்வி

இளமையில் இவரிடம் இருந்த தமிழார்வத்தைக் கண்ட இவரின் தந்தை, மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் இவரின் 17-ம் வயதில் தமிழ் கற்க அனுப்பினார். சுமார் ஐந்து ஆண்டுக்காலம் இவரிடம் பயின்றார். நன்னூல் மற்றும் தொல்காப்பியத்தை நன்கு கற்றார்.

தன் ஆசிரியரைப் பற்றி சொல்லும்போது ``தாயைவிட என் மீது அதிக அன்பு கொண்டிருந்தவர் என் ஆசான்'' எனக் குறிப்பிட்டுள்ளார். இவரது 42 படைப்புகளை `ஸ்ரீமீனாட்சிசுந்தரம்பிள்ளை பிரபந்தத் திரட்டு' எனும் பெயரில் இரு தொகுதிகளாகவும் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரத்தை இரு பாகங்களாக விரிவாக எழுதியும் வெளியிட்டார்.

#தீர்த்த யாத்திரை

பழந்தமிழ் ஏடுகளைப் புதுப்பிக்கவும் அழியும் நிலையில் உள்ள ஏடுகளை மீட்டுருவாக்கவும் விடாப்பிடியாக முயற்சி செய்தார். குறுந்தொகை, சீவகசிந்தாமணி சங்ககால இலக்கியங்கள் ஆகியவற்றைப் பதிப்பித்தார். அறிஞர் பரமசிவன் அவர்கள் தன் கட்டுரை ஒன்றில் நூல்களைத் தேடி மாட்டு வண்டியிலேயே ஐயர் அவர்கள் பயணம் செய்ததாக தெரிவித்ததுடன் களக்காட்டில் இருந்த தெற்கு மடத்தில்தான் பத்துப்பாட்டு மூலம் முழுவதும் அடங்கிய பிரதி கிடைத்ததாக தெரிவித்துள்ளார்.

பழங்கால ஏடுகள் பல செல்லரித்து இருக்கும். துண்டு துண்டாய் இருக்கும். தொட்டால் உதிரும். அதை வாசித்து பொருள்கண்டு பதிப்பிப்பது என்பது மிகவும் சிக்கலான விஷயம். இதில் ஆர்வம் இருந்தால் மட்டுமே இதைச் செய்ய முடியும். இதை அவர், `ஏட்டுச்சுவடிகளை தேடி அலைவதைத் தீர்த்த யாத்திரை' எனக் குறிப்பிட்டார்.

Image from Vikatan Originals
Image from Vikatan Originals

#தேடல்

`நல்லறிவை நாளும் உயர்த்தி உயர்த்தியே புல்லறிவைப் போக்கி புதுநிலை தேடல் வேண்டும்' என்பார் பாரதிதாசன். உண்மையில் தேடலைவிட தேடுதல் துன்பம் தரும். அடிப்படை வசதி இல்லாத காலகட்டத்தில் நடந்தும், பல்வேறு ஊர்களில் தங்கியும் தேடிய செல்வங்களான எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, ஐம்பெரும் காப்பியங்களில் சீவகசிந்தாமணி, மணிமேகலை மற்றும் சிலப்பதிகாரத்துக்கு உரை எழுதி கொண்டுவந்ததாக தொ.ப கூறுகிறார். இத்தனை இலக்கிய வளத்தையும், தொன்மத்தையும் உணர்ந்து தமிழ் மொழிக்காகவும், தென்னிந்திய பொக்கிஷங்களை தம் 87 வயதுவரை சேகரித்துள்ளார். உ.வே.சா தனது வரலாற்றை `என் சரித்திரம்' எனும் தலைப்பில் ஆனந்த விகடன் இதழில் 1940 முதல் 1942 வரை தொடராக எழுதி பின் 1950-ம் ஆண்டு நூலாக வந்து.. தொலைக்காட்சியில் தொடராகவும் வந்தது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

#பெரும்பேராசிரியர்

1880 முதல் 1903 வரை கும்பகோணம் அரசுக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார். பின் 1903 முதல் பதினாறு ஆண்டுகள் சென்னை மாநிலக்கல்லூரியில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். சென்னை பல்கலைக் கழகம் மதிப்புறு முனைவர் பட்டம் அளித்ததுடன் பல்கலையில் உ.வே.சா ஆற்றிய சொற்பொழிவு, `சங்க காலத்தமிழும் பிற்காலத்தமிழும்' எனும் நூலாக வெளியிடப்பட்டது.

1906-ம் ஆண்டு இவருக்கு `பெரும்பேராசிரியர்' எனும் மகாமகோபாத்யாய எனும் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. மேலும், தக்ஷிண கலாநிதி பட்டங்களையும் பெற்றுள்ளார்.

#பாரதியின் வாழ்த்து

உ.வே.சா-வின் மகத்தான சாதனையை ஒட்டுமொத்த தமிழர்களின் சார்பில் நன்றி தெரிவிக்கும்விதத்தில் பாரதியார் சான்றோர் வாழ்த்துபாடலில் இவரை மூன்று பாடல்களில் வாழ்த்தியிருக்கிறார்.

"என் சரித்திரம்"  புத்தகம்
"என் சரித்திரம்" புத்தகம்

*"செம்பருதி ஒளிபெற்றான்; பைந்நறவு

சுவைபெற்றுத் திகழ்ந்தது; ஆங்கண்.. எனும் பாடலில்

"அகத்திய முனிவரைப்போல தமிழ் அறிவை மிகுதியாகப் பெற்ற குறைவில்லாத பெருமை உடையவர் என்றும்..

*அந்நியர்கள் தமிழ்ச் செவ்வி யறியாதார் பாடலில்

பெரும்பேராசிரியர் பட்டம் தந்த அந்நியர்களான ஆங்கிலேயர்களே இவ்வாறு பெருமைப்படுத்தும்போது, அக்காலத்தே தமிழின் சிறப்பறிந்த பாண்டியர்களின் காலத்தில் வாழ்ந்திருந்தால் இவர் அடைந்திருக்கக்கூடிய புகழைச் சொல்ல முடியுமோ? எனப் புகழ்கிறார்.

*நிதியறியோம், இவ்வுலகத் தெருக்கோடி.. எனும் பாடலில் அவரை வாழ்த்தும் வகையில் தமிழ்மொழி இப்பூமியில் நிலைத்திருக்கும் காலம் எல்லாம் தமிழ்ப் புலவர்கள் வாயினால் நீ போற்றப்படுவாய். அவர்களின் உள்ளத்தில் வாழ்த்தப்படுவாய் என்றார்.

#பெருவாழ்வு

தமிழர்கள் தங்கள் பழம் பெருமையையும் பண்பாட்டையும், பெரும்புகழ் தரும் அரிய நூல்களை தற்போதைய தலைமுறையினருக்குக் கொண்டு வந்து படிக்க வைத்த பெருமை அந்த தமிழ்த் தாத்தாவை சாரும். நூலிழையில் அவர் தவறவிட்டிருந்தால் நமக்கு இன்று நூல்கள் கிடைத்திருக்காது.

1940-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28-ம் தேதி தன் 87-வது வயதில் மறைந்தார். உத்தமதானபுரத்தில் உ.வே.சா பிறந்த இல்லம் அரசால் நினைவு இல்லமாக மாற்றப்பட்டுள்ளது. 1942-ல் அவரின் பெயரில் சென்னை பெசன்ட் நகரில் நூலகம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இன்னும் தமிழில் பல நூல்கள் முதல் பதிப்புடனோ அல்லது பழந்தமிழ் நூல்கள் செல்லரித்தோ போய்விடுகிறது. இதை வரும் தலைமுறைக்குக் கொடுக்க பலர் மின் புத்தகங்களாக மாற்றிவருகின்றனர். அவர்களின் பணி போற்றுதலுக்குரியது. இதுபோன்று நூல்களை அழியாமல் பாதுகாக்க உறுதி ஏற்போம். இவரின் நினைவுநாளில் இவரின் மகத்தான பணிகளை நினைவு கூர்வோம்.

-மணிகண்ட பிரபு

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு