தலைவர்கள், தலைவன் தலைவி ஆகிய சொற்களை எங்கெல்லாம் பயன்படுத்துகிறோம் என்று யோசித்துப் பார்த்தால், குடும்பத்தில் குடும்பத் தலைவ, குடும்பத் தலைவி; காதவயப்பட்டவர்களை இலக்கியத்தில் தலைவன்-தலைவி என்கிறார்கள். இந்தச் சொற்கள் எங்கெல்லாம் சரியாகப் பயன்படுத்தப்படுகின்றன என்பதைப் பார்த்தால், அந்தப் பெயரைத் தாங்கியவர்களின் செயல்பாடுகளைக் குறித்து நம்முடைய சிந்தனையை விரிவாக்க வேண்டும்.
ஒரு நல்ல தலைவன் என்பவன் யார். அவனை நம்பி ஒரு குழு, ஒரு நிறுவனம், ஒரு சமூகம், ஒரு கூட்டம், ஒரு குடும்பம், ஒரு நாடு, ஒரு உலகம் இருக்கிறது. அந்தத் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் எப்படியிருக்க வேண்டும்?
தலைமைத்துவம் கொண்ட ஆசிரியர் யார்?

இயேசு கிறிஸ்துவின் மடியில் அமர்ந்திருக்கும் ஆட்டுக்குட்டியைப் பார்த்திருக்கிறீர்களா? நான் அந்த ஆட்டுக்குடியாக வேண்டும் என்று என்னுடைய ஆசிரியரிடம் கேட்டேன். அவர் சொன்னார், “நீ இயேசுவின் பார்வையில் படுகின்ற மேய்ச்சல் ஆடாக இரு; மடியில் இருக்கும் ஆடாக இருக்க வேண்டாம்” என்றார்.
“அது ரொம்ப கொடுத்து வைத்த ஆடெல்லாம் இல்லை. சொல் பேச்சு கேட்காத ஆடு. குரு பேச்சுக் கேட்காமல் கீழே விழுந்து காலை உடைத்துக் கொண்ட ஆடு, மீண்டும் வழி தவறிவிடக் கூடாது என்பதற்காக குரு பிடித்து வைத்திருக்கிறார்” என்று மேலும் விளக்கினார் என்னுடைய ஆசிரியர்.
என்னுடைய சிந்தனையில் வெளிச்சம் விழுந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
ஓர் ஆசிரியர் யாரை நெருக்கமாக வைத்திருக்க வேண்டும்?
நன்றாகப் படிக்கின்ற குழந்தைகளையா?
இல்லை. ஃபெயிலாகத் தயாராக இருக்கும் மாணவன், பள்ளிக்கு வர மாட்டேன் என்று அடம்பிடிப்பவன், பள்ளிக்கூடத்துக்கு வந்து படித்தாலும் தேர்வு எழுதாதவன், சொல்பேச்சுக் கேட்காமல் முரண்டு பிடிக்கிறவன் இவர்களைத் தான் ஆசிரியர்கள் நெருக்கமாக வைத்திருக்க வேண்டும்; நன்றாகப் படிக்கின்றவர்களைத் தூர வைத்துப் பேணி காத்தாலே போதும்
தலைமைத்துவம் என்பது மிகப் பெரிய பொறுப்புணர்வு, அந்த உணர்வை, பண்பைக் கொண்டவர்கள் எந்தவொரு சூழலுக்குப் பொறுப்பெடுத்தாலும் அந்தச் சூழல் அவர்களால் வெளிச்சம் பெறும்!
ஆசிரியர்களுக்கு இயேசு கிறிஸ்து சொல்லும் பாடம் குறித்து 'சொல் புதிது' என்னும் கீழ்க்காணும் காணொளியில் அழகாக விளக்குகிறார் பர்வீன் சுல்தானா.