Published:Updated:

முள்ளை விதைத்தால் ரோஜா முளைக்குமா? | பர்வீன் சுல்தானா | சொல் புதிது

சொல் புதிது
சொல் புதிது

இரண்டு பேர் இருக்கிறார்கள். ஒருவர் இன்னொருவருக்காக அடுத்தவர்களோடு போராடலாம், அது சுகமானது. ஆனால், வாழ்க்கை எப்படித் தெரியுமா இருக்கிறது?

படிக்க வேண்டும் என்று சொல்கிறோம். எல்லோரும் படிக்க வேண்டும்; ஏன் படிக்க வேண்டும்? அறிவு வளர படிக்க வேண்டும். கல்வி என்பது வேறு; அறிவு என்பது வேறு. இரண்டும் ஒன்று கிடையாது. கல்வி என்பது மகிழ்ச்சியைப் போல் வெளியிலிருந்து உட்செல்வது, அறிவு என்பது ஆனந்தத்தைப் போல் உள்ளிருந்து வெளிப்படுவது. உள்ளிருந்து வெளிப்படுவதற்கான சூழல் ஏற்படவில்லையோ, அப்படிப்பட்ட கல்வியால், மகிழ்ச்சியால் பயனில்லை.

எல்லாவற்றையும் நுகர்வுப் பொருளாகவே, நுகர்வுத்தனமாகவே பார்க்கின்ற தன்மை வந்த காரணத்தால், அதீத நுகர்வுத் தன்மையினால் இன்றைக்கு மாபெரும் கேடுகள் வந்துசேர்கின்றன. அடுத்தவர்களுக்காக, நமக்காக செய்கின்றவர்களுக்காகவே செய்கின்றோமா?

படிப்பு
படிப்பு

உங்களில் பலருக்கு இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கலாம்.

இரண்டு பேர் இருக்கிறார்கள். ஒருவர் இன்னொருவருக்காக அடுத்தவர்களோடு போராடலாம், அது சுகமானது. ஆனால், வாழ்க்கை எப்படித் தெரியுமா இருக்கிறது? அவர்களுக்கு நன்மை செய்வதற்காக அவர்களுடனேயே போராட வேண்டியிருக்கிறது. யாருக்கு நீங்கள் நன்மை செய்வதற்காக துணிந்திருக்கிறீர்களோ அவர்களுக்காக போராட வேண்டும், அவர்களுடன் போராட வேண்டும். இரட்டைச் சுமை நமக்கு.

நமக்காகப் போராடுகிறவர்களின் அருகில் நாம் எப்படிப் போய் நிற்பது. எப்படி அவர்களை அங்கீகரிப்பது. பல நேரங்களில் நமக்காகப் போராடுகிறவர்கள் அமைதியாகிவிடுகிறார்கள். ‘அநியாயங்கள் மேலோங்குகிறபோது அன்பு செய்கிறவர்கள் தணிந்து போகிறார்கள்’ என்கிறது பைபிள் வாசகம் ஒன்று.

இயேசு சிலுவையில் அறையப்பட்டிருக்கும்போது அவருக்கு முள் கிரீடம் சூட்டப்பட்டிருந்தைப் பார்த்து ஒரு லெபனான் கவி எழுதினான்: 'என்ன கருணையான உலகம், முள்ளை விதைத்தால் ரோஜா அல்லவா முளைக்கிறது.'

இயேசு முள் கிரீடம்
இயேசு முள் கிரீடம்

முள்ளை விதைத்தால் ரோஜா எத்தனை பேருக்கு முளைக்கும்; அன்பு செய்கின்றவர்கள் தணிந்து போகாதபடிக்கு என்ன செய்யவேண்டும் நாம்; நமக்காகப் போராடுகின்றவர்கள் அருகில் நாம் எப்படி நிற்பது?

ஒருவருக்குத் துணையாக இருப்பதென்பது, அவர்களுடைய மனோபலத்துக்கு, அவர்களுடைய அறிவுப்புலத்துக்கு உடன் நான் இருக்கிறேன், எனக்காகத் தான் உன் போராட்டம் என்பதை நான் ஏற்றுக் கொண்டிருக்கிறேன், உன்னை முழுமையாக நான் நம்புகிறேன் என்று போய் அந்தத் தலைவனுக்கு, தலைவிக்கு முன்னால் போய் நிற்கும்போது அற்புதங்கள் நிகழ்கின்றன; அந்த அற்புதங்கள் நிகழ்த்தக் கூடிய சூழல் எந்தச் சமூகத்துக்குக் கிடைக்கிறதோ அந்தச் சமூகம் வரலாறு படைத்திருக்கிறது!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முள்ளை விதைத்தால் ரோஜா முளைக்குமா என்பது குறித்து 'சொல் புதிது' என்னும் கீழ்க்காணும் காணொளியில் அழகாக விளக்குகிறார் பர்வீன் சுல்தானா.
அடுத்த கட்டுரைக்கு