Published:Updated:

பலநூறு பேரை அரசு அதிகாரிகளாக்கிய பழைய புத்தகக் கடை ஆழ்வார்... இப்போது அவரின் கடை எப்படி இருக்கிறது?

ஆழ்வார் தன்னுடைய 13 வயதில் தொடங்கிய இந்தப் பழைய புத்தகக் கடை நாளடைவில் வளர்ந்து சென்னை பழைய புத்தகக் கடைகளின் முகமாக மாறியது.

சென்னையின் முக்கியச் சந்திப்புகளில் ஒன்றான மயிலாப்பூர் லஸ் முனை எப்போதும்போல் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறது. அந்தப் பரபரப்புக்கு மத்தியில், நூல் அடுக்குகளில் புதைந்துள்ள அமைதியைத் தாங்கி நிற்கிறது ‘ஆழ்வார் புத்தகக் கடை.’ தமிழ்நாட்டில் பழைய புத்தகக் கடைகளின் மையமான சென்னையில், பழைய புத்தகக் கடைகளின் அடையாளமாக விளங்கிய, வாசகர்களால் ‘தாத்தா கடை’ என்று அன்புடன் அழைக்கப்பட்ட ஆழ்வார் கடை, அவரது காலத்துக்குப் பிறகு இப்போது எப்படி இருக்கிறது?

மனைவி ஜூலியுடன் ஆழ்வார்
மனைவி ஜூலியுடன் ஆழ்வார்
“புத்தகங்களைக் காப்பாத்த ஸ்டாலின் மனசு வைக்கணும்!”

ஆர்.கே.ஆழ்வார் (1923-2018) தன்னுடைய 13 வயதில் தொடங்கிய இந்தப் பழைய புத்தகக் கடை நாளடைவில் வளர்ந்து சென்னை பழைய புத்தகக் கடைகளின் முகமாக மாறியது. அரிய, பழைய, மறுபதிப்பு காணாத முக்கியமான தமிழ், ஆங்கில மொழி உள்ளிட்ட பன்மொழிப் புத்தகங்கள் ஆழ்வார் கடையில் பொக்கிஷமாகக் குவிந்துகிடக்கும். 2018-ம் ஆண்டு ஆழ்வாரும் அவருடைய மனைவி மேரியும் காலமாகிவிட, அவர்களின் நான்கு மகள்களில் இருவர் இப்போது கடையை நடத்திவருகின்றனர். புத்தகங்களுக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்த ஆழ்வாரின் கதை இது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு