Published:Updated:

கீழ்ப்பாக்கம் மார்ச்சுவரி திடீர் பழுது! - எப்படிச் சமாளிக்கிறது ராயப்பேட்டை மருத்துவமனை?

தென்னிந்தியாவிலேயே நீரிழிவு நோய்க்கும் தீக்காயங்களுக்கும் சிறப்பு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை. அண்மையில் இங்குள்ள மார்ச்சுவரியில் உடல்களைப் பதப்படுத்தும் ஃப்ரீசர் கருவியில் பழுது ஏற்பட்டது. கிட்டத்தட்ட அதிக தீக்காயங்களால் ஏற்படும் அத்தனை மரணங்களுக்கும் பிரேத பரிசோதனை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில்தான் செய்யப்படுகிறது என்பதால் ஃப்ரீசர் பழுது பெரும் பிரச்னையாக இருந்தது. ப்ரீசர் கருவிகள் அத்தனையும் மிகப் பழைமையானது என்பதாலேயே இந்தப் பிரச்னை ஏற்பட்டதாக மார்ச்சுவரி பராமரிப்பாளர்கள் கூறுகின்றனர். இதையடுத்து அந்தக் கருவிகளை மாற்றும் பணி தற்போது கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் நடந்துவருகிறது. இடைப்பட்ட காலத்தில் கீழ்ப்பாக்கம் மருத்துவமனை மார்ச்சுவரிக்கு வரும் சடலங்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்படுவதாகச் சொல்லப்பட்டது. 

கீழ்ப்பாக்கம் மார்ச்சுவரி திடீர் பழுது! - எப்படிச் சமாளிக்கிறது ராயப்பேட்டை மருத்துவமனை?

ஆனால், ராயப்பேட்டை மருத்துவமனையைப் பொறுத்தவரை விபத்து மற்றும் அவசர சிகிச்சைக்காக அழைத்துவரப்படுபவர்கள் இறக்கும் நிலையில் அவர்களை அடையாளம் கண்டுபிடிப்பதற்காக மூன்று நாள்கள் வரை அங்கே உடல்கள் பாதுகாக்கப்படும். காவல்துறைக்கு வேலை நெருக்கடி இருக்கும் பட்சத்தில், சடலங்களின் உறவினர்களை அடையாளம் கண்டுபிடிக்காமல் போனால் அதிகபட்சம் ஒருமாத காலம் வரை சடலங்கள் பாதுகாக்கப்படும். அடையாளம் கண்டுபிடிக்கப்படாமல் போனால் அரசே அதன் இறுதிச் சடங்குக்குப் பொறுப்பேற்கும். தற்போது கீழ்ப்பாக்கம் மருத்துவமனையிலிருந்து வரும் சடலங்களைப் பராமரிக்கும் பணியையும் சேர்த்து எப்படிச் சமாளிக்கிறது.

கீழ்ப்பாக்கம் மருத்துவமனையிலிருந்து சடலங்களை எடுத்துவந்த மருத்துவர் குழுவைச் சேர்ந்த பெயர் வெளியிட விரும்பாத மருத்துவரிடம் பேசினோம், “ராயப்பேட்டை மருத்துவமனை அமரர் அறையில் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கென தனியே இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கே கீழ்ப்பாக்கம் மருத்துவமனையைச் சேர்ந்த பிரேத பரிசோதனை குழு ஒன்று தனியே தன் பணியைச் செய்துவருகிறது. கூடவே கூடுதல் எண்ணிக்கையிலான ஃப்ரீசர்களும் இருப்பதால் சமாளிக்க முடிகிறது. இந்த வார இறுதிக்குள் கீழ்ப்பாக்கம் மருத்துவமனை  அமரர் அறையில் சீரமைப்புப் பணிகள் முடிந்துவிடும். அதன் பிறகு, வழக்கம்போல பிரேத பரிசோதனைகள் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையிலேயே நடக்கத் தொடங்கிவிடும்” என்றார்.

அமரர் ஊர்தி ஓட்டுநர்கள் கூறுகையில், ``இறப்புச் செய்தி வரும்போது இறந்தவர்களை எடுத்துக்கொண்டு ராயப்பேட்டை  அமரர் அறைக்குத்தான் நேரடியாகக் கொண்டு வருகிறோம். மேலும், ஒரு அமரர் ஊர்தி கீழ்ப்பாக்கம் மருத்துவமனையிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் எந்த நெருக்கடியும் இல்லை” என்று கூறுகின்றனர்.