Published:Updated:

ஹலோ விகடன் - கலங்காதிரு மனமே!

சா.வடிவரசு,  படம்: ரா.வருண் பிரசாத் 

ஹலோ விகடன் - கலங்காதிரு மனமே!

சா.வடிவரசு,  படம்: ரா.வருண் பிரசாத் 

Published:Updated:
ஹலோ விகடன் - கலங்காதிரு மனமே!

இல்லற வாழ்வு இனிமையாக... சூப்பர் சூத்திரங்கள்!

தாம்பத்ய சந்தேகங்கள் தொடங்கி கணவன்  மனைவி இடையேயான இல்லறப் பிரச்னைகள் வரை தினம் தினம் ஏராளமான தம்பதிகளின் சிக்கல்களை சீர் செய்து வருபவர், செக்ஸாலஜிஸ்ட், டாக்டர் நாராயண ரெட்டி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''இன்றைய தலைமுறையினருக்கு திருமணம் பற்றிய புரிதலும், வாழ்க்கை பற்றிய தெளிவும், உறவுகள் பற்றிய பக்குவமும் இல்லை. விளைவு... ஒவ்வொரு நாளும் பிரச்னைகள் அதிகரித்துக்கொண்டே சென்று, அவர்களில் அதிகமானோர் நீதிமன்றப் படியேறிவிடுகின்றனர். இல்லற விரிசல்களுக்கான முதல் முக்கிய மருந்து... பொறுமை! அது இருந்துவிட்டால், பல பிரச்னைகளை கிள்ளி எறிந்துவிடலாம்!'' எனும் டாக்டர், இல்லற யுத்தத்தைத் தவிர்த்து மகிழ்ச்சிகரமான வாழ்க்கை வாழ புதுமணத் தம்பதிகள் தொடங்கி, பேரன் பேத்தி எடுத்த முதிய தம்பதிகள் வரை பின்பற்ற வேண்டிய இல்லற சூத்திரங்களை, அவள் விகடன் குரல் ஒலி மூலமாக பகிரவிருக்கிறார்.

ஹலோ விகடன் - கலங்காதிரு மனமே!

• இல்லறத்தில் விரிசல் விழ என்ன காரணம்?

• கணவன் - மனைவி உறவு என்பது..? 

• கணவன் -  மனைவி இடையேயான புரிதல் எப்படி இருக்க வேண்டும்? 

• குழந்தையின்மை என்பது ஒரு பிரச்னையே இல்லை. ஏன்? 

• கால மாற்றத்தால் இன்றைய தலைமுறையினரின் இல்லறம் அடைந்த மாற்றங்களும், எதிர்கொள்ள வேண்டிய சவால்களும் என்னென்ன? 

• விவாகரத்து என்பது சரியான தீர்வா?

- இப்படி நிறைய விஷயங்களை உங்களிடம் பேச ஆவலோடு காத்திருக்கிறார் டாக்டர்.

கேட்டு பயன்பெற தினம் மூன்று நிமிடம் ஒதுக்குங்கள்.

உங்கள் வீட்டில் இனி இல்லை... டிஷ்யூம் டிஷ்யூம்!

அக்டோபர் 21 முதல் 27 வரை தினமும் மூன்று நிமிடங்களை ஒதுக்குங்கள்...

இந்த எண்ணுக்கு ஒரு போன் போடுங்கள்.

ஹலோ விகடன் - கலங்காதிரு மனமே!

''குழந்தைகளிடம் கற்றுக்கொள்வோம்!''

ள்ளூர் தொலைக்காட்சி தொடங்கி பிரபல தொலைக்காட்சி வரை பேசி வருபவர், பட்டிமன்றப் பேச்சாளர் சுந்தரவள்ளி! ரசிக்கவைக்கும் தன் பேச்சில் மக்களுக்குப் பல பயனுள்ள விஷயங்களையும் சேர்த்துக் கடத்துபவர்!

''மதுரை மாவட்டம், நல்லபிள்ளைபட்டி கிராமம்தான் நான் பிறந்த ஊர். அப்பா, அம்மா, தாத்தா எல்லோரும் ஆசிரியர்கள். நானும் தமிழ்ப் பாடத்தில் முனைவர் பட்டம் வாங்கினேன். மேடைப் பேச்சு, இளங்கலை இரண்டாம் ஆண்டு படிக்கும்போதே தொடங்கி, இன்று வரை தொடர்ந்துகொண்டிருக்கிறது. மேடையில் பயனுள்ள விஷயங்களைப் பேசுவதையே விரும்புவேன்!'' என்று சொல்பவர், 'சங்க இலக்கிய மகளிர்’ குறித்து திறனாய்வு செய்து முனைவர் பட்டம் முடித்து, சில காலம் கல்லூரியில் பேராசிரியையாக வும் பணிபுரிந்தவர்.

மேடைகளில் மட்டுமே தன் பேச்சால் பலரையும் மகிழ வைத்துக் கொண்டிருப்பவர், முதல் முறையாக அவள் விகடன் 'கலங்காதிரு மனமே!’ குரல் வழி மூலமாக வாசகிகள் மத்தியில் பேசுகிறார். அதில்,

•  சமயோசித புத்தியே வெற்றி என்று சொல்லலாம். ஏன்?

•  முதியோர்களை கட்டாயம் கொண்டாட வேண்டும். எதனால்?

•  முகநூலில் முகத்தை தொலைக்கிறோம். எப்படி?

•  ஒவ்வொருவரும் கட்டாயம் குழந்தைகளிடம் கற்றுக்கொள்ள வேண்டியவை..?

ஹலோ விகடன் - கலங்காதிரு மனமே!

• 'கடிதங்களும், கம்ப்யூட்டரும்’  சுவாரஸ்யத் துக்கு நான் கியாரன்டி.

இப்படி உங்களை ரசிக்க வைக்கவும், சிந்திக்க வைக்கவும் சுந்தரவள்ளி தயார். தினம் மூன்று நிமிடம் ஒதுக்குங்கள். உங்கள் உள்ளத்தில் எனர்ஜி பூ பூக்க வைப்பார்!

அக்டோபர் 28 முதல் நவம்பர் 3 வரை

தினமும் மூன்று நிமிடங்களை ஒதுக்குங்கள்...

இந்த எண்ணுக்கு ஒரு போன் போடுங்கள்.

* சாதாரண கட்டணம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism