Published:Updated:

ஆல் இஸ் வெல்! - 4

பொல்லாத பொசஸிவ்னெஸ்! மனதுக்கு மருந்து போடும் தொடர்டாக்டர் அபிலாஷா

னிப்பு அளவுக்கு அதிகமாகும்போது ஒரு புள்ளியில் கசக்குமே... அதேபோல்தான் உறவுகளுக்குள் எழும் ஓவர் கமிட்மென்ட்டும்! என்னதான் கணவன்  மனைவி நேசம், அம்மா  பிள்ளை பாசம் என்றாலும், ஒரு சக மனிதன்/மனுஷிக்கான சுதந்திரத்தைப் பறிக்கும்விதமாக அது மாறும்போது, அந்த உறவு சலிக்க ஆரம்பித்துவிடும்!

ஆல் இஸ் வெல்! - 4

திருவுக்கும், லதாவுக்கும் திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகின்றன. இல்லறப் பிரச்னையில் என்னிடம் வந்தார்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''அவருக்கும் எனக்கும் அரேஞ்சுடு மேரேஜ் டாக்டர். ஆரம்பத்தில் பாசமாதான் இருந்தாரு. போகப்போக, மோசமான பாசக்காரரா மாறிட்டாரு!'' என்று லதா ஆரம்பித்தபோது, "அதென்ன மோசமான பாசம்?’' என்றேன்.

''பொசஸிவ்னெஸ்! நான் எந்த ஆணுடனும் பேசக்கூடாது. வீட்டுக்கு யாராச்சும் விருந்தினர் வந்தா, கிச்சனைவிட்டு வெளியே வரக்கூடாது. அட, அண்ணன், தம்பிங்ககிட்ட கூடப் பேசக் கூடாதாம். கேட்டா, 'உன் மேல எனக்கு அவ் வளவு பொசஸிவ்னெஸ்!’னு சொல்றார். இந்த  நாசமாப்போன பொசஸிவ்னெஸும் வேண்டாம், அவரும் வேண்டாம் எனக்கு. சில நேரம், 'நம்ம மேல ரொம்ப பாசம் வெச்சுட்டதாலதான், அவ்ளோ பொசஸிவ்வா இருக்கார்!’னு சமாதானம் ஆனாலும், பல நேரம், இவர் தன்னோட சந்தேகப்புத்திக்கு வெச்சிக்கிட்ட பேருதான் இந்த 'பொசஸிவ்னெஸ்’னு மூளை சொல்லிக் கொடுக்குது. வாழ்க்கையே வெறுத்துடுச்சு. என் பிள்ளையோடவே மிச்ச வாழ்க்கையை கழிச்சிடறேன் டாக்டர்!'' என்றார் லதா விரக்தியுடன்.

''எங்கம்மா நான் சின்ன வயசா இருக்கும்போதே தற்கொலை செய்துக் கிட்டாங்க. அப்பா பள்ளிப் படிப்பை முடிக்கும்போதே இறந்துட்டார். இப்போ இந்த உலகத்துல எனக்கே எனக்குனு இருக்கிறது என் மனைவியும், பிள்ளையும்தான். அதான் அவகிட்ட ஓவர் பாசமா, உரிமையா இருக்கேன். இது தப்பா..?''

இது திருவின் கேள்வி.

ஆல் இஸ் வெல்! - 4

இதுதான் ஓவர் கமிட்மென்ட். நமக்கு ஒரு பொருள் சொந்தம் என்றால், அதை அனுதினமும் நிரூபித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று நினைக்கக் கூடாது. பலரும் உறவுகள் விஷயத்தில் இதைத்தான் செய்கிறார்கள்.

'நம்ம பையன், நமக்கு முடியலைனா பொண்டாட்டியை அலட்சியப்படுத்திட்டு ஓடி வருவானா..?’

'நம்ம காதலனுக்கு இன்னிக்கு மெசேஜ் அனுப்பலைனா, பதறிட்டு என்னனு கேட்பானா..?’

'நம்ம மனைவி, நமக்கு பத்திரம் போடாத அடிமையா, பத்திரமா இருக்காளா?’

இப்படியெல்லாம் பரீட்சித்துப் பார்த்து பரீட்சித்துப் பார்த்து, தங்கள் அன்பை, உறவின் அடர்த்தியை உறுதி செய்துகொள்கிறார்கள் பலர்... திருவைப் போல.

சரி, இதனால் இவர்களுக்கெல்லாம் நிம்மதி கிடைக்கிறதா என்றால், இல்லை என்பதே உண்மை. இந்த ஓவர் கமிட்மென்ட், ஒருவருக்கு 'பேரனொய்ட் டிஸ்ஆர்டர்’ (Paranoid Disorder) என்கிற மனம் சார்ந்த பிரச்னையை உண்டாக்கிவிடும். இதனால் அவர் மட்டுமல்லாமல் அவரைச் சுற்றியுள்ள பலரும் பாதிக்கப்படுவதோடு, ஒரு கட்டத்தில் அது மற்றவர்களிடம் இருந்து தனிமைப்படுத்திவிடும்... லதா விட்டுச் சென்ற திருவைப்போல!

உறவுகள் பலமாக அடிப்படைத் தேவை கமிட்மென்ட். ஆனால், அந்த கமிட்மென்ட் எப்படி இருக்க வேண்டும் என்பதில்தான்        100க்கு 90 பேர் தவறு செய்கிறார்கள். உறவு களுக்குள் கமிட்மென்ட் என்பது, ஒருவர் இன்னொருவரை அடிமைப்படுத்துவதோ, தன் விருப்பத்தை மற்றவர் மீது திணிப்பதோ கிடையாது. ஒருவருக்கு ஒருவர் நன்றாகப் புரிந்துகொண்டு, விட்டுக்கொடுத்து, மற்றவர் சுதந்திரத்துக்கு எந்த விதத்திலும் இடையூறு ஏற் படாமல், ஒருவர் மீது ஒருவர் அன்பு செலுத்தி, எப்போதும் மற்றவரை காயப்படுத்தாமல் வாழ்வது!

ஒருவர் ஒருவரை கோபப்படுத்தினால் என்னவாகும்? காயப்படுத்தினால் என்ன நிகழும்?

ரிலாக்ஸ்...

தொகுப்பு: சா.வடிவரசு

உறவுகளுக்குள் கமிட்மென்ட் வளர்க்க!

விட்டுக்கொடுப்பது, ஏற்றுக்கொள்வது, சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்வது, பிரச்னைகளை உடனுக்குடன் பேசி தீர்த்துக் கொள்வது, ஒருவர் மனதை மற்றொருவர் காயப் படுத்தாமல் நடந்துகொள்வது, எப்போதும் மற்றவர் சுதந்திரம் கெடாமல் பார்த்துக்கொள்வது... இவை எல்லாம் உறவுகளுக்கு இடையில் உள்ள கமிட் மென்ட்டை சரியான பாதையில் செலுத்தும். ஆனால், இரண்டு தரப்புமே இதைச் செய்ய வேண்டும்.

செல்லப்பிராணியும்... கமிட்மென்ட்டும்!

றவுகளுக்குள் சரியான கமிட்மென்ட்டை அனைவருமே உருவாக்கிக்கொள்ளுங்கள். உங்களுடைய குழந்தைகளுக்கும் சிறுவயது முதலே சரிவர சொல்லிக் கொடுங்கள். குழந்தையை வளர்க்கும்போது எப்படி முதலில் 'அம்மா’ என ஆரம்பித்து ஒவ்வொரு உறவுகளின் பெயர்கள். பின், அ, ஆ, இ, ஈ... 1, 2, 3, 4... ஏ, பி, சி, டி... போன்றவற்றை சொல்லிக்கொடுத்து வளர்க்கிறோமோ.. அதேபோன்று உறவுகளுக்குள்ளான கமிட்மென்ட்டையும் சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும்.

எப்படி என்கிறீர்களா?

உங்கள் வீட்டில் ஒரு நாய்க்குட்டி வளர்க்கிறீர்கள். அது வீட்டுக்குள் எல்லா இடத்திலும் வரும் போகும். சமயங்களில் வீட்டுக்குள்ளேயே சிறுநீர் கழிக்கவும் செய்யும். ஆரம்பத்தில், கோபப்பட்டாலும் பிறகு அதைச் சுத்தப்படுத்துவது, உணவுகளை நேரம் தவறாமல் கொடுப்பது, குளிப்பாட்டுவது, வெளியே கூட்டிச்செல்வது என்று சந்தோஷமாகவே செய்வோம். நம்மையுமறியாமல் அதன் மேல் ஒருவித பாசமும், அதற்கு நம் மேல் பாசமும் வந்துவிடும். இந்த விஷயத்தைப் பார்க்கும் குழந்தையும்... நம்முடன் சேர்ந்து ஒவ்வொரு வேலையையும் செய்யும். இது குழந்தையின் மனதுக்குள் ஆழமாக கமிட்மென்ட்டை கற்றுக்கொடுக்கும். இது வாழ்க்கையின் எல்லா கட்டங்களிலும் சரியான கமிட்மென்ட்டை உருவாக்கிக்கொண்டு சிறப்பாக வாழ குழந்தைகளுக்கு வழிகாட்டும்.

நாய்க்குட்டிதான் என்றில்லை... எதைச் செய்தாலும் அதில் நீங்கள் காட்டும் கமிட்மென்ட், உங்கள் குழந்தையையும் ஃபாலோ பண்ண வைக்கும்!