Published:Updated:

ஹலோ விகடன் - கலங்காதிரு மனமே!

சா.வடிவரசு, ந.ஆஷிகா, படம்: ர.சதானந்த்

ஹலோ விகடன் - கலங்காதிரு மனமே!

சா.வடிவரசு, ந.ஆஷிகா, படம்: ர.சதானந்த்

Published:Updated:
ஹலோ விகடன் - கலங்காதிரு மனமே!

'லவ் குரு’வின் காதல் சூட்சுமங்கள்!

'லவ் குரு’  பண்பலை நேயர்களுக்கு பரிச்சயமான பெயர். சென்னை ரேடியோ சிட்டி பண்பலையில், கொண்டவர்களைப் புலம்ப வைக்கும் நேசமான காதலைப் பற்றி, ஒரு தோழனாக, தினமும் இரவு நேரங்களில் அழகாகவும் ஆறுதலாகவும் பேசிக்கொண்டிருப்பவர் 'லவ் குரு’.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''நான் ஒரு காதல் தோல்வியாளர்!'' என்ற முதல் வாக்கியத்துடன் பேச ஆரம்பித்த 'லவ் குரு’வின் நிஜப்பெயரைக் கேட்டால்... சொல்லக் கூடாது என்றதோடு... போட்டோவுக்கும் 'நோ’ சொல்லிவிட்டார்!

ஹலோ விகடன் - கலங்காதிரு மனமே!

''திருத்துறைப்பூண்டியில் பிறந்த நான், சினிமா கனவுகளோடு சென்னை வந்தேன். நான்கு ஆண்டுகளாக பண்பலையில் பணிபுரிந்து வருகிறேன். 'லவ் குரு’ நிகழ்ச்சி மூலமாக ஆயிரக்கணக்கான இளசுகளின் உள்ளங்களைக் கொள்ளையடித்ததோடு, நூற்றுக்கணக்கான சகோதர, சகோதரிகளையும் சம்பாதித்துள்ளேன். இந்நிகழ்ச்சியின் மூலமாக காதலால் புண்பட்ட நெஞ்சங்கள் தொடங்கி, காதலால் பண்பட்ட நெஞ்சங்கள் வரை பலரிடமும் பேசும் வாய்ப்பு கிடைக்கப் பெறுகிறேன். அவர்களுக்கு என்னால் முடிந்த ஆலோசனைகளைத் தொடர்ந்து விதைத்து வருகிறேன்.

'பசங்க’ பட இயக்குநர் பாண்டியராஜிடம் உதவி இயக்குநராக பணிபுரியும் எனக்கு, இயக்குநர் கனவுதான் இலக்கு. நம்பிக்கை, உழைப்பு இரண்டையும் சொத்தாகக் கொண்டவர்கள் வாழ்க்கை யில் தோற்பது கிடையாது. வெற்றி நிச்சயம்!'' என்றவர் சீக்கிரமே திரைப்படத்தை இயக்க விருக்கிறார். இதுவரை ரேடியோவில் கேட்ட 'லவ் குரு’வின் குரல், 'அவள் விகடன்' குரல் ஒலி மூலமாக...

விவரிக்க முடியாத, ஆனால் உணர வேண்டிய காதல் என்பது?

காதல் தோல்வியைக் கடந்து வருவது எப்படி?

  காதல் குறித்த பெற்றோரின் தொடர் கேள்வியும்... பளீர் பதிலும்?

  திருமண பந்தத்தில் பிரச்னை எழும் போது பெண்களை மட்டுமே அட்ஜஸ்ட் செய்துகொள்ள சொல்வது சரியா?

  காதலுக்கு எதிர்ப்புகள் உண்டா?  இல்லை, காதலர்களே அதை உருவாக்கிக்கொள்கிறார்களா?

  காதல் தோல்வியை வளர்ச்சிப் படிக்கல்லாய் மாற்றும் சூட்சுமங்கள்..?

- இன்னும் பல விஷயங்களை ஒரு தோழனாக உங்களிடம் பேசவிருக்கிறார், 'லவ் குரு’. தினம் மூன்று நிமிடங்கள் ஒதுக்குங்கள். அது அன்புக் கடலான காதல் பற்றிய சரியான புரிதலை உங்களிடம் உருவாக்கும்!

நவம்பர் 4 முதல் 10 வரை தினமும் மூன்று நிமிடங்களை ஒதுக்குங்கள்...

tel:+(91)-44-66802932 * இந்த எண்ணுக்கு ஒரு போன் போடுங்கள்.

ஹலோ விகடன் - கலங்காதிரு மனமே!

காமெடி சொல்லுமே, வாழ்க்கைப் பாடம்!

மிமிக்ரி, காமெடி, நடனம், நிகழ்ச்சித் தொகுப்பு, சினிமா என எந்த ஏரியாவானாலும் சரவெடி கொளுத்திவிடுகிறார், 'ரோபோ’ சங்கர். பாடி பில்டிங்கில் 'மிஸ்டர் மதுரை’ வாங்கியதில் தொடங்கிய பயணம். 'மிஸ்டர் தமிழ்நாடு’, 'காமெடி கிங்’, 'கலைமாமணி’, 'டாக்டர் பட்டம்’ என்று பட்டியலை நீட்டி வருகிறார்.

''நான் மதுரைக்காரன். பள்ளிக் கூடத்துல விளையாட்டா மிமிக்ரி பண்ண ஆரம்பிச்சது, இப்போ இவ்வளவு உயரம் வரை கூட்டிவந்திருக்கு. 2004ம் வருஷம் விஜய் டி.வி எனக்கு கொடுத்த வாய்ப்பை, முழுமையா பயன்படுத்திக்கிட்டேன். தொடர்ந்து வாய்ப்புகள் தந்தாங்க. நானும் படிகள் ஏற ஆரம்பிச்சேன். ஒவ்வொருத்தருக்கும் ஒரு திறமை இருக்கும். அது என்னனு சரியா கண்டுபுடிச்சு உழைச்சா... நிச்சயம் ஜெயிக்கலாம்!'' என்று சொல்லும் சங்கர்... 'வாயை மூடிப் பேசவும்’, 'கப்பல்’ என சினிமாவிலும் கலக்கி வருகிறார். கலகலப்புக்கு கியாரன்டி தரும் 'ரோபோ’ சங்கர், அவள் விகடன் வாசகிகளுக்கு குரல் ஒலியில்!

  அவமானங்களுக்கும் அபூர்வ சக்தி உண்டு. எப்படி?

ஹலோ விகடன் - கலங்காதிரு மனமே!

  விதவிதமான எண்ணக் கலவைகள் கொண்ட மனிதர்களை நொடியில் சிரிக்கவும், சிந்திக்கவும் வைப்பது எப்படி?

  விருது விருது என்கிறார்களே... உண்மையில் ஒரு கலைஞனுக்குரிய மாபெரும் விருது எது தெரியுமா?  

  கலைஞன் என்பவன் எப்படி இருக்க வேண்டும்?

  வாழ்நாள் ரகசியம்..?

  நண்பர்களையும் பகைவர்களையும் நாம் எப்படி அணுக வேண்டும்?

- இப்படி வாழ்க்கைக்குத் தேவையான இன்னும் பல விஷயங்களை, தன் அனுபவத் திலிருந்தே காமெடி பேச்சு மூலமாக சொல்லி உங்களை மகிழ்விக்க காத்திருக்கிறார் 'ரோபோ’ சங்கர். சிரித்து சிந்திக்க, தினம் மூன்று நிமிடங்கள் ஒதுக்குங்கள்!

நவம்பர் 11 முதல் 17 வரை தினமும் மூன்று நிமிடங்களை ஒதுக்குங்கள்...

tel:+(91)-44-66802932 * இந்த எண்ணுக்கு ஒரு போன் போடுங்கள்.

* சாதாரண கட்டணம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism