இன்றைக்கு ஸ்மார்ட்போன்களில் கேமராக்களின் பங்கு முக்கிய இடம் வகிக்கக்கூடியதாக மாறியிருக்கின்றது. ஆனால், கேமராக்களின் பங்கை வேறு ஓர் எல்லைக்கு எடுத்துச் செல்லும் வகையில் ஹெச்டிசி நிறுவனம் தனது புதிய கேமராவான, ஹெச்டிசி ரீ (HTC Re) என்கிற கேமராவை வெளியிட்டுள்ளது.

புகைப்படங்களை எளிதாகவும் விரைவாகவும் எடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்தப் புதிய ரக கேட்ஜெட்டை பற்றிப் பார்ப்போம்.

டிசைன்!

ஒரு சிறிய ‘பைப்’ அல்லது ‘ஏர்-இன்ஹேலர்’ போல காட்சியளிக்கும் இந்த கேமராவை கையில் பிடித்து எளிதாக பயன்படுத்த முடியும். இந்த கேமரா இரண்டு பட்டன்களைக் கொண்டுள்ளது. பின்புறத்தில் இருக்கும் பெரிய பட்டன் போட்டோ எடுக்க உதவுகிறது. இதே பட்டனை சிறிது நேரம் அழுத்தினால் ஒரு ‘beep’ சத்தத்துக்குப் பிறகு வீடியோ ‘mode’ இயங்கத் தொடங்கும்.

முன்புறத்தில் இருக்கும் பட்டன் ஸ்லோமோஷன் வீடியோக்களை எடுக்கப் பயன்படுத்தப்படுகிறது. இந்த கேமராவில் உள்ள ஒவ்வொரு விஷயத்தையும் எளிமையாகப் பயன்படுத்துகிற மாதிரி வடிவமைக்கப் பட்டுள்ளது இதன் முக்கியமான பிளஸ் எனலாம்.

மொபைல் ஆப்ஸ்!

இந்த கேமராவின் பிரத்யேகமான ஆப்ஸ், ஆண்ட்ராய்டு அல்லது ஐஓஎஸ் என இரண்டு இயங்குதளத்திலும் கிடைக்கிறது. அதை ஸ்மார்ட்போனில் டவுன்லோடு செய்து, இந்த கேமராவோடு ப்ளூ-டூத் அல்லது ‘WiFi Direct’ உதவியுடன் இணைத்துவிடலாம்.

இந்த அப்ளிகேஷன் உதவியோடு இந்த கேமராவில் எடுத்த படங்களை உடனுக்குடன் ஸ்மார்ட்போனில் பார்க்கலாம்.

பேட்டரி!

இந்த கேமரா 820mAh பேட்டரியைக் கொண்டு இயங்குகிறது. இது குறைந்த பட்சம் இரண்டு மணி நேரம் வரை படங்களை எடுக்க உதவும்.

ஆனால், வீடியோக்களை எடுக்கும் போது இந்த நேரம் சற்றுக் குறையலாம். அதனாலே இந்த கேமராவின் மைனஸாக பேட்டரி அமையலாம்.

ஸ்டோரேஜ்!

இந்த கேமரா 8GB இன்டர்னல் மெமரியுடன் வருகிறது. மேலும், 128 GB எஸ்டி (SD) கார்டு மூலம் விரிவுபடுத்திக்கொள்ளலாம். ஆகையால், வாடிக்கையாளர்கள் அளவு பற்றிய கவலை இல்லாமல் படங்களையோ, வீடியோக்களையோ எடுக்கலாம். எஸ்டி கார்டை பொருத்தும் இடம் இந்த கேமராவின் அடிப்பாகத்தில் அமைந்துள்ளது.

கேமரா!

ஹெச்டிசி ரீ கேமரா, 16 மெகா பிக்ஸலைக் கொண்டது. சோனியின் ‘Exmor RS tech’ சென்சாரும் இந்த கேமராவில் அடங்கும். இந்த அதிநவீன தொழில்நுட்ப கேமரா 146 டிகிரி வரை போட்டோ அல்லது வீடியோக்களை எடுக்கும் திறனைப் பெற்றுள்ளது. ஹெச்டிசி ரீ கேமரா இந்தியாவில் ரூபாய் 9,990-க்கு Snapdeal.com-ல் பிரத்யேகமாக விரைவில் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும்.