Published:Updated:

பொட்டேட்டோ சீஸ் பால்ஸ்

பொட்டேட்டோ சீஸ் பால்ஸ்

பொட்டேட்டோ சீஸ் பால்ஸ்

தேவையானவை: உருளைக்கிழங்கு  3, உப்பு  தேவையான அளவு, மிளகுத்தூள் 1/2 டீஸ்பூன், மிளகாய் விதைகள்  1/2 டீஸ்பூன், வெண்ணெய்  1 டீஸ்பூன், மிளகாய்த்தூள்  1/2 டீஸ்பூன், சாட் மசாலாத்தூள்  1/2 டீஸ்பூன், சீஸ் துண்டுகள்  சிறிதளவு, முட்டை  1, பிரெட் கிரம்ஸ்  1 கப், எண்ணெய்  பொரிக்கத் தேவையானது.

 செய்முறை: உருளைக்கிழங்கை வேகவெச்சு எடுத்து, உரிச்சு, மசிச்சு வெச்சுக்குங்க. அதிலேயே உப்பு, கொஞ்சம் மிளகுத்தூள், மிளகாய் விதை, வெண்ணெய், சாட் மசாலாத்தூள், 5 டீஸ்பூன் பிரெட் கிரம்ஸையும் சேர்த்துப் பிசைஞ்சுக்குங்க. அதை, சின்னச் சின்ன உருண்டைகளாக்கி, நடுவில் தட்டி, அதில் சீஸ் வெச்சு, திரும்பவும் உருட்டிக்குங்க. முட்டையை உடைச்சு ஊத்தி, நல்லா அடிச்சு, உப்பு, மிளகுத்தூள் போட்டுக் கலந்துக்குங்க. உருட்டி வெச்ச உருண்டைகளை முட்டைக் கலவையில் தோய்ச்சு எடுங்க. பிரெட் கிரம்ஸில் புரட்டி, ஃப்ரிட்ஜ்ல வெச்சிடுங்க. கடாயில் எண்ணெய் ஊத்தி, உருண்டைகளைப் போட்டு, பொன்னிறமா பொரிச்சு எடுக்கணும். (உருண்டைகளை ஃப்ரிட்ஜ்ல வெச்சு, மறுநாள்கூடப் பொரிக்கலாம்). சாஸ் தொட்டு சாப்பிட்டா, ம்ம்ம்ம்ம்ம்... யம்ம்மி!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz