Published:Updated:

ஹலோ விகடன் - கலங்காதிரு மனமே!

சா.வடிவரசு, படம்: ரா.வருண் பிரசாத்

ஹலோ விகடன் - கலங்காதிரு மனமே!

சா.வடிவரசு, படம்: ரா.வருண் பிரசாத்

Published:Updated:
ஹலோ விகடன் - கலங்காதிரு மனமே!

குழந்தைகளின் எதிர்காலம் குஷியாக..!

னந்த விகடன் இதழில் தான் ஏற்கெனவே எழுதிய 'ஆறாம் திணை’, தற்போது எழுதிக்கொண்டிருக்கும் 'நலம் 360 டிகிரி’ தொடர்கள் மூலமாக வாசகர்களின் பிடித்தமான எழுத்தாள மருத்துவராகிப் போன சித்தமருத்துவர் கு.சிவராமனிடம் உரையாடுவது, சுவாரஸ்ய அனுபவம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''முன்பெல்லாம் குழந்தை பிறந்தவுடன் பெற்றோர் மட்டுமின்றி தாத்தா, பாட்டி, சித்தி, சித்தப்பா, அத்தை, மாமா என்று ஒட்டுமொத்த குடும்பமும் சுற்றமும் அக்கறையோடு குழந்தையை வளர்த்தெடுக்கும். அத்தை சத்து மாவு பிசைந்து கொடுத்தால், மாமா எள்ளு மிட்டாய் வாங்கித் வருவார். பாட்டி முள்ளுமுருங்கை ரொட்டி தட்டினால், தாத்தா சிவப்புக் கொய்யா பறித்துத் தருவார். இப்படி அவர்கள் அனைவரும் போட்டிப் போட்டுக்கொண்டு கொடுக்கும் ஆரோக்கிய உணவுகள், அந்தக் குழந்தைகளை ஆரோக்கிய மனிதர்களாக ஆக்கின.

ஹலோ விகடன் - கலங்காதிரு மனமே!

ஆனால், இன்றைக்கு அரிசிச் சோறு ஆக்கித் தருவதற்கே அப்பா, அம்மாவுக்கு நேரமில்லை. நூடுல்ஸ், பிரெட், பீட்ஸா போன்றவைதான் அவர்களின் உணவாகிவிட்டது. இந்த ஆரோக்கியமற்ற உணவுகளால் எக்கச்சக்கமான நோய்களையும், பிரச்னைகளையும் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் வருங்கால சந்ததிகளை தள்ளிக்கொண்டிருக்கிறோம். இந்தத் தவறை திருத்தி, ஒவ்வொருவரும் நம் முன்னோர் வகுத்த உணவு மரபுகளை மீட்டெடுக்க வேண்டும். அப்போதுதான் ஆரோக்கியத்தை நம் குழந்தைகளுக்குப் பரிசளிக்க முடியும்!'' என்று அழுந்தச் சொல்லும் சிவராமன்,

• கைக்குழந்தை விஷயத்தில் பெற்றோர் கட்டாயம் செய்ய வேண்டியவை?

•  நோய் எதிர்ப்பாற்றல் விஷயத்தில் கவனிக்க வேண்டியவை?

•  குழந்தைகளை எளிதில் தாக்கும் கொடூர நோய்?

•  பெண் குழந்தை வளர்ப்பில் பெற்றோர்கள் செய்யும் தவறுகள்?

•  குழந்தைக்கு முதல் மருந்தும்... முதல் உணவும்?

- இப்படி குழந்தைகள் விஷயத்தில் பெற்றோர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டிய இன்னும் பல விஷயங்களை அக்கறையோடு சொல்கிறார். இவற்றையெல்லாம் கேட்டுப் பயன்பெற தினமும் மூன்று நிமிடம் ஒதுக்குங்கள். நிச்சயம் அது ஆரோக்கியமான இளம்தலைமுறையை உருவாக்க வழிவகுக்கும்!

நவம்பர் 18 முதல் 24 வரை தினமும் மூன்று நிமிடங்களை ஒதுக்குங்கள்...

இந்த எண்ணுக்கு ஒரு போன் போடுங்கள்.

கேட்டுக் கேட்டு சந்தோஷிக்க..!

'ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தின் மூலமாக நகைச்சுவை நடிகையாக அறிமுகமானவர் மதுமிதா. தொடர்ந்து, தமிழ் திரையில் தனக்கென ஓர் இடத்தைப் பிடிக்கும் முயற்சியில் இருப்பவர்.

''நான் பொறந்து வளர்ந்தது எல்லாமே வடசென்னைதான். ரொம்ப எல்லாம் இல்லைங்க... பத்தாவதுதான் படிச்சிருக்கேன். பள்ளிக்கூடத்துல படிக்கும்போது எல்லா நாடகத்துக்கும் பேர் கொடுத்துடுவேன். சினிமானா அப்போவே உசுரு எனக்கு! என் டீச்சர்ஸ், தோழிகள் எல்லாரும், 'நீ சினிமாவுல நடிக்கலாமே!’னு சொல்ல, எனக்கும் அந்த ஆசை வந்துடுச்சு. அதுக்கப்புறம் பத்தாவது முடிச்சுட்டு வேலைக்குப் போயிட்டேன். அங்க என்னோட தோழி ஒருத்தி சொல்லி, எல்லா சேனல்கள்லயும் ஏறி, இறங்கி வாய்ப்புக் கேட்டு, பல்பு வாங்கிட்டு வந்தேன். ஆனாலும், ஆச்சர்யமா ராஜ் டி.வி 'சூப்பர் காமெடி’ நிகழ்ச்சி வாய்ப்பு எனக்குக் கிடைச்சுது. அங்க ஆரம்பிச்சது, இப்போ சினிமாவில் ஓட்டிட்டு இருக்கேன்.

ஹலோ விகடன் - கலங்காதிரு மனமே!

யாருக்கு, எப்போ, எப்படி, எங்கயிருந்து வாய்ப்பு வரும்னு தெரியாதுங்க. ஆனா, அதுக்கான முயற்சி இருந்துட்டே இருந்தா நிச்சயம் அந்த வாய்ப்பு உங்களைத் தேடி வரும்!''

கலகலவெனச் சிரிக்கிறார் மதுமிதா.

•  பலரும் 'எனக்கு இன்னொரு முகம் இருக்கு’னு சொல்வாங்கள்ல... அது?

•  சினிமாவுல பெண்கள்?

•  'ஓய்வு நேரம்’ கிடைச்சா... ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விஷயத்தை சந்தோஷமா செய்வாங்க. ஆனா, நான்?

•  ஹாய் யங்ஸ்டர்ஸ்... நான் உங்களுக்கு ஒரு குட்டிக் கதை சொல்லப்போறேன். அது?

•  ஒரு காமெடிக்கு பின்னாடி இருக்குற இன்னொரு காமெடி?

- இப்படி இன்னும் பல விஷயங்களைத் தனக்கே உரிய நகைச்சுவை மொழியில் பேசுகிறார் மதுமிதா. கேட்டு சந்தோஷிக்க, தினம் மூன்று நிமிடம் ஒதுக்குங்கள். மகிழ்ச்சி கியாரன்டி!

நவம்பர் 25 முதல் டிசம்பர் 1 வரை மூன்று நிமிடங்களை ஒதுக்குங்கள்...

இந்த எண்ணுக்கு ஒரு போன் போடுங்கள்.

* சாதாரண கட்டணம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism