Published:Updated:

டயலாக்

‘சுண்டல்லுக்கே சுரண்டுகிறான்!’

திருவையாறு

தேரடியில் இருவர்...

டயலாக்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''தம்பி, உங்களுக்கு வாத்தியார் வேலை கிடைச்சிருக்குனு கேள்விப்பட்டேன்!''

''ஆமாங்க. அரியலூர் பக்கத்திலே ஒரு கிராமத்து ஸ்கூல்ல போஸ்ட்டிங் போட்டிருக்காங்க.''

''வாத்தியார் வேலை கிடைக்கிறது எவ்வளவு பெரிய விஷயம்? என்கிட்டே சொல்லவே இல்லையே!''

''தமிழ்நாட்டுக்கு முதலமைச்சர் ஆனவரே, தான் முதலமைச்சர் ஆனதை யார்கிட்டேயும் சொல்லமாட்டேங்கறாரு. வாத்தியார் வேலை கிடைச்சதைப் போய் ஊருக்கெல்லாம் சொல்லிக்கிட்டிருக்க முடியுமா?''

''உன் பதில் சரிதான். என்கிட்டே சொன்னமாதிரி வேற யார்கிட்டேயும் சொல்லிடாதே. கேட்கக் கூடாதவங்க காதிலே கேட்டுச்சுன்னா கிடைச்ச வேலைக்கு வேட்டு வெச்சிடப் போறாங்க!''

(ஆசிரியர் முகத்தில் அதிர்ச்சி படர்கிறது.)

எஸ்.இராஜேந்திரன், கபிஸ்தலம்.

காரைக்குடி

பேருந்து நிறுத்தத்தில் இரு கல்லூரி மாணவிகள்...

''ஏதுடி... இந்தப் புது மோதிரம்?''

''என் பாய் ஃப்ரெண்ட் வாங்கிக் கொடுத்தான்.''

''ம்... எனக்கும்தான் வாய்ச்சிருக்கு. சுண்டலுக்குக்கூட என்னையே சுரண்டுறான். எல்லாத்துக்கும் கொடுப்பினை வேணும்!''

(அங்கலாய்க்கிறாள்.)

பெ.பாண்டியன், காரைக்குடி.

கொங்கணாபுரம்

டாஸ்மாக் பார் ஒன்றில் இருவர்...

''மாப்ளே நேத்து எங்கடா ஆளையே காணோம்?''

''பொண்ணு பார்க்க ஆத்தூருக்கு போயிருந்தேன்டா!''

''பொண்ணு எப்படி, பிடிச்சிருக்கா?''

''பொண்ணு நல்லா அம்சமா, தீபிகா படுகோன் மாதிரி இருக்கா. ஆனா அவளுக்குத்தான் என்னைப் பிடிக்கல!''

''கரெக்ட்தாண்டா. தீபிகா படுகோன் மாதிரி இருக்கிற அவளுக்கு, தீய்ஞ்ச பக்கோடா மாதிரி இருக்கிற உன்னை எப்படி பிடிக்கும்?''

''நெஜமாவா சொல்ற மாப்ளே?''

''நிச்சயமா. பின்னாடி திரும்பி பாரேன். உன்னை நாய்க்குக்கூட பிடிக்கலை. அரை மணி நேரமா உன்னை பார்த்து 'உர்...உர்’னு கறுவிக்கிட்டு இருக்குது!''

(திரும்பிப் பார்த்த பக்கோடா பார்ட்டி அலறியபடி எழுந்து நகர்கிறார்.)

வே.செந்தில்குமார், கொங்கணாபுரம்.