நடப்பு
ஸ்பெஷல்
Published:Updated:

பத்து வருடப் பயணம்... லைக் வாங்கிய ஃபேஸ்புக்!

பத்து வருடப் பயணம்... லைக் வாங்கிய ஃபேஸ்புக்!

காலையில் எழுந்ததும் காபி குடிக்கிறோமோ இல்லையோ, நேற்று இரவு ஃபேஸ்புக்கில் போட்ட ஸ்டேட்டஸுக்கு எத்தனை ‘லைக்’ விழுந்திருக்கிறது என்று பார்த்துவிட்டுதான் வேலையைத் துவங்கும் நிலைக்கு வந்துவிட்டோம். இப்படிப்பட்டதொரு நிலையை உருவாக்க ஃபேஸ்புக் நிறுவனம் மேற்கொண்ட முயற்சிகள் எண்ணற்றவை.

பத்து வருடப் பயணம்... லைக் வாங்கிய ஃபேஸ்புக்!

2003-ம் ஆண்டு ஹார்வர்டு பல்கலைக்கழகத்துக்குள் உள்ளவர்கள் ஒருவரோடு ஒருவர் தொடர்பில் இருக்கும்படியான ஃபேஸ்மேஷ் என்ற புரோக்ராமை எழுதினார் மார்க் ஜூக்கர்பெர்க். இதை  எல்லோரும் பயன்படுத்துகிற வகையில் ஃபேஸ்புக் என்கிற பெயரில் 2004, பிப்ரவரி 4-ம் தேதி தொடங்கினார். இணையத்தில் உலாவுகிறவர்கள் அதுவரை பார்த்திராத புதிய அப்டேட்டுகளை வழங்கி தனது வாடிக்கையாளர்களைக்  குதூகலப்படுத்தியது. ஒருவர் வெளியிடும் தகவல்களை லைக் செய்வது, கமென்ட் செய்வது, ஷேர் செய்வது என பலவிதமான அப்டேட்களையும் வழங்கியது ஃபேஸ்புக்.

2012-ம் ஆண்டு பங்குச் சந்தையில் பட்டியிலிடப்பட்டு ஒரு பங்கு 38 டாலர் என்று மதிப்பிடப்பட்ட ஃபேஸ்புக் 16 பில்லியன் நிதியைத் திரட்டி மாபெரும் வெற்றியை கண்டது. ஆரம்பத்தில் அரட்டையடிக்க மட்டுமே பயன்பட்டுவந்த  ஃபேஸ்புக், தனது தொழிலை விரிவுபடுத்த தனி பிசினஸ் பக்கங்களையும் அறிமுகம் செய்தது. இன்றைக்கு பொருட்களை விற்க பெரிய அளவில் விளம்பரம் செய்யாமல் ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போட்டாலே போதும் என்ற அளவுக்கு நிலைமை மாறியிருக்கிறது.

தற்போது எல்லோரும் ஸ்மார்ட் போனுக்கு மாறிவரும் நேரத்தில் வாட்ஸ் அப் என்னும் ஆப்ஸை வாங்கி தனது அப்டேட்டை நிரூபித்து உள்ளது. உலக தொழில்நுட்ப மாறுதலுக்கேற்ப தன்னை மாற்றிக்கொண்டுவரும், இணையதள ரசிகர்களிடம் கொழுத்த ‘லைக்’ வாங்கி, தனது  பயணத்தை வெற்றிகரமாகத் தொடர்கிறது.